இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது உறவினர்களே!
நடுவரவர்களே!
ஒரு காலம் இருந்தது. அந்த காலத்திலே மனிதன் இலைகளையும், தழைகளையும் உண்டு வந்தான். ஆனால் காலத்தினுடைய சூழல்ச்சியின் காரணமாக பல அருசுவையான உணவுகளை உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அதுபோன்று ஒரு காலம் இருந்தது மனிதன் இலைகளையும், தழைகளையும் ஆடைகளாக அணிந்து வாழ்ந்து கொண்டு இருந்தான். பிறகு ஒரு காலம், இப்ப இருக்கிறது. நாகரீக உடையிலே உடையணிந்து அழகாக காட்சி தரக்கூடிய நிலையிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதுபோன்று ஒருகாலம் இருந்தது. மனிதன்; குகைளிலே வாழ்;ந்து கொண்டு இருந்தான். ஆனால் இன்ற நாகரீகத்தின் உச்சியிலே அழகான மாளிகையிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.
இதை நான் எதற்கு சொல்ல வருகிறேன் என்றால்...
ஒரு காலம் இருந்தது உறவு என்பது இன்பமாக இருந்தது; உறவு என்பது மகிழ்ச்சியாக இருந்தது; உறவு என்பது சந்தோஷத்தை வழங்க கூடியதாக இருந்தது. அதனால் தான் ஹழ்ரத் லூத் (அலை) தம் சமுதாயத்திலே மார்க்க பிரச்சாரம் செய்கிற அந்த நேரத்திலே அந்த மக்களுடைய பல இன்னல்களுக்கு ஆளான அந்நேரத்திலே அந்த நபியவர்கள் சொன்னார்கள்.
லவ் அன்னலீ பிக்கும் குவ்வத்தன் அவ்ஆவி இலா ருக்னின் ஷதீத் அவர்களை தடுக்க எனக்கு சுயமான சக்தி இருக்க வேண்டியிருந்ததே! அல்லது வலுவான ஆதரவு சொந்தபந்தங்கள் இருக்க வேண்டியிருந்ததே! என கவலைப்பட்டார்கள். ஒரு நபி தன் சேவைக்கு உறுதுணையாக ஒரு சொந்தம் கூட இல்லையே என ஒரு நபி கவலைப்பட்டார்கள்..
ஹழ்ரத் ஷுஐப் (அலை) வாழ்வை நாம் பார்க்கிறோம் ஹழ்ரத் ஷுஐப் (அலை) அவர்கள் ஒரு மிகப் பெரிய சொந்த பந்தமுடையவர்கள்.
லூத் (அலை) அவர்கள் சொந்த பந்தம் இல்லாததினால் கவலைப்பட்டார்கள் ஹழ்ரத் ஷுஐப் (இலை) அவர்கள் மிகப்பெரும் சொந்தபந்தங்களை உள்ளடக்கியவர்கள்.
அதன் காரணமாக ஏகத்துவ பிரச்சாரம் செய்கிற போது அந்த மக்கள் சொன்னார்கள். வஇன்னா லனராக்க ஃபீனா ழஈஃபா உம்மை எங்களில்
பலகீனமானவராகத்தான் பார்க்கிறோம். உம்முடைய சொந்தம் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் உம்மை கல்லால் அடித்து கொன்று இருப்போம் என்றனர்.
ஒரு நபிக்கு அந்த நல்ல சேவை செய்ய உதவியாக இருந்தது அன்றைய சொந்தபந்தம் ஆனால் இந்தகாலம் எப்படி தலைகீழாக மாறிவிட்டது தெரியுமா?
எலிவலையானாலும் தனிவலைதாங்க நல்லது.
வாழ்கிற கொஞ்ச கால நிம்மதியையும் கெடுப்பவர்களாக சொந்தபந்தங்கள் தான்
இருக்கிறார்கள்.
கணவன் மனைவி மூலம் கூட பிரச்சனை ஏற்பட்டால் தனியாக ஒரு 5நிமிடம் பேசினால் சமாதானமாகிவிடுவார்கள். ஆனால் கூட இருக்கிறான் பாருங்க சொந்தபந்தம்; விடமாட்டார்கள்.
இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாழக்கூடாது என்ற பிடிவாதத்திலே இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பவர்கள் சொந்தபந்தங்களே என பேச
வந்துள்ளேன்.
அன்பானவர்களே!
ஒரு இல்லற வாழ்விற்கு இடையூறாக இருப்பவர்கள் உறவினர்கள் தான்.
அவர்களில் ஒரு நான்கு நபர்களை பற்றி மட்டுமே பேச வந்துள்ளேன்.
ஏனென்று சொன்னால் ஒவ்வொருவர்களையும் பேசுவதாக இருந்தால் அது ஒரு நீண்ட விவாதமாகிவிடும். எனவே ஒரு இல்லற வாழ்விற்கு இடையூறாக இருக்கிற ஒரு 4 வில்லர்களைப் பற்றி பேச இருக்கிறேன்.
முதலாவது மாமனார்
2-வது மாமியார்
3-வது நாத்தனார்
+வது கொழுந்தனார்
இந்த 4பேர் சேர்ந்தாங்கன்னு வைய்யுங்க முடிஞ்சு போச்சு எப்படின்னா.. ஒழுவுடைய ஃபர்ளு 4 இருக்கிறது. அதில் ஏதாவது ஒன்று சரியாக செய்யாவிட்டாலும் ஒழு கூடாது.
அது மாதிரி இந்த 4பேரிலே ஒரு ஆள் இந்த சொந்தம் மகிழ்ச்சியாக இருக்ககூடாது என நினைத்து விட்டாங்கன்னு வைங்க அந்த குடும்பமே சீரழிந்து சின்னா பின்னாமாகி விடும்.
முதலாவது மாமனார் இந்த மாமனார் இந்த இனிய இல்லறத்திற்கு எவ்வாறு இடையூறாக இருக்கிறார் என்பதை நான் உங்களுக்கு முதலிலே கூற விரும்புகிறேன்.
முதலாவதாக அந்த மாமனார் எவ்வாறு இருக்கனும் தெரியுமா? ஆண்கள் தான் பெண்களை நிர்வாகம் செய்கிறார்கள் என அல்லாஹ்வே சொல்கிறான், ஆனால் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொன்னால் முதலாவதாக பொருளாதார ரீதியிலே இல்லற வாழ்விற்கு இடையூறாக இருக்கிறார். முதலாவது குற்றச்சாட்டை நான் பதிவு செய்கிறேன்.
மாமனார் இல்லற வாழ்விற்கு பொருளாதார ரீதியிலே இடையூறாக இருக்கிறார்.
எப்படி இடையூறாக இருக்கிறார் தெரியுமா? முதலாவதாக நிக்காஹ்வுக்கு முன்னாலேயே அவரது வேலையை ஆரம்பித்து விடுகிறார். நிக்காஹ்வுக்கு முன்பே தம் மகனை பேரம் பேசக் கூடிய விஷயத்திலே மாமனார் இறங்கிவிடுகிறார்.
அதன் காரணமாகத்தான் நபியவர்களே சொன்னார்களே: ஒரு பெண் என்பவள் நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறாள் அதில் முதல் காரணத்தை நபி சொல்கிற பொழுது பணத்திற்காகவும் வேண்டி திருமணம் செய்யப்படுகிறாள் என்று நபியவர்கள் சொன்னார்கள். எனவே முதலாவது விஷயம் இருக்கிறதே...மாமனார் பொருளாதார விஷயத்திலே சிரமத்தை ஏற்படுத்துகிறார் குடும்ப மகிழ்ச்சியை கெடுக்கிறார் எப்படி தெரியுமா? ஒரு ஜமாஅத்திலே சிலமாதத்திற்குமுன் ஒரு நிக்காஹ் நடக்கிறது. அதில்
நிச்சயதார்த்தம் அன்று அந்த மாமனார் என்ன பேசினார் தெரியுமா?
நீங்க வரதட்சணை 80 ஆயிரம் ரூபாய் தந்திடுங்க! ஏங்க என பெண்வீட்டுகாரர் கேட்டார்? வீடு வேறு கட்டியும் கட்டாமலும் இருக்கிறது. அதற்கு இன்ஜினியர் ஒரு 80 ஆயிரம் தேவை என்று சொன்னார். அதனால் 80 ஆயிரம் முதலிலே தாருங்க! என கேட்கிறாரு ஆக சிலமாமனார்கள் பணத்தை பேதம் பேசுகிறார்கள். சில மாமனார்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? ஆண் வாரிசே இல்லாத இடத்திலே பெண் பார்க்கனும் என நினைக்கிறார் குறியாக இருக்கிறார். என் வாழ்க்கையிலே அப்படி ஒருவரைப் பார்த்துள்ளேன். அவருக்கு 3மகன்கள உண்டு. 100பவுன், 1லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஒரு சம்பந்தம் வருகிறது. அவர் கூறுகிறார். அதெல்லாம் எனக்கு வேணாம். பெண் கூட பிறந்த சகோதரர்கள் இருக்கக்கூடாது.
ஆண் வாரிசு இல்லாத இடமாபாருங்க அதன் மூலமாகத்தான் அனைத்துச் சொத்துக்களையும் சூறையாட முடியும் என்ற எண்ணத்திலே பெண் பார்க்கக் கூடிய கொடுமையை என் வாழ்க்கையிலே நான் பார்த்துள்ளேன். அன்பானவர்களே! இது நிக்காஹ்விற்கு முன் நடக்கிறது நிக்காஹ்விற்கு பிறகும்
கூட மாமனார் பொருளாதாரத்திலே குறியோடு இருக்கிறார்.
எங்க ஜமாஅத்திலே சில மாதத்திற்கு முன் ஒரு பஞ்சாயத்து என்ன பஞ்சாயத்து தெரியுமா? கணவன் மனைவி இருவரும் பிரிந்துள்ளார்கள். ஆனாலும் கூட இருவரும் அளவுக்கு அதிகமாக அன்போடு இருக்கிறார்கள். தம்மை எப்படியாவது சேர்த்து வைத்து விடமாட்டார்களா என்ற ஆதங்கத்திலே இரண்டு பேரும் இருக்கிறார்கள். ஜமாஅத்திலே உள்ளவர்கள் தனித்தனியாக பேசினார்கள். இடையூறாக இருப்பது யார் தெரியுமா? மாமனார் தான் அவர் என்ன சொல்கிறார் என்றால் எம்மருமகளுடைய தாயார் பெயரிலே சொத்து இருக்கிறது. அந்த தாயார் மரணமாகிவிட்டார்கள் அப்ப என்னங்க செய்யனும் அந்த அம்மாவின் சொத்தில் இருந்து மகளுக்கு பங்கு வரனுமா? இல்லையா? பங்கை வாங்கிட்டு வந்தா அவ இங்க வரட்டும்.
எனவே மருமகள் அவளது பாகத்தின் சொத்தை பெற்று வருவதாக இருந்தால் வரட்டும் இல்லையென்றால் எங்களுக்கு தேவை இல்லை! நாங்கள் ஒன்றும் 'இழிச்சவாயன்' கிடையாது. எதைப் பற்றி கவலைப்படுகிறார்? ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட்டது போன்று. மருமகளுக்கு சொத்து வரவில்லை என்று கவலைப்படுகிறார்.
காரணம் அதன்மூலமாக நாம அனுபவிக்க வேண்டியது அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே என கவலைப்படுகிறார்.
மேலும் பொருளுக்காக வேண்டியே பொருத்தமில்லாத பெண்களை இந்த மாமனார்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இதுவெல்லாம் கதையல்ல அளவுக்கு அதிகமாகவும் சொல்லலே உண்மையிலே நடந்த விஷயம்.
எங்க ஊர்ல ஒருவர் தம்மகனுக்கு தங்கச்சி மகளை பேசி வைத்திருக்கிறார்.
பெரிய செல்வந்தர் ஒரே பையன் கோடீஸ்வரன்.
திடீர்னு பார்த்தால் அந்த தங்கச்சி மகளை வேணாம் என சொல்லிட்டு வேறு ஒரு இடத்திலே பேசி நிக்காஹ் செய்ய போகிறார் என்னவென விசாரித்து பார்த்தால்....
அந்த பெண்ணு ஏற்கனவே நிக்காஹ் செய்து விவாகரத்து செய்யப்பட்ட பெண்மணியாகும். விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையோ, அல்லது விதவை பெண்ணையோ நிக்காஹ் செய்ய இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால் அது எப்படி இருக்க வேண்டும். ஒரு தியாக மனதோடு இருக்கனும் நபியின் சுன்னத் என்ற அடிப்படையில் இருந்தால் மகிழ்ச்சியான விஷயம்.
ஆனால் அவர் ஏன் தெரியுமா அப்படி செய்கிறார் அந்த வீட்ல அந்த பெண் ஒரே பெண் அந்த விவாகரத்து செய்யப்பட்ட பெண் விடல ஒரே வாரிசு இவருக்கு அந்த அனைத்து சொத்துக்களையும் சூறையாட வேண்டும் என்ற எண்ணத்திலே தம் மகனுக்கு பொருத்தமில்லாத ஒரு பெண்னை திருமணம் செய்து வைக்கிறார். அன்பான நடுவரவர்களே
இப்படி திருமணம் செய்து வைத்தால் அந்த இல்லற வாழ்வு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்.
இப்படி தான் முல்லாவுக்கு பொருத்தம் இல்லாத கண்ணங்கருப்பியை மணம் முடித்து வைக்கப்பட்டது.
முதல் நாள் அவள் கேட்டாள். 'அன்பு கணவரே நான் இனி யார் யார் முகத்திலே விழிக்கனும்' என்று கேட்ட போது 'என்னை தவிர எவமுகத்திலே வேண்டுமானாலும் முழி' என்றார். காரணமென்ன தன் மகனுக்கு பொருத்தமில்லாத பெண்களை பொருளாதார பேராசை காரணமாக இந்த மாமனார்கள நிக்காஹ் செய்து வைக்கிறார்கள். எப்படி இல்லறம் நல்லறமாக இருக்கும் முதல் கோணல் முற்றிலும் கோணல் தானே.
சில கணவன்மார் தம் மனைவியை பக்கத்து சீட்ல வைத்துட் போகமுடியலே ஏன்: சில பெண் இவணை விட வயது கூட இருக்கிறாள் எதற்குக் கட்டி வைத்தார்கள். சொந்தம் விட்டு போய்விட கூடாதாம் சொந்தம் விட்டு போய்விட கூடாது என்று இவணைவிட வயது முதிர்ந்த இவனுக்கு பொருத்தமில்லாத இவனைவிட வயது முதிர்ந்தவரை கல்யாணம் முடிக்கலாம். ஆனால் பொருத்தமில்லாதவளை முடித்து வைக்கின்றனர். அவள வெளியே கூட்டிட்டு போகவே சங்கடப்படுகிறான்.
சிலர் பொருளாதாரத்திற்காகவும், சிலர் தம் சொந்தம் விட்டுபோய் விட கூடாது என்றும் பொருத்த மற்ற பெண்ணை கல்யாணம் செய்து வைக்கிறார்கள் எப்படி இல்லறம் நல்லறமாக இருக்கும்.
முதல் குற்றசாட்டு மாமனார்கள் பொருளாதார ரீதியிலே துன்பத்தை ஏற்படுத்துகிறார்கள். குடும்ப மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கிறார்கள்.
2-வதாக மருமகளின் கற்புக்கு இவர்கள் கேடாக இருக்கிறார்கள் ஒரு காலம் இருந்தது மருமகளை மகளாக பார்க்க வேண்டிய மாமனார்கள் காம உணர்வோடு பார்த்த செய்திகள் நம் சமுதாயத்திலே இம்ரானாவுடைய வாழ்க்கை ஒரு சான்று மாமனார் மருமக கற்பு ரீதியிலே இடையூராக இருக்கிறார்கள்.
3-வது குற்றச்சாட்டு மனைவிக்கு ஒத்து போவதிலே மாமனார்கள் ரொம்ப கிள்ளாடியாக இருக்கிறார்கள். ஏன்னா தம் மனைவி சொல்வதை கேட்டால் மாமனார் மகிழ்ச்சியாக வாழ முடியும். அவள் சொல்வதற்கு எல்லாம் ஆடனும்
அப்பதான் இவர் சந்தோஷமாக வாழ முடியும். ஆக தான சந்தோஷமாக வாழ மருமசு இல்லற வாழ்விற்கு இடையூறாக இருக்கிறார்.
அடுத்ததாக மாமியார் இந்தமாமியாரும் இல்லற வாழ்விற்கு இடையூறாக இருப்பது கொஞ்ச நஞ்சமல்ல.
மாமியார்னா யார் தெரியுமா? ஆதிக்கத்தின் உரைவிடமாக மாமியார் இருக்கிறாள் கொடுமையின் உரைவிடமாக அவள் இருக்கிறாள்.
ஒரு வீட்ல பிச்சைகாரன் யாசகம் கேட்டான். அப்ப மருமக 'சில்லறை இல்ல போயிட்டு வாங்க' என்க வேகமாக உள்ளே இருந்த மாமியார் ஓடி வந்தாள். பிச்சைகாரனை அழைத்து எங்குவந்தாய் என கேட்டாள். பிச்சை கேட்க வந்தேன். உங்க மருமக இல்லை என்றால் நீங்க ஏதாவது தாங்க! என்றான். அப்ப மாமியார் சொன்னாள்; 'சில்லறை இல்லை போ' என்று ஏங்க இததான் அவசொன்னாலே என அவன் கேட்க, இல்லை என்ற வார்த்தையை சொல்ல கூட அவளுக்கு அதிகாரம் இல்லை இந்த எண்ணத்திலே தான் மாமியார் இருக்கிறாள்.
மாமியார் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போடுகிறாள். அது போல நாத்தனார். கொழுந்தனார் போன்றவர்களும் பல விதத்திலே இடையூறாக இருக்கிறார்கள்.
'நார்' என்றாலே நரகம் தான். மாமனார், நாத்தனார், கொழுந்தனார். இந்த நரகம் போன்று இருக்கக்கூடிய இந்த நார்கள் திருந்தினாலே இல்லறம் நல்லறமாகி விடும்.
நேரத்தை கருத்தில் கொண்டு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி பெறுகிறேன் விடை தருகிறேன் ஸலாம்.
பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக