அல்லாஹ் மறுமை நாளில் இவர்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்க
மாட்டான் என்று நபி ஸல் அவர்கள் கூறிய நபர்கள் யாரென்றால்...
கணவனுக்கு நன்றி செலுத்தாத மனைவியை அல்லாஹ் ஏறெடுத்தும்
பார்க்க மாட்டான்.
( நூல் பைஹகி 7 : 294. )
1 ) மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க
மாட்டான்.
2 ) பெற்றோர்களுக்கு மாறு செய்பவன்.
3 ) மது அருந்துபவன்.
4 ) கொடுத்ததை சொல்லிக்காட்டுபவன்.
( நூல் ஹாகிம் 7344. )
1 ) சொந்தத்தை முறித்து வாழ்பவன்.
2 ) மோசமான அண்டை வீட்டுக்காரன்.
ஆகிய இருவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்
( நூல் கன்ஜுல் உம்மால் 6975. )
முடிகளுக்கு கறுப்பு நிறத்தில் சாயம் பூசுபவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும்
பார்க்க மாட்டான்.
( நூல் மஜ்மவுல் ஸவாயித் 8793. )
மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான் அவர்களை
பரிசுத்தப்படுத்தவும் மாட்டான் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
1 ) அநாதையை சக்திக்கு மீறி கஷ்டப்படுத்தும்
ஆசிரியர்.
2 ) யாசகம் கேட்பதை விட்டும் தேவையற்றிருந்தும்
யாசகம் கேட்பவன்.
3 ) அரசனிடம் அமர்ந்து அரசனின் மனோ இச்சைக்கு
தோதுவாக பேசுபவன்.
( நூல் கன்ஜுல் உம்மால் 43938 )
1 ) ஜகாத்தை தர மறுப்பவன்.
2 ) எதீமின் பொருளை அனுபவிப்பன்.
3 ) சூனியக்காரன்.
4 ) ஏமாற்றுபவன்.
ஆகியோரை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
( நூல் கன்ஜுல் உம்மால் 44001 )
உடலும் உள்ளமும் சேராத தொழுகையின் பக்கம் அல்லாஹ் ஏறெடுத்தும்
பார்க்க மாட்டான்
( நூல் இஹ்யா உலூமித்தீன். )
பெருமைக்காக ஆடையை தரையில் இழுத்துக்கொண்டு செல்பவனின் பக்கம்
அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்
( நூல் புகாரி 5446. )
1 ) பெற்றோருக்கு மாறு செய்பவன்.
2 ) ஆண்களை போன்று அலங்கரித்துக் கொள்ளும் பெண்.
3 ) மனைவியைக் கூட்டிக் கொடுப்பவன்.
ஆகியோரின் பக்கம் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
( நூல் முஸ்னது அஹ்மது 6180 )
ருகூவுக்கும், சுஜுதுக்கும் மத்தியில் இஃதிதாலில் முதுகை
நேராக நிப்பாட்டாதவனின் தொழுகையின் பால் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
( நூல் முஸ்னது அஹ்மது. )
இவை நமது வாழ்வில் சாதாரணமாக நடக்கும் காரியங்கள். ஆனால்
அதன் விளைவுகள் மிகக் கடுமையானது.
அல்லாஹ் நம்மை இறைபார்வையும், இறை நெருக்கத்தையும் பெற்ற
மக்களாக ஆக்கி வைப்பானாக. ஆமீன்.
சுப்ஹானல்லாஹ். பல வாரங்களுக்கு உண்டான ஜுமுஆ குறிப்பு அல்ஹம்து லில்லாஹ்
பதிலளிநீக்கு