சனி, 15 டிசம்பர், 2018

கேள்வி : பதில்கள்.



1)    கேள்வி :  நாம் எவரின் அடியார்கள்.
பதில் : நாம் வல்லோன் அல்லாஹ்வின் அடியார்கள்.
2)  
  கேள்வி :. அல்லாஹ் என்பது எவரின் பெயர்.
பதில் :. நம்மையும் அகிலமனைத்தையும் படைத்துக் காத்து, ஆட்சி செய்பவனின் பெயர்.

3)    கேள்வி : நாம் எவருடைய உம்மத்.
பதில் : நாம் முஹம்மது நபி ஸல் அவர்களின் உம்மத் என்னும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம்.

4)    கேள்வி : ரசூல் ஸல் என்பதன் பொருள் என்ன...
 பதில் : அல்லாஹ்வின் புறத்திலிருந்து அடியார்களுக்கு மார்க்க சட்டத்திட்டங்களை எத்தி வைக்க வந்த தூதர் எனப் பொருள்.

5)    கேள்வி : நம்முடைய நபி முஹம்மது ஸல் அவர்கள் எங்கு பிறந்தார்கள்.
பதில் : திருமக்காவில் பிறந்தார்கள்.

6)    கேள்வி : திருநபி ஸல் அவர்கள் எங்கே மரணித்தார்கள்.
பதில் : திருமதினாவில் மரணித்தார்கள்.

7)    கேள்வி : அவர்களின் தலைமுறையினரின் பெயர்கள் என்ன.
பதில் : முஹம்மது ஸல் அவர்கள் அப்துல்லாஹ் ரலி அவர்களின் திருமகனாவர்கள், அப்துல்லாஹ் அவர்கள் அப்துல் முத்தலிபு அவர்களின் மகனாவார், அப்துல் முத்தலிபு அவர்கள் ஹாஷிம் அவர்களின் மகனாவார், ஹாஷிம் அவர்கள் அப்துல் மனாஃபின் மகனாவார்.

8)    கேள்வி : ஈமான் என்று எதற்குச் சொல்லப்படும்.
பதில் : அல்லாஹு தஆலாவின் புறத்திலிருந்து முஹம்மதுர் ரசூலுல்லாஹி ஸல் அவர்கள் என்னென்ன களையெல்லாம் பெற்றுத் தந்தார்களோ, அவைகள் அனைத்தையும் உம்மை என்று நம்பி, நாவால் மொழிந்து, செயல் மூலம் மெய்ப்பித்தலுக்கு ஈமான் எனப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக