وَالْفَجْرِ * وَلَيَالٍ عَشْرٍ
قال ابن
عباس - رضي الله عنه -: "إن الليالي العشر التي أقسم الله بها هي ليالي العشر
الأول من ذي الحجة"،
இறைவன் படைத்த நாட்கள் யாவும் சிறப்புக்குரியவையாகும். அவற்றுள் அடியார்கள் வணக்கங்கள் புரிந்து அதன்முலம் மாண்பைபெற்ற சில நாட்களை இறைவன் சிறப்பித்துஉள்ளான் , ஏனைய சமுதாய மக்களின் வாழ்நாட்களை ஒப்பிடும்போது நமது ஆயுள் மிகவும் குறைவானதாகும் . நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
"எனது சமுதாய மக்களின் ஆயுட்காலம் அறுபது முதல் எழுபது வயது வரையாகும் " ( தீர்மதி , இப்னு மாஜா )
இந்த மணிவாசகம் மிகவும் சிந்திக்கதக்கதாகும் . எனவே குறைந்த ஆயுளில் நிறைந்த ஆயுளின் மாண்பைப்பெற , முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் சமுதாய மக்களுக்கு இறைவன் புரிந்துள்ள மாபெரும் அருட்கொடைகளே சிறப்புக்குரிய சில நாட்கள் ! அத்தகைய நாட்களில் தலையாவது ரமளானின் லைலத்துல் கத்ரு எனும் இரவு . இது ஆயிரம் மாதங்கள் வணக்கம் புரிவதை விட சிறந்தது என்று அல்குர்ஆனில் சூரா கத்ர் மூலம் அல்லா தெளிவுபடுத்தியுள்ளான் .
அந்த வரிசையில் வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தங்களை பெற்றுத்தரவல்ல புனிதமிக்க நாட்களே துல்ஹஜ் மாதத்தின் முதல் 13 நாட்கள் ஆகும். ஹஜ்ஜுடைய கிரியைகள் அனைத்தும் இந்த 13 நாட்களினுள் அடங்கியுள்ளது . இந்நாட்களில் ஹஜ் நிய்யதுடைய ஹாஜிகள் ஒவ்வொரு செயலும் வணக்கங்களாகும் . அவர்களுக்கு மட்டும்மல்லாது ஹஜ்ஜிக்கு செல்லாத என்னைய இஸ்லாமிய பெருமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வல்ல அல்லாஹ்வால் சிறப்பித்து கூறப்பட்ட இந்நாட்களில் செய்ய வேண்டிய நல் அமல்களை அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் நமக்கு செயல்படுத்தி காட்டியுள்ளார்கள் . இந்நாட்கள் துள் ஹஜ் மாதத்தின் தலைப்பிலிருந்து ஆரம்பம் ஆகின்றது .
துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்
முதலில் 'அய்யாமு அஷ்ரு தில்ஹிஜ்ஜா ' ( துல்ஹஜ்ஜின் முதல் பாத்து நாட்கள் )மிகவும் முக்கியமான நாட்களாகும் . அல்லாஹ் வான்மறை அல்குர் ஆனில் ...
" வல்ஃபஜரி வலயாலின் அஷ்ர் " என்னும் 89 :2 வசனத்தில் பத்து இரவுகளின் மீது ஆணையாக !" என ஆணையிட்டுக் கூறுவதும் , " வயத்குரு ஸ்மல்லாஹி ஃபீ அய்யாமின் மஃலூமாத்தின் " ஹஜ்ஜின் குறிப்பிட்ட நாட்களில் இறைவனை நினைவு கூறுவது (22 : 28 )
என்ற வசனமும் துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களையே குறிக்கின்றன என குர் ஆனின் விரிவுரையாளர்களில் இப்னு உமர் ( ரலி ) , இப்னு அப்பாஸ் ( ரலி ) போன்ற நபிதொழர்களும் , இமாம் இப்னு கதிர் போன்ற இமாம்களும் குறிப்பிடுகின்றனர் , இந்த நாட்களை பற்றி நபி ( ஸல் ) அவர்கள் குறிப்பிடுகையில் ....
" உலக நாட்களில் இந்த துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களை விட மாண்புக்குரியது வேறு எதுவுமில்லை " எனக் கூறியபோது இறைவழியில் அறப்போர் செய்வதைவிடவா ?' என நபிதோழர்கள் கேட்டார்கள் . " ஆம் போர் புரிவதை விடவும் தான் " என பதிலளித்துவிட்டு ," இறைவழியில் தனது உயிர் , பொருளைத் தியாகம் செய்து அறப்போர் புரிந்து திரும்பி வராதவரைத் தவிர " என்றார்கள் நபியவர்கள் .( அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் ( ரலி ) நூல் : புகாரி 969 )
" உலகம் தோன்றிய நாட்களிலேயே மிகவும் சிறப்புக்குரிய நாட்கள் துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களாகும் " என நபி ( ஸல் ) அவர்கள் கூறுவதிலிருந்தே அதன் மாண்பைப் புரிந்து
அரஃபா நாள்
இந்த புனிதமிக்க மாதத்தில் 9 வது நாளாக வருவது தான் " யவ்முல் அரஃபா "எனும் அரஃபா தினமாகும் . புனிதமிக்க மக்காவின் அரஃபா பெருவெளியில் ஹாஜிகள் அனைவரும் சங்கமிக்கும் நன் நாள் .இந்நாளில் பாவங்களுக்கு மணிப்பும் , நரக விடுதலையும் கிடைக்கும், உயரிய நாள் என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :-
"அல்லாஹ் தனது அடியார்களை நரகிலிருந்து அதிகமா விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும் , இதைவிட வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை , இந்நாளில் இறைவனே இறங்கி வந்து எனது அடியார்கள் என்ன விரும்புகிறார்கள் ?( கேட்பதை கொடுப்பதற்கு சித்தமாக உள்ளேன் )என அமரர்களிடம் பெருமையோடு கூறிக்கொள்வான்" ;
அறிவிப்பவர் : அன்னை ஆய்ஷா ( ரலி ) நூல் : முஸ்லீம்
அரஃபா நாளில் நோன்பு
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :-
அரஃபா நாளில் நோன்பு நோற்பது முந்தைய ஒரு வருடத்தின் பாவங்களையும் , பிந்தைய ஒரு வருடத்தின் பாவங்களையும் மன்னிக்கப்படும் " ( அறிவிப்பவர் : அபூ கதாதா அல் -அன்சாரி ( ரலி ) ஆதாரம் : முஸ்லீம்
நபி (" ஸல் ) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாவது நாளிலும் , அஷுரா ( முஹர்ரம் பத்தாவது )நாளிலும் , ஒவ்வொரு மாதமும் அய்யாமுல் பீல் என்னும் 13 ,14 ,15 வது நாட்களில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்
( அறிவிப்பவர் : ஹுனைத இப்னு காலித் ( ரலி ) ஆதாரம் : அஹ்மது , அபுதாவுது , நஸாயீ )
நபி ( ஸல் ) அவர்கள் நான்கு நற்செயல்களை எப்போதும் விடுவதேயில்லை ,
· துல்ஹஜ் ஒன்பதுவாது நாளில் நோன்பு நோற்பது
· ஆஷுரா ( முஹர்ரம் பத்தாவது )நாளில் நோன்பு நோற்பது
· ஒவ்வொரு மாதமும் அய்யாமுல் பீல் என்னும் 13 ,14 ,15 வது நாட்களில் நோன்பு நோற்பது
· ஃபஜ்ருத் தொழுகைக்கு முந்திய இரு ரகஅத்கள் சுன்னத் தொழுவது
( அறிவிப்பவர் : அன்னை ஹபாஸா ( ரலி ) ஆதாரம் அஹ்மது அபூ தாவுது )
தொகுப்பு
barakathmanzil@gmail.com
தொகுப்பு
barakathmanzil@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக