50 யானைகளுக்கு சொந்தக்காரனாக வேண்டும்.
100 ஏக்கர் நிலம் வேண்டும்.
சுற்று வட்டாரத்தில் இல்லாத அளவுக்கு பெரிய வீடு கட்ட வேண்டும் என்று ஒரு யானைப்பாகன் ஆசைப்பட்டான்.
அது மட்டுமன்றி கடவுளை வேண்டவும் ஆரம்பித்தான்.
பல நாட்களாக ஒற்றை காலில் நின்று வேண்டியதால் கடவுளும் கொஞ்சம் இறங்கி வந்தார்.
கடவுள் அவனுக்கு காட்சி கொடுத்து என்னப்பா உன் பிரச்சனை?
என கேட்டார்.
அதற்கு அவன் அவனுடைய நீண்ட நாள் ஆசைகளை வரிசைப்படுத்தினான்.
கடவுளும் சிரித்தபடி மேலிருந்தபடியே 50 யானைகளை காட்டி இது போதுமா? என்றார்
அவன் சந்தோஷமாக தலையாட்டினான்.
100 ஏக்கர் நிலத்தை காட்டி இது போதுமா? என்றார்.
அதற்கு அவன் நிலத்தில் இன்னும் நான்கு கிணறுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றான்.
பெரிய மாளிகையை காட்ட வாசல் கிழக்குப் பக்கமாக இருந்தால் நன்றாக இருக்கும் பரவாயில்லை சமாளித்துக் கொள்கிறேன் என்றான்.
இதெல்லாம் கொடுத்துவிட்டு கடவுள் அவனிடம் எனக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும் என்றார்.
அவன் என்ன உதவி வேண்டும் கேளுங்கள்.
வேறு ஒன்றும் இல்லை நீ இறந்த பின் மேலே வரும்போது எனக்கு சிறு துண்டு யானையின் முடி கொண்டு வந்து தர வேண்டும் என்றார்.
அதற்கு அவன் இப்போதே பிடுங்கித் தருகிறேன்.
இதற்கு ஏன் சாகும்வரை காத்திருக்க வேண்டும் என்றான்.
இல்லை இப்போது எனக்கு தேவையில்லை என்றார் கடவுள்.
அதற்கு அவன் உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.
இறந்த பின் ஒரு துரும்பை கூட கொண்டு போக முடியாதல்லவா என்றான்.
பிறகு ஏன் இவ்வளவு பேராசை உனக்கு? என்று கடவுள் கேட்க அவர் கொடுத்த அத்தனை சொத்துக்களையும் திருப்பி கடவுளிடமே கொடுத்துவிட்டு திரும்பிப் பாராமல் நடந்தான் யானைப்பாகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக