செவ்வாய், 5 ஜூலை, 2022

மனிதனே உனக்கு ஆச்சரியமாக இல்லையா?

 


மனிதனே உனக்கு ஆச்சரியமாக இல்லையா?

 

நீ பிறந்த போது உன்னை உன்னுடைய தாயின் வயிற்றில்லிருந்து வெளியேற்றியது யார் என்று உனக்கு தெரியாது 

அதே போல் உன்னை மண்ணரையில் வைப்பது யார் என்று உனக்கு தெரியாது.

 

நீ பிறந்த போது உன்னை குளிப்பாட்டினார்கள் சுத்தம் செய்தார்கள்

அதே போல் நீ மரணித்தாலும் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள்.

 

நீ பிறந்த போது சந்தோசத்தால் உனக்கு நன்மறாயம் கூறுவது யார் என்று உனக்கு தெரியவில்லை 

அதே போல் நீ இறக்கும் போது கவலையால் யார் அழுவது என்று உனக்கு தெரியாது.

 

நீ தாயினுடைய வயிற்றில்  இருந்த போது இருளான நெருக்கடியான ஓர் இடத்திலிருந்தாய். 

நீ மரணித்தாலும் இருளான நெருக்கடியான ஓர் இடத்தில் இருக்க போகிறாய்.

 

நீ பிறந்த போது  உன்னை பெருமதியற்ற துணியால் மறைத்தார்கள் அதே போல்

நீ மரணித்தாலும் பெருமதிற்ற கஃபன் துணியால் மறைப்பார்கள்.

 

நீ பிறந்து பெரியவனான போது மக்கள்

உனது செய்திகளை உன்னைப் பற்றி விசாரித்தார்கள் 

அதே போல் நீ மரணித்தாலும் வானவர்கள் உனது நல் அமல்களைப் பற்றி விசாரிப்பார்கள்.

 

எனவே மறு உல வாழ்வுக்காக நாம் எதை தயார் செய்துவைத்துள்ளோம் 

لا اله الا الله உள்ளத்தால் செல்வதற்கு பழக்கப்படுத்தி கொள்வோம்

  لا اله الا الله محمد رسول الله என்பது ஒரு வார்த்தை அல்ல அது ஒரு வாழ்க்கை திட்டம்

என்று கூறி உங்களிடமிருந்து ஸலாம் கூறி விடைபெறுகிறேன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக