கேள்வி : ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன...?
பதில் :
அவைகள் பல உள்ளன. அவற்றுள் சில கடமைகளை நான் இங்கே சொல்கிறேன்.
1. ஒரு முஸ்லிம் நோயுற்றால் அவரிடம் சென்று நலம் விசாரித்தல்.
2. அவர் இறந்து விட்டால் ஜனாஸாவை பின் தொடர்தல்.
3. அழைத்தால் விருந்தை ஏற்றுக் கொள்வது.
4. ஸலாமுக்கு பதில் சொல்வது.
5. தும்மினால் யர்ஹமுக்கல்லாஹ் என பதில் கூறுவது.
6. தான் விரும்புவதையே சகோதரருக்கும் விரும்புவது.
தான் வெறுக்கும் ஒன்றை மற்றவர்களுக்கு விரும்பாதிருப்பது.
7. தன் நாவாலும், கையாலும் பிற முஸ்லிமுக்குத் தீங்கிழைக்காதிருப்பது.
8. இழிவு உண்டாக்காதிருப்பது.
9. ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் குணவொழுக்கத்திற்குத் தக்கவாறு கண்ணியம்
செய்வது.
10. தன்னைவிட வயதில் மூத்தவர்களுக்கு கண்ணியம் செய்வது.
11. சிறியவர்களிடம் அன்பு காட்டுவது.
12. எல்லோரிடமும் முகமலர்ச்சியுடன் பழகுவது.
13. வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றுவது.
14. பிறரின் குறைகளை வெளிப்படுத்தாமல் இருப்பது.
15. ஒரு முஸ்லிமின் உயிருக்கோ, உடமைகளுக்கோ அநியாயம் செய்தால் உடனே அதிலிருந்து
அவரை விலக்குவது.
16. கண்ணியத்திற்குரியவர்களுக்கு கண்ணியம் செய்வது.
17. ஒருவர் கைலாகு (முஸாபஹா) செய்தால் அவருக்கு கைலாகு கொடுத்து அவரின்
நலன்களை கேட்டு, அவரின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் பங்கு பெறுவது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக