ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

ஆடம்பரம் ஆடும் பம்பரம்!


 ஆடம்பரம் என்பது நமக்கு நாமே

தேடிக் கொள்ளும் வறுமை! - சாக்ரடீஸ்

ஆடம்பரச் செலவு என்பது தரித்திரத்தை
விலை கொடுத்து வாங்குவது போல. - தந்தை பெரியார்

வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்க அதிகரிக்க ஒழுக்கம் மறையத் தொடங்கும். ஆகவே, ஆடம்பரம் ஆபத்து. எளிமையான வாழ்வே உண்மையான வாழ்வு. - ஜனாதிபதி அப்துல் கலாம்.

பணம் வந்ததும் குணத்தை மாற்றாதே!
பதவி வந்ததும் அதிகாரத்தைக் காட்டாதே!
ஆடம்பரம் வந்ததும் ஆணவத்துடன் ஆடாதே! ஏனெனில், இந்த உலகில் எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை.

அண்டை வீடு சண்டை வீடாகாமலிருக்க.

 

அண்டை வீடு சண்டை வீடாகாமலிருக்க

அன்றே அண்ணல் நபி நாயகம் ஸல் அவர்கள் நமக்கு

அறிவுறுத்திய  அழகிய 20 அறிவுரைகள்!

------------------------------------------------

01. அண்டை வீட்டார்

பொருளாதார உதவி நாடினால்,

அவருக்கு உதவிசெய்ய வேண்டும்.

 

02. அவர் ஆதரவை நாடினால்,

அவருக்கு துணை நிற்க வேண்டும்.

 

03. அவர் நோய்வாய்ப்பட்டால்,

நலம் விசாரிக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது இரு முனைகள் கொண்ட வாள்.

 

1.  ADULT என்பது  ஐந்து எழுத்துக்கள்

     அதே போல YOUTH என்பதும் ஐந்து எழுத்துக்கள்

 

2.  PERMANENT ஒன்பது எழுத்துக்கள்

     அதே போல TEMPORARY. என்பதும் ஒன்பது எழுத்துக்கள்

 

3.  GOOD என்பது நான்கு எழுத்துக்கள்

     அதே போல EVIL என்பதும் நான்கு எழுத்துக்கள்

 

4.  BLACK  என்பது ஐந்து எழுத்துக்கள்.

     அதே போல WHITE. என்பதும் ஐந்து எழுத்துக்கள்

 

6. LIFE என்பது நான்கு எழுத்துக்கள்

    அதே போல DEAD என்பதும் நான்கு எழுத்துக்கள்

துஆ ஏற்கப்படும் நேரங்கள்.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு துஆ ஏற்கப்படும் நேரங்கள் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

சவப்பெட்டி உணர்த்தும் பாடம் (கதை)


 ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே  நல்ல அறிவாளிகளாக இருந்தனர் .

 

         அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக் கொண்டான் .  இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் .

புதன், 21 பிப்ரவரி, 2024

பொறுமை வேண்டும்.

 


செய்யும் செயல்களிலும்
செய்யப்படும் முயற்சிகளிலும்
பொறுமை வேண்டும்.


வாழ்வில் வெற்றிக்கு
பொறுமை வேண்டும்.


தோல்வி கண்ட பின்பும்
பொறுமை வேண்டும்.


துன்பத்திலிருந்து மீள
துரோகியை கண்ட பின்பும்
பொறுமை வேண்டும்.

குரங்கு சேட்டை (கதை)

அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார்.

அவர் அந்த துறவியிடம், “சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார்.