அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மஸ்ஜிதே நபவியில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். அதுசமயம் , சல்மான் ஃ பார்சீ [ரலி] அவர்கள் அங்கு வந்து, அண்ணலார் [ஸல்] அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! நான் தங்கள் அருமை மகளார் ஃபாத்திமா [ரலி] அவர்களின் வீட்டின் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது.'' என்று கூறினார்கள்.
உடனே நபி [ஸல்] அவர்கள் தம் மகளார் வீட்டிற்கு விரைந்தார்கள். வீட்டில் ஃபாத்திமா [ரலி] அவர்கள் அழுது கொண்டிருந்தனர். அண்ணலார் [ஸல்] அவர்கள் தம் மகளாரிடம் அழுகைக் காரணத்தைக் கேட்டனர்.
மகளார்: ''அன்புள்ள தந்தையே! நானும் எனது கணவரும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தோம்,, விளையாட்டு வினையாகிவிட்டது. பேச்சுனூடே என் கணவர் '' பெண்கள் ஷைத்தான்களாவர் .. உங்களை எங்களுக்காக படைக்கப்பட்டது,, நாங்கள் அந்த ஷைத்தான்களின் தீங்கை விட்டும் அல்லாஹ் விடத்தில் காவல் தேடுகிறோம். '' என்று கூறினார்கள் .
நான் உடனே, ''நிச்சயமாக பெண்கள் ரைஹான் இலைகளைப் போன்றவர்கள்,, அவைகளை உங்களுக்காக படைக்கப்பட்டது,, நீங்கள் எல்லாம் ரைஹான்களை முகர்ந்திட ஆசைப்படுகின்றீர்கள் .'' என்று பதில் கூறினேன். இச் சொல் என் கணவரின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டது. உடனே அவர்கள் வீட்டை விட்டும் புறப்பட்டு விட்டார்கள்,, எனவே தான் அழுது கொண்டிருக்கிறேன்.''
மகளாரின் மொழி கேட்டு அண்ணலார் [ஸல்] அவர்கள் மருகர் அலீ [ரலி] அவர்களைத் தேடித் புறப்பட்டார்கள். கடை வீதி, பள்ளி வாசல் முதலிய இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், ஜன்னத்துல் பகீ உ , என்னும் கப்ருஸ்தானில் அலீ [ரலி] அவர்களை கண்டார்கள்.
அது சமயம் அலீ [ரலி] அவர்கள் , ஒரு பாழடைந்த கப்ரில் ஓர் ஈச்சமரத்தின் கீழ், தலைக்கு மண் கட்டி ஒன்றை வைத்தவர்களாக, ஆழ்ந்த சிந்தனையில் படுத்திருந்தார்கள். வீட்டில் அமைதி குலைந்து விட்டால் மண வாழ்க்கையும் மண்ணறை போன்றுதானே!
அண்ணலார் [ஸல்] அவர்களின் அருகில் சென்று,
''யா அபுத்துராப்,
கல் என்ன சொல்கிறது? '' எனக் கேட்டார்கள்.
அண்ணலாரின் குரல் கேட்டு துள்ளி எழுந்தார்கள் அலீ [ரலி] அவர்கள். அவர்களைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.
வீட்டின் வாய்ற்படியருகே வந்து, ''அஸ்ஸலாமு அழைக்கும் யா ஃபாத்திமா ! உனது தந்தையும் , கணவரும் வந்திருக்கின்றோம். உள்ளே வரலாமா?'' என அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே சென்றனர்.
தமது மகளாரை விளித்து, ''மகளே! உனது பேச்சால் புண்பட்டுப் போயிருக்கும் உன் கணவரிடம் மன்னிப்புக் கேள் .'' என்றார்கள் . பாத்திமா [ரலி] அவர்கள் தனது கணவராம் அலீ [ரலி] அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.
தமது மகளைப் பார்த்து ''மகளே! உன்னுடைய கணவர் உன் மீது அதிருப்தி கொண்டநிலையில், உனக்கு மரணம் நேரிட்டிருக்குமாயின் நீ சுவனத்தின் மணத்தைக் கூட முகர்ந்திருக்க முடியாது போயிருப்பாய்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான் .'' எனக் கூறிவிட்டு சென்றார்கள்.
சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள், நம் குடும்பத்தில் கணவர் மனைவியர்களிடையே கசப்புணர்ச்சிகள் , சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அந்நிலையில் எம்முறையில் நாம் நடந்து கொள்கிறோம்?
'' அவன் கிடக்கிறான் வெறும்பயல். நீ வீட்டிற்கு வந்துவிடும்மா ? உண்ண உணவும் , உடுத்த உடையும் உனக்கு இல்லையென்றா அவன்தலையில் கட்டினோம்? நீ இங்கேயே இருந்துவிடு. சோறும், துணிமணிகளும் நாங்கள் தருகின்றோம். அவனோடு வாழ்ந்து போதும் .''
இவ்வாறெல்லாம் சில பெற்றோர்கள் தம் பெண்மக்களுக்கு நசீஹத்து செய்து, அவள் செய்துவிட்ட தவறுகளை அவள் உணர முடியாமலே செய்துவிடுவதுடன் , அவளது மணவாழ்க்கையையும் வீணடித்து விடுகின்றனர்,, அது மட்டுமின்றி, அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உரியவளாகவும் அவளை ஆக்கிவிடுகின்றனர்
ஆனால் , அகிலத்திண் அருட்கொடை அண்ணல் நபி [ஸல்] அவர்களோ எல்லாவற்றுக்கும் முன்மாதரியாக திகழ்ந்த காரணத்தால், சுவர்க்கத் தலைவி என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்தும், தனது மகளாரின் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் , மணாலரிடம் மன்னிப்புக் கேட்கச் செய்து, அவ்விருவரின் வாழ்க்கையையும் மனமுள்ள வாழ்க்கையாக மாற்றி அமைத்து நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்..
அல்லாஹ் மிக்க அறிந்தவன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக