பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ்வின் பெயரைக் கூறி நபி மீது ஸலவாத் ஓதி என்
வாதத்தை துவங்குகிறேன்.. அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
எங்கள் அணித்தலைவர் எவ்வளவு அழகாக ஆதாரங்களை
அடுக்கினார் பார்த்தீர்களா நடுவரே!
என் தலைவர் சஹாபி ஆண்களின் அதிக ஆர்வம் உள்ள ஒரு
உதாரணத்தை சொல்லிவிட்டார்.
நான் சஹாபாக்களிலும் அதற்குப் பின்பு உள்ள தாபியீன்கள்அதற்குப் பின்னுள்ளவர்களையும் சொல்ல தயாராக உள்ளேன்.. நடுவர் அவர்களே..!
பெண்களின் மார்க்க அறிவிற்கு உதாரணம் சொல்வதற்காக ஒரு
வேடிக்கை கதை சொல்வார்கள்..
ஒரு ஊர்ல ரமலான் மாத முதல் பிறையை ஆவலோடு வானத்தில
தேடி பார்த்துகிட்டு இருந்தாங்களாம்.. கொஞ்ச நேரத்துல பிறை தெரிந்ததாம்.. பிழை
தெரிந்தது என்று ஒருத்தர் வேகமாக கத்தினார்..
அதைக் கேட்டதும் பருப்புக் கடைந்து கொண்டிருந்த பாத்திமாவும்
ஓடிவந்துச்சாம்.. குழந்தைக்கு கை கால் கழுவிக் கொண்டிருந்த கொழுந்தியா ஓடிவந்து
வந்துச்சாம்..
பிறையை பார்த்து கையால அதை காட்டி பேசும்போது
பாத்திமா கைல பருப்பு வாசம் வந்துச்சாம் அப்போது பிறையிலிருந்து பருப்பு வாடை
வருதுடின்னு..
இதை கவனித்த கால் கழுவிக்கிட்டு இருந்தன கொழுந்தியா
இல்லடி பிறை நாறுது பல வாடை வருதுனு சொல்லுச்சாம் இதை பார்த்து ஊரே சிரித்ததாம்..
நடுவர் அவர்களே!
பார்த்தீர்களா உங்களுக்கு சிரிப்பு வந்துருச்சு
சஹாபாக்களான ஆண்களே திண்ணைத் தோழர்கள் என்று ஒரு கூட்டமே மஸ்ஜிதுன் நபவியில்
காலமெல்லாம் காத்திருந்து தாங்களே அவங்க என்ன நோக்கத்தில் காத்திருந்தாங்க..
சூரத்துல் பகராவில் 273 வது வசனத்தில் அவர்களின் சிறப்பை அல்லாஹ் தெள்ளத்
தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றான்..
لِلْفُقَرَآءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِىْ
سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِ
(நம்பிக்கையாளர்களே!) சில
ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை
(முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத்
தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப் படாதவர்களாக இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 2:273)
இந்த ஆண்கள் ஆர்வமுடையவர்களா அல்லது பெண்கள் ஆர்வம்
உடையவர்களாக நடுவர் அவர்களே!
தனக்கென்று மனைவி இன்றி.. மக்கள் இன்றி..
தூக்கமின்றி.. சொத்து சுகம் என்று வீடின்றி.. நபிகளாரின் செயல்களை உற்று
நோக்கியவாறு இருந்து வாழ்வைக் கழித்த தோழர்கள் எவ்வளவு ஆர்வத்தோடு இருந்தார்கள்
அதுபோன்ற ஆர்வமுள்ள ஒரு குழுவை காட்ட வேண்டாம்..
குறைந்தபட்சம் 1 அல்லது 2 பெண்களையாவது காட்டுங்க
என்று எதிரணியான___________________
அவர்களிடம் ஒரு சவால் வைக்கிறேன்..
நடுவர் அவர்களே..! பாயிண்ட்டே இல்லாம பரிதாபமாக
அமர்ந்துள்ள எதிரணியிடம் இறுதியாக ஒரு கேள்வியை கேட்டு விடை பெற விரும்புகிறேன்.
குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி
ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கல்வி ஆர்வம் பற்றி தெரிந்திருந்தால் நீங்கள் எல்லாம்
இங்கு இப்படி ஒரு அணி அமர்ந்து இருப்பீர்களா..
நடுவர் அவர்களே…! பாலகனாக இருக்கும் போதே இவன் திருடன்.. இவன்
நல்லவன்.. என்று எதிர் எதிரில் இருப்பவரை பாகுபடுத்தி தெரியாத சிறுவனாக இருந்த
போதே கல்வியில் ஆர்வம் கொண்டு வணிக கூட்டத்தோடு சேர்ந்து கல்விப் பயணம்
மேற்கொண்டார்கள் என்பதை மெய்ஞான அறிஞர்கள் கூறும் வரலாற்று அல்லவா..!
ஆண்கள் சிறு பிராயத்திலேயே கற்கும் ஆர்வம் உடையவர்கள்
என்பதை இச்சம்பவம் காட்டுகிறது என் அணியில் எனக்கு அடுத்த பேச இருப்பவர்கள் மீதி
கருத்துக்களைச் சொல்வார்கள் என்று கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி
விடைபெறுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக