திங்கள், 20 ஏப்ரல், 2020

மஸ்ஜிதுகளில் பேண வேண்டிய ஒழுக்கங்கள்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. 

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக. நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.


எனது பெயர் ................................................

நான் மஸ்ஜிதுகளில் பேண வேண்டிய ஒழுக்கங்கள் என்ற தலைப்பில்  பேச வந்துள்ளேன்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....


(உலகில் மிகச்சிறந்த இடங்கள் அல்லாஹுதஆலாவிற்கு மிகவும் பிடித்தமான இடங்கள் மஸ்ஜிதுகள் தான் பள்ளிவாசல் என்பது மற்ற இடங்களைப் போன்றதல்ல மஸ்ஜிதில் இருக்கும் போது நாம் ஒழுக்கம் பேண வேண்டும். மஸ்ஜிதுகளில் பேண வேண்டிய ஒழுக்கங்கள் ஏராளம் உள்ளன. அவைகளைப் பேணி நடக்கும் போது தான் முழுமையான பலன்களை அடைய முடியும். முதலாவது.

1. வீட்டில் ஒளுச் செய்துவிட்டு கம்பீரத்துடன் வேகமன்றி அமைதியாக மஸ்ஜிதிற்கு வர வேண்டும்

2. பூண்டு, வெங்காயம், (சிகரெட்) போன்றவற்றை உபயோகித்தவர் அதன் துர்வாடை செல்வதற்கு முன் மஸ்ஜிதிற்குள் நுழையக் கூடாது.

3. பகுத்தறிவு பெறாத (ஏழு வயதிற்கு கீழுள்ள) சிறுபிள்ளைகளையும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் மஸ்ஜிதிற்கு அழைத்து வரக்கூடாது

4. வலது காலை மஸ்ஜிதிற்குள் வைத்து நுழைய வேண்டும்.

5. மஸ்ஜிதிற்குள் நுழையும் போது ஓதும் துஆ பிஸ்மில்லாஹி வஸ்ஸலாமு அலா ரசூலுலில்லாஹி அல்லாஹும்ம ங்ஃபிர்லீ
துனூபி வஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக என்று ஓத வேண்டும்

6. மஸ்ஜிதிற்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத் தஹிய்யதுல் மஸ்ஜிது தொட கொள்ளவேண்டும்

7. இஃதிகாஃப் நிய்யத் செய்து கொள்ள வேண்டும்

8. தொழுபவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படாதவண்ணம் திக்ரு மற்றும் குர்ஆன் ஓதுதல் போன்ற அமல்களில் ஈடுபட வேண்டும்

9. மஸ்ஜிதை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்

10. மஸ்ஜிதை நறுமணமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

11. ஸஃப்புகளை நேராகவும், நெருக்கமாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்

12. முதல் ஸஃப்பில் நிற்க முயற்சிக்க வேண்டும்

13. ஒரு ஸஃப்பை பூர்த்தி செய்யாமல் அடுத்த ஸஃப்பில் நிற்கக் கூடாது

14. சிறுவர்களை கடைசி ஸஃப்பில் நிறுத்த வேண்டும்.

15. தொழுபவருக்கு குறுக்கில் செல்லக் கூடாது

16. மஸ்ஜிதிற்குள் காற்றை வெளியாக்கக் கூடாது

17. மஸ்ஜிதிற்குள் உலகப் பேச்சை பேசக்கூடாது.

18. மஸ்ஜிதிற்குள் கொடுக்கல், வாங்கல் செய்வது கூடாது.

19. பாங்கிற்கு பிறகு மஸ்ஜிதைவிட்டு வெளியேறக்கூடாது.

(ஏதேனும் தவிர்க்க முடியாத நிர்பந்தம் இருந்தாலோ, தூரபயணம் புறப்படும் நேரமாக இருந்தாலோ அல்லது அடுத்த மஸ்ஜிதில் அதே தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்காக வெளியில் செல்லலாம்.

20. விரல்களை நெட்டி முறிக்கக்கூடாது

21. மஸ்ஜிதிற்குள் சண்டை சச்சரவு செய்வதையும், தர்க்கம் செய்வதையும் சப்தமிட்டு பேசுவதையும் நபி ஸல் அவர்கள் வன்மையாகத் தடுத்துள்ளார்கள்

22. மஸ்ஜிதிற்குள் தண்டனை வழங்குவது. ஆயுதங்களை ஏந்துவதும் கூடாது

23. வேறிடத்தில் காணாமற்போன பொருளுக்காக மஸ்ஜிதில் அறிவிப்பு
செய்யக் கூடாது

24. எச்சிலையும், சளியையும் மஸ்ஜிதில் துப்பக்கூடாது.

25. மஸ்ஜிதில் நுழைந்தவுடன் மக்கள் எந்த அமலிலும் ஈடுபடாமலிருந்தால் அவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டும். அமலில் ஈடுபட்டிருந்தால் (அஸ்ஸலாமு அலைனா மிர் ரப்பினா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்) என்று கூறிக் கொள்ள வேண்டும்.

26. இடது காலை வெளியில் வைத்து வெளியேற வேண்டும்.

27. மஸ்ஜிதைவிட்டு வெளியேறும் போது பிஸ்மில்லாஹ்வையும் நபியின் மீது சலவாத்தையும் (பிஸ்மில்லாஹி வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் என்று) கூற வேண்டும்

28. மஸ்ஜிதை விட்டு வெளியேறும் போது"அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக மின் ஃபழ்லிக" என்று ஓத வேண்டும்

29. மஸ்ஜிதை விட்டு வெளியேறுபவர்கள் விரையில் பள்ளிக்கு திரும்பும் எண்ணத்தில் வெளியேற வேண்டும்

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே.....

30. அல்லாஹுதஆலா குர்ஆனில் கூறுகிறான்.

 وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
மஸ்ஜிதுகள் அல்லாஹ்வின் வீடாகும். அவன் தான் அதன் உரிமையாளன் (அல்குர்ஆன் 72:18)

எனவே அவனுடைய பொருட்களை வீணாக்குவதும் சுய தேவைக்கு எடுத்து செல்வதும் நரக நெருப்பை தேடிக் கொள்வதாகும்.

எனவே அல்லாஹ்வும் ரசூலும் எவ்வழியில் வாழச்சொன்னார்களே.. அவ்வழியில் வாழ்ந்து அவனது அன்பையும் அருளையும் பெறுவோமாக

எனக்கு இங்கு பேச வாய்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரகாத்துஹு.

தொகுத்வர்: மெலானா ஷாஹ் அப்துல் ஹமீது காஷிஃபி
பேராசிரியர்-அல்மத்ரஸதுர் ரப்பானிய்யா
அரபிக்கல்லூரி-ஆவடி

மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக