அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
விண்ணையும் மண்ணையும் அந்த மண்ணிலே என் அன்னையையும்
ஓம் மாந்தர்க்கு பிள்ளையாக என்னையும் படைத்து பரிபாலிக்கின்ற இரட்சகா உன்னை
புகழ்ந்தேன் அல்ஹம்துலில்லாஹ்..
பெண்ணை போற்றிய உண்மையான உம்மி நபியை வாழ்த்தும் அந்த
சலவாத்தை கூறி என் புழையை துவக்குகிறேன்..
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ
அஸ்ஹாபிஹி அஜ்ம ஈன்
நடுவர் அவர்களே! எனக்கு முன் பேசிய தோழி அவர்கள்..
அவருடைய பெயரைரே அவருக்கு சரியா படிக்கத் தெரியாது இந்த நிலையில இவரு வரலாறு
படிச்சா எப்படி இருக்கும்..
என்னவோ பெரிய அல்லாமா முல்லா அலிகாரி மாதிரி வியாக்கானம் பேசுறாரு நடுவர் அவர்களே..
!எனக்கு முன் பேசியவர் விடுத்த சவாலை நான் முறியடிக்க
தயார்..
பெண்கள் மார்க்கம் கற்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள்
என்பதற்கு இதோ இரண்டு நிகழ்ச்சியை உங்கள் முன் வைக்கிறேன்..
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு
அன்சாரிப் பெண்மணி நபிகளாரிடம் வந்து மாதவிடாய் குளியல் பற்றி கேள்வி கேட்டார்..
நபிகளார் விளக்கம் சொன்னார்கள்.. அப்பெண் மேலும் விளக்கம் கேட்டார்கள் நபிகளார்
மறுபடியும் விளக்கம் சொன்னார்கள்.. ஒரு ஆண் எவ்வளவு விளக்கம் கொடுக்க முடியுமோ
அவ்வளவு விளக்கத்தையும் நபிகளார் சொல்லி முடித்த பிறகும்..
அந்தப் பெண்மணிக்கு மார்க்கம் பற்றி விளக்கம் அறிய
ஆவல் குறையாததை பார்த்த நபி அவர்களின் மனைவிகள் தன்பால் இழுத்து விளக்கம்
சொன்னார்கள் என்ற வரலாறு ஸஹிஹுல் முஸ்லிம் கிரகத்தில் பதிவிடப் பட்டுள்ளது..
நடுவர் அவர்களே…! இது போன்ற மற்றொரு நபிமொழி புகாரி மற்றும் முஸ்லிம்
ஆகிய ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது..
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபியிடம் வந்து இறைவனின்
தூதரே அல்லாஹ் உண்மையை சொல்ல வெட்கம் கொள்ள மாட்டான் தானே.. என்று பீடிகை வைத்து
பிறகு தன் கேள்வியை கேட்கிறார்கள்..
ஒரு பெண்ணுக்கு கனவு காண்பதால் குளிப்பு கடமையாகுமா
என்ற கேள்வி கேட்கிறார்கள் அதற்கான பதில் எல்லாம் விவரித்து சொல்ல எனக்கு வயதில்லை
என்றாலும் உங்களிடம் நான் இதை சொல்வதற்கான நோக்கம் என்ன தெரியுமா..
நடுவர் அவர்களே..!
நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த இஸ்லாமியக் முன்னோடி
பெண்கள்தான் மார்க்கக் கல்வியில் அதிக ஆர்வம் உடையவர்கள் என்பதற்கு இந்த
சம்பவங்கள் சான்றாக அமைகின்றன..
நடுவர் அவர்களே..! அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹுமா
அவர்கள் நபி அவர்களின் மனைவியாக வரும்போது அம்மையார் பெரிய பெண் கிடையாது சிறு
வயது கொண்ட சிறுமி தான்..
கணவனின் இல்லத்திற்குச் செல்லும் பொழுது தன்னுடன்
விளையாட்டு பொம்மைகளையும் எடுத்து சென்றார்கள் என்கிறது வரலாறு.
அச்சமயம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவின் அலமாரியில் ஒரு
வினோத குதிரை பொம்மையை நபியவர்கள் பார்க்கிறார்கள் அதற்கு இரண்டு இறக்கைகள் உள்ளன
ஏதோ விளையாட்டு பிள்ளை விளையாட்டுத்தனமாக பொம்மையை
வைத்திருக்கிறாள் என்று இது என்ன குதிரைக்கு இறக்கை உள்ளது.?
என்று நபி வினாவிய போது அவர்கள் சொன்ன பதில் ஆயிஷா
(ரலி) அவர்களின் மார்க்க கல்வியின் எடையை நமக்கு சுட்டி காட்டுகிறது நடுவர்
அவர்களே..!
சுலைமான் நபியிடம் இப்படி ஒரு குதிரை இருந்ததாம்
என்று பதிலளித்தார்கள் நடுவர் அவர்களே..!
பத்து பன்னிரண்டு வயதில் சுலைமான் நபியின் குதிரையைப் பற்றி பேச வேண்டுமானால் ஆர்வமின்றி இக்கல்வி அடைந்திருப்பார்களா..! எதிரணியினர் ஒன்று கேட்டனர் நான் மூன்று சொன்னேன் இன்னும் இன்னும் சொல்வேன்.. கல்வியில் ஆர்வம் உடையோர் பெண்கள் தான். வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் வஸல்லம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக