செவ்வாய், 14 நவம்பர், 2017

"பற்று...நபியைப் பின்பற்று...!"


ஒருமுறை நபித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்ட "ஹூதைஃபா அல் யமான்"என்ற நாயகத்தோழர் தொழுகைக்குப் பின்
அவரை உடனடியாக அழைத்து,
"தோழரே...! நீர் தொழவில்லை..! ஒரு
வேளை நீர் மரணித்தால் நபியின்
சுன்னத்தை விட்டுவிட்ட நிலையின்
தான் மரணிப்பீர்..!"  என்று கண்டித் தார்கள்.                      (நூல்:புஹாரி)

திங்கள், 13 நவம்பர், 2017

*அழகான வரிகள் பத்து*.



1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும்
 *சாதாரண மனிதர்கள்*

2,பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்*

சனி, 11 நவம்பர், 2017

காதலித்துப் பார்....




இறைவனை காதலித்துப் பார்...

உன்னைச் சுற்றி மலக்குமார் தோன்றுவர்...

வாழ்க்கை அர்த்தப்படும்..

சுவனத்தின் விசாலம் விளங்கும்...

உனக்கும் அழுகை வரும்
மனது நிம்மதியடையும்...!

அல்லாஹ் நண்பனாவான்...!

சுஜுதில் கிடந்தே உன் நெற்றி தேயும்...!

கண்ணிரண்டும் ஒளி கொள்ளும்...!

இறைவனை காதலித்துப் பார்....

அழுதழுதே முகம் நனைப்பாய்...!

ஐந்து முறை பள்ளி செல்வாய்...!

சந்தோசம் வந்தால் இறைவனின் சோதனை என்பாய்...!

துக்கம் வந்தால் இறைவனின் நேசம் என்பாய்...!

சடவாதிகள் உன்னைக் கவனிக்க மாட்டார்கள்..
ஆனால்..
அகிலத்தின் அதிபதி உன்னை அவதானிப்பதாய் உணர்வாய்...!

உடலுக்கும் உயிருக்குமிடையே
உருவமில்லா மலகுல் மௌத்
நகரக் காண்பாய்...!

இந்த வானம்...இந்தப் பூமி
இந்த அந்தி....
இந்தப் பூக்கள் எல்லாம்
உனக்கு வசப்படுத்தித் தரப்பட்ட ஏற்பாடுகள் என்பாய்...!

இறைவனை காதலித்துப் பார்...!!!

இருதயத் துடிப்பு மரணபயம் விதைக்கும்...!

ராத்திரியின் நிசப்த அலைவரிசைகளில்
உன் குரலில் குர்ஆன் ஒலிபரப்பாகும்...!

உன்மனம் உனக்கு விசாரணைகள் நடத்தும்...!

சைத்தானின் திரைச்சீலைகளை தக்வா கிழிக்கும்...!

இறையச்சம் நைல்நதியாய் பெருக்கெடுக்கும்...!

உதடுகள் மட்டும் எப்போதும் இறைநாமம் உச்சரிக்கும்...!

ஷஹவாத்கள் சமுத்திரமாகும்...!

பிறகு
தௌபாவுக்குள் கண்ணீர்த்துளிக்குள் சமுத்திரம் அடங்கும்...!

இறைவனை காதலித்துப் பார்...!!!

சின்னச் சின்ன குர்ஆன் வசனங்களால்
சிலிர்க்க முடியுமே!!!

அதற்காகவேனும்
புலன்களை அடக்கி பாவத்தைத் தவிர்க்கலாமே...!

அதற்காகவேனும்
சொர்க்கம் என்ற சொல்லுக்கும்
நரகம் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் புரியுமே...!

அதற்காகவேனும்
வாழும்போதே சுவனம் காண முடியுமே...!

சாகும் போதும் கலிமா மொழிய முடியுமே...!

அதற்காகவேனும்
இறைவனை காதலித்துப்பார்...!!!

சடவாத சிந்தனைக்கு முன் தோற்றுப் போனாலும்
உறவுகள் எல்லாம் இறந்து போனாலும்..
விழித்துப் பார்க்கையில்
உன்னைத்தவிர அனைத்துமே அழிக்கப்பட்டிருந்தாலும்
ஒரேநாளில் பலதடவைகள் சோதிக்கப்பட்டாலும்
நீ நேசிக்கும் பொருட்கள் உன்னை விட்டுச் சென்றாலும்
நீ நேசிக்கும் மனிதர்கள் உன்னை நேசிக்க மறந்தாலும்
இறைவனை காதலித்துப் பார்...!!!

அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தைக்குள்
அத்தனையும் அடங்கிவிடும்
இறைவனை காதலித்துப் பார்...!!!

சந்தோசம் நிம்மதி சொர்க்கம் இறைதிருப்தி
அனைத்தும் உனக்கு
இப்போதே நிச்சயம்...
இறைவனை காதலித்துப் பார்...!!!
.......

கடைசி வரை நிரூபியுங்கள்.



*தாயிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

அறிவிற்பட்ட கேள்வியும்....! அறிவார்ந்த பதிலும்...!








கேள்வி :  அதிக குழந்தைகளை பெற்றொடுத்து அவர்களை ஒழுங்காக வளர்க்க முடியாமல் சிரமப்படுவதை விட ஓரிரு குழந்தைகளை மட்டும் பெற்றெடுத்து அவர்களை நல்லவர்களாக வளர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் அதிக குழந்தைகள் பெற தடை செய்து கொள்ளலாமா...?

வியாழன், 9 பிப்ரவரி, 2017

மாநபி ஸல் அவர்களின் மாண்புயர் சபை.











لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ‏ 


33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு









சமய நல்லிணக்கத்துக்கு இஸ்லாமியர்களின் இணையற்ற சேவை.

வன்முறை, போராட்டம் என்பது இன்று உலகம் முழுக்க ஒரு பொதுவான கலாச்சாரமாக உருவாகி வருகிறது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. இந்நிலையில் இந்திய சமூக அமைப்பில் போராட்டம் வன்முறை என்றாலே இஸ்லாமியர்கள் மீது விரல் சுட்டப்பட்டு வருவது வேதனைக்குரியது.