சனி, 23 ஜூலை, 2022

மார்க்கக் கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையவர்கள் பெண்களே 1


 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலிஹில் முஸ்தபா வஅலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லம் ஆமீன்..

அறிவூட்டும் தந்தை தந்து.. அமுதூட்டும் அன்னை தந்து.. செறிவூட்டும் மறையைத் தந்து.. உணர்வூட்டும் நபியை தந்த.. வல்லோன் அல்லாஹ் தன்னை புகழ்ந்து சபையோருக்கு சலாம் என்னும் முகமன் கூறி துவங்குகிறேன்.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நடுவர் அவர்களே..! இப்ப பேசிட்டு போனவர்க்கு பேரை தப்பா வச்சிருக்காங்க.. ________ னா ________ .

நடுவர் அவர்களே! ஆதம் அலைஹி வஸ்ஸலாம் கல்வியில் ஆர்வமாக இருந்தாங்கன்னு குர்ஆனில் வந்தது என்று சொன்னார்..

ஆனால் அங்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்தது மார்க்க கல்வியை பற்றி இல்லை.. அந்த வசனத்தையும் அர்த்தத்தையும் உங்கள் முன் சொல்லி உங்களிடமே முடிவை விடுகிறேன்

وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்;
(
அல்குர்ஆன் : 2:31)

இதில எங்கேயாவது மார்க்கக் கல்வி என்று வருதா..

அப்புறம் ஒரு பழமொழி சொன்னார் பெண் புத்தி பின் புத்தி என்று.. ஒத்துகிறேன்.. ஆனால் பின் புத்தி என்றால் பிற்போக்குத்தனமான புத்தி என்று பொருள் சொல்றது தப்புன்னு சொல்வேன்..

ஆம் நடுவர் அவர்களே..!

பின் புத்தி நா பின் மாதிரி ஷார்ப்பா நுனி கூரான புத்தி என அர்த்தம்..

ஏன்னா உண்மையில் பெண்கள் எல்லா கல்வியிலும் இன்னைக்கு மார்க்க கல்வியில் நிறைய இடங்களில் பெண்கள் சாதனை செய்கிறார்கள்..

ஏன் இவ்வளவு இந்த மாநாட்டில் பாருங்க அதிக முதல் பரிசை தட்டிச் செல்பவர்கள் கூட பெண்கள் தான்..

அதனால் தான் பெண்கள் பெயர்கள் பெரும்பாலும் பாத்திமா பாத்திமா என்று இருக்கு..

பாத்திமா என்றால் என்ன அர்த்தம்..

அறிவாளி பெண்ணு என்று அர்த்தம்..

எந்த பையனுக்காகவது அறிவாளி என்று பேர் வச்சி பார்த்து இருக்கிறீர்களா.. நடுவர் அவர்களே.. எனக்கு முன் பேசிய நண்பர் அபூஹுரைரா மாதிரி பெண்கள்ல கல்வி ஆர்வம் மிக்கவர்களை காட்ட முடியுமான்னு சவால் விட்டுவிட்டு போனாங்க.. நான் கேட்கிறேன்.. இவருக்கு இறைநம்பிக்கையாளர் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி தெரியாதா.. நபியவர்களின் செயல்களை ஒவ்வொன்றும் தவறாது கண்காணித்து வந்தார்கள்.. எதற்காக..ஏன்.. அவர்களது கல்வியார்வத்தால் மட்டும் தான..

இது மட்டுமா.. மாதத்தீட்டு சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென நபிகள் பெருமானார் அவர்களிடம் ஒரு சஹாபி பெண்மணி அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் வினவினார்கள் அதுபற்றிய மார்க்கச் சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ளும் வரை கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.. இதை கவனித்த நபி அவர்கள் பெண்களின் கல்வி ஆர்வத்தை பற்றி இப்படி சான்று அளித்தார்கள்

_______________________________
அன்சாரிப் பெண்கள் பெண்ணினத்தின் சிறந்தவர்கள் ஏனென்றால் அவர்கள் வெட்கப்பட்டு கல்வி கற்காமல் இருந்ததில்லை..

ஸஹீஹ் முஸ்லிம் 552 பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்

அந்த சஹாபி பெண்கள் மட்டும் வெட்கப்பட்டு இருந்தால் இன்று நமக்கு மாதத் தீட்டு சம்பந்தமான சட்டங்கள் தெரியாமலே போயிருக்கும் அல்லவா..

இதில் அவர்கள் ஆர்வம் எந்த அளவுக்கு இருக்கின்றது கவனித்துக் பாருங்கள் நடுவர் அவர்களே!! நபிகள் (ஸல்) அவர்கள் மார்க்க கல்வி கற்பது என்றால் பெண்கள் ஒரு கை பார்த்து விடுவார்கள் என்று நபி அவர்களே பெண்களை பார்த்து சொல்லி இருக்காங்க நீங்களும் அதே தீர்ப்பை எங்களுக்கும் சொல்லி தீர்ப்பாக வீர்கள் என்ற முழு நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் நன்றி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக