அஸ்ஸலாமு
அலைக்கும்..
ஸலாம்
சொல்வதன் ஒழுக்கத்தைப் பற்றி நான் இங்கு பேச வந்து இருக்கிறேன்
1. தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள் என்று எல்லா முஸ்லிம்களுக்கும் ஸலாம் சொல்ல வேண்டும்.
2. முந்தி கொண்டு
ஸலாம் சொல்ல வேண்டும்.
3. சபைக்கு வரும்
போதும் சபையை விட்டு வெளியேறும் போதும் ஸலாம் சொல்ல வேண்டும்.
4. வீட்டில் நுழையும்போதும் வீட்டை விட்டு வெளியேறும் போதும் சலாம் சொல்லவேண்டும்.
5. குழைந்தைகளுக்கு ஸலாம் சொல்ல வேண்டும்.
6.சிறியவர்கள், பெரியவர்கள் என்று பார்க்காமல் அனைவருக்கும் ஸலாம் சொல்ல வேண்டும்.
7. வாகனத்தில் செல்பவர்கள் நடந்து செல்பவர்களுக்கு ஸலாம் சொல்ல வேண்டும்.
8. சிறிய கூட்டம் பெரிய கூட்டத்தினருக்கு ஸலாம் சொல்ல வேண்டும்.
9.மக்கள் தூங்கி கொண்டு இருந்தால் மெதுவாக ஸலாம் சொல்ல வேண்டும்.
10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு என்று முழுமையாக ஸலாம் சொல்ல வேண்டும்.
11. பதில் சொல்பவர்கள் வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு என்று முழுமையாக ஸலாம் சொல்ல வேண்டும்.
12. யாராவது ஸலாம் சொல்லி அனுப்பினால் அலைக வ அலைஹிஸ் ஸலாம் என்று பதில் சொல்ல வேண்டும்.
இப்போ உங்களுக்கு நான் ஸலாம் சொல்றேன் எல்லோரும் சேர்ந்து சத்தமா ஸலாம் சொல்லுங்க ஓகே வா..
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
தொகுத்தவர் : மதிப்பிற்குரிய
மவ்லானா மவ்லவி B. முஹம்மது ராஃபி ரஷீதி ஹழ்ரத் அவர்கள்.
ஆசிரியர் ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா. அரக்கோணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக