புதன், 27 ஜூலை, 2022

மார்க்கக் கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையோர் ஆண்களே..3


 

கண்ணியத்திற்குரிய விழாக்குழு தலைவர் அவர்களே.. எனது ஆசிரிய தந்தையே.. ஆண்கள் சபையே..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அனைத்து படைப்பிலும் ஆண் இனத்தை அழகுபடுத்திய அல்லாஹ்வைப் புகழ்ந்து.. அண்ணல் நபி அவர்களை அவையில் நினைவு கூர்ந்து என் மறுப்புரையை துவங்குகிறேன்..

நடுவர் அவர்களே! என்னங்க ____ இவர்கள் போடும் மொக்கை தாங்க முடியல.. மூன்று பேர்கிட்டயும் ஒரே ஒரு குறிப்பு தான் இருக்கும் போல அதை வச்சிக்கிட்டே நேரத்தை ஓட்டறாங்கன்னு நினைக்கிறேன்..

எங்க ஊருல ஒரு டுபாக்கூர் டாக்டர் இருந்தார் லேகிய டாக்டர்.. அவருக்கு அந்த பேர் மிகவும் பொருத்தமாக இருந்தது ஏனென்றால் அவர் அஸ்வகந்தா லேகியத்தை.. மட்டும் வித்து வித்து பிரபலமாகிவிட்டார்..

எப்படின்னு கேட்குறீங்களா? தலைவலியின் வர்றவங்க கிட்ட ஒரு பக்க அட்டையை காட்டி விற்பார் காய்ச்சலுன் வர்றவங்க கிட்ட அவர் வேற பக்கத்தின் அட்டையை காட்டி விற்பார்..

ஒரே வீட்டுல ரெண்டு மூணு பேருக்கு அதை வித்து அது பெரிய பிரச்சினையாக வந்து விட்டது அப்போது அவர் அனைத்து நோய்க்கும் இந்த மருந்து நிவாரணி என்று சொல்லி மழுப்பினாராம்..

அதே மாதிரி நடுவர் அவர்களே இவங்கள பார்த்தாலும் உண்மையா பட்டிமன்ற பேச்சாளர் மாதிரி தெரியல..

சரி நடுவர் அவர்களே..! நாம் விஷயத்துக்கு வருவோம்.. கல்வி கற்பதில் அலி ரலியல்லாஹ் அன்ஹூ அவர்களுக்கு இருந்த ஆவலை நபி அவர்கள் பார்த்துவிட்டு இப்படி சொன்னாங்க

நான் கல்வியின் மாநகரம் அலி (ரலி) அவர்கள் தான் அதன் தலைவாசல்..என்று கவனித்தீர்களா.. அப்படியானால் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கல்வி ஆர்வத்தை கண்டு தான் இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்கள்..

இப்பொழுது சொல்லுங்கள் நடுவர் அவர்களே..

எந்த பெண்ணை பற்றியாவது நபிகளார் இப்படி சொல்லி இருக்கிறார்களா..!

மார்க்க கல்வி கற்கும் ஆவல் ஆண்களுக்குத்தான் அதிகம் இருக்கும் என்பதால் தான் அல்லாஹ் நபிமார்களை ஆண்களில் தேர்வு செய்தான்.

நடுவர் அவர்களே..! உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பல விஷயங்களில் தன் கருத்தைச் தயங்காமல் சொல்வார்கள் அப்போதெல்லாம் அல்லாஹ்வும் அதை ஏற்றுக் கொள்வான் ஆகவே தான் உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று சொன்னார்கள்..

இதேபோன்று கிலாபத் என்னும் கௌரவம் ஆண்களுக்கே வழங்கப்பட்டது இதுவும் கூட ஆண்களின் கல்வி தகுதியை காட்டுகிறது நடுவர் அவர்களே..!

இறுதியாகவும் உறுதியாகவும் ஒரு ஹதிஸை சொல்லி எனது வாதத்தை முடிக்கிறேன்..

பெண்களின் கல்வி ஆர்வத்தை பற்றி எனக்கு முன் பேசிய ____ நிறைய சொன்னார்..

அவர் அணியின் தலைவர் கூட பெண் புத்தி பின் புத்தி என்னும் பழமொழிக்கு நியூ வெர்ஷன் விளக்கமெல்லாம் சொன்னார்..

இப்ப நான் சொல்லும் ஹதீஸிற்கு விளக்கம் சொல்லுங்கள் பார்க்கலாம்..

நடுவர் அவர்களே..! சமீபத்தில் கடந்து சென்ற மிஃராஜ் இரவின் பயணத்தில் இதை கேள்விப்பட்டேன் பெண்கள் மார்க்கத்திலும் அறிவிலும் குறைந்தவர்கள் தான் என்று நபியவர்களே சொல்லிவிட்டு..

பெண்கள் எப்படி குறைந்தவர்கள் என்பதற்கான விளக்கம் சொன்னார்கள்..

இனிமேல் விளக்கம் சொன்னால் நடுவர் அடிக்க வந்துவிடுவார் போல் தெரிகிறது..

ஆகவே நபிகளாரின் வார்த்தையை என் வாதத்துக்கு இறுதியாக்கி நிறைவுக்கு வருகிறேன்..

பெண்கள் ஆர்வத்திலும் அறிவிலும் ஆண்களைவிட குறைந்தவர்களே என்று தீர்ப்பு அளிக்குமாறு வேண்டி விடைபெறுகிறேன் நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக