சனி, 19 செப்டம்பர், 2015

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்...!






புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில்
நடந்து கொண்டிருந்தனர்..!!
திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது..!!
அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள். நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர்
தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார்.

நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும்
தன் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார்..!!
ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்தும் திரும்பி சென்றது..!!
பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை
பொழிவாள் என்று எதிர் பார்த்தார்..!!
அடுத்த கனமே மனைவி கோபத்துடன் "எல்லோரும்
நாய் வந்தா கல்லை தூக்கி எறிவார்கள். ஆனால்
தன் மனைவியே தூக்கி எறியும் கணவனை
இப்பதான் பார்க்கிறேன்." என்றாள்..!!
 

நீதி: கணவன் என்னதான் நல்லது செய்தாலும்
தன் மனைவிக்கு அது தப்பா தான் தெரியும்..!!





உங்கள் கணவரை நேசியுங்கள்!
அடிக்கடி டீயோ, காபியோ
கேக்குறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை
புத்துணர்ச்சியுடன் கேட்க
விருப்புகிறார் என்று
அர்த்தம்.
மற்ற அழகான பெண்களை
பார்க்கிறாரா?
என் பொண்டாட்டிய விட அவ
என்ன அழகான்னு செக்
பண்றார்னு அர்த்தம்.
உங்கள் சமையலை குறை
கூறிக்கொண்டே
இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன்
கூடிக்கொண்டே போகிறது
என்று அர்த்தம்.
இரவில் குறைட்டை விட்டு
உங்கள் தூக்கத்தை
கெடுக்குறாரா?
உங்களை மணந்தபின் தான்
நிம்மதியாக உறங்குகிறார்
என்று அர்த்தம்.
உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு
வாங்கி தரவில்லையா?
உங்கள் எதிர்காலத்துக்கு பணம்
சேமித்துவைக்கிறார் என்று
அர்த்தம்.
நேசித்தே ஆகவேண்டும்
உங்களுக்கு வேற வழியும்
இல்லை.
ஏனென்றால்.........
கணவனை
கொல்வது
சட்டப்படி குற்றம்.



ஒருகணவன் காலைல மனைவியிடம் இன்று நல்ல நாள்'ங்கறான்...?
மனைவியும் அவனைப் பார்த்து சிரித்துவிட்டு அவள் வேலையை பார்த்துட்டு இருக்கிறா..!
இப்புடியே மூணுநாள் காலைல நடக்குது...!
மூணாவது நாள் பொறுக்க மாட்டாம மனைவி அதுக்கு இப்ப என்னான்னு திருப்பி கேக்குறா...?
அதுக்கு அவ கணவன், இல்ல, போனவாரம் நீ என்னோட சண்ட போட்டப்ப,
"
ஒரு நல்ல நாளாப் பாத்து ஒங்கள உட்டுட்டு போயிடுவேன்னியே"...? அது தான் ஒனக்கு ஞாபகப் படுத்துறேன்னானாம்...!!!


 


2 கருத்துகள்: