வியாழன், 24 ஜூலை, 2014

மனித நேயம் வாழ்கிறது....!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி தஆலா வபரகாத்துஹு.
ஆரம்பமாக மின்னல் F.M நேயர்களாகிய உங்கள் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிகவும் மகிழ்சியடைகிறேன்.

புதன், 9 ஜூலை, 2014

குருவுக்கே போதித்த குதிரைக்காரன்



ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.

புதன், 2 ஜூலை, 2014

பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!



ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார்.. தினமும் அவருக்கு ஒரே ரூட் தான்.
ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது.
நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோரு க்குமே கொஞ்சம் அச்சமாய் தான் இருந்தது.
கண்டக்டர் அவனிடம் சென்று, “டிக்கெட்என்று கேட்டார். அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான்.
ஏன் டிக்கெட் வேண்டாம்என்று கேட்க கண்டக்டருக்கு பயம், தள்ளி வந்து விட்டார்.
மறுநாளும் இதே கதை. எனக்கு டிக்கெட் வேண்டாம்என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது..
கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது.. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.

திங்கள், 23 ஜூன், 2014

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.





தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.
அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிரிச்சி ஏனெனில் சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன.
சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது, அந்த நூறு நாய்களும் பதிலுக்கு "உர்ர்.. உர்ர்.." என்றது.

வெள்ளி, 13 ஜூன், 2014

ஈருடல் ஓருயிர்.....!





இஸ்லாத்தை FAMILY ORIENTED RELIGION என்று கூறுவார்கள் . இஸ்லாத்தில் குடும்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன பின்னர்தான் இஸ்லாத்தை   COMMUNITY RELIGION என்பார்கள். குடும்பங்கள் என்பது வீடுகளில் தானே உருவாகும்..... வீடுகள் தான் நமது நம்பிக்கைகள். அவை தகர்ந்தால்..... இஸ்லாமிய எழுச்சி என்பது இன்னும் பலகாலம் கானல் நீராகவே இருக்கும்.

சனி, 7 ஜூன், 2014

இருக்காதா பின்னே....!


எல்லா ராணுவத்திலும் ஷார்ப் சூட்டர் ( அதாவது குறி தவறாமல் சுடுபவர்கள் ) என்ற பிரிவினர் இருப்பார்கள் இவர்களது வேலை மறைந்திருந்து எதிர் தரப்பை சேர்ந்த முக்கியமானவர்களை சுட்டுதள்ளுவது.