வெள்ளி, 20 செப்டம்பர், 2024

கேள்வி பதில் பாகம்.4

 

................#முஹம்மது ...........

.............#றஸுலுல்லாஹ்.............. 

.............#வினா_விடை................. 


    ..............#பாகம்_4.................... 


76 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெரிய அற்புதம்.?


      *திருக்குர்ஆன்*


77 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட அற்புதங்கள்?


   *இஸ்ராஃ, மிஃராஜ்*


78 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிடித்த ஆடை?


                 *கமீஸ்*


79 : நபி (ஸல்) அவர்கள் எத்தனை திருமணம் செய்தார்கள்?


                 *11*


80 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் வேளையில் எத்தனை மனைவிமார்கள் உயிருடன் இருந்தார்கள்.?


                *9*


81 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முதன் முதலில் பங்கு பெற்ற போர் எது?


        *ஹர்புல் ஃபிஜார்*


82 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசியாக பங்கு பெற்ற போர் எது?


       *தபூக் போர்*


83 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நேரடியாக எத்தனை போரில் கலந்து கொண்டார்கள்.?


           *27*


84 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசியாக யாரை திருமணம் செய்தார்கள்?


*மைமூனா பீவி (ரலி) அவர்கள்*


85 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மோதிரத்தில் என்ன பொறிக்கப்பட்டு இருந்தது.?


  லாயிலாஹ இல்லல்லாஹ்.


86 : ஹபீபுல்லாஹ் 

என்ற சிறப்பு பெயர் யாருக்கு 

அல்லாஹ் வழங்கினான்.?


*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழங்கப்பட்டது.*


87 : இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் காஃபிர்களுக்கு பயந்து முஸ்லிம்கள் இரகசியமாகத் தொழுத இடம் யாது?


     *தாருல் அர்கம்*


88 : இஸ்லாத்திற்க்காக முதன் முதலாக தன்னுயிரை தியாகம் செய்தவர் யார்.?


*ஸுமைய்யா (ரலியல்லாஹு) அவர்கள்.* 


89 : காஃபிர்களின் தொல்லைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் குடும்பத்தினரும் எங்கே தங்கினார்கள்.?


*அபூதாலிப் கணவாய்*


90 : அபூ தாலிப் கணவாயில் எத்தனை வருடம் தங்கினார்கள்.?


    *மூன்று வருடங்கள்*


91 : கணவாயில் தங்கியிருந்த போது உணவு கிடைக்காத சூழலில் எதைச் சாப்பிட்டு பசியை போக்கினார்கள்.?


*இலைகளை சாப்பிட்டார் கள்*


92 : நுபுவத்தின் பத்தாம் வருடம் மரணமடைந்த இருவர் யார்?


*நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் மற்றும் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அருமை மனைவி கதீஜா அம்மையார்.*


93 : உக்பத் இப்னு அபீமுஅய்த் என்பவன் தொழுது கொண்டிருந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கழுத்தை துணியால் நெரித்த போது அதை அவிழ்த்து விட்டவர் யார்?


*அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அவர்கள்.*


94 : தொழுது

  கொண்டிருந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மேனியில் காஃபிர்கள் போட்ட ஓட்டஹக் குடலை அகற்றியவர் யார்.?


*பாத்திமா பீவி அம்மையார் அவர்கள்*


95 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் போது ஆயிஷா பீவி அம்மையாரின் வயது எத்தனை.?


          *18*


96 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் வேளையில் யார் வீட்டில் தங்கினார்கள்.?


*ஆயிஷா பீவி அம்மையார் வீட்டில் தங்கினார்கள்*


97 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்தவர் யார்?


*ஆயிஷா பீவி அம்மையார் அவர்கள்.*


98 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் வேளையில் அவர்கள் வயது எத்தனை.?


      *63 வயது*


99 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்?


           *மதீனா*


100 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முதன் முதலாக ஜூம்ஆ தொழுகை நடத்திய இடம்.?


      *மஸ்ஜிதுல் குபா*


ஆக்கம்.M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.


இயக்குனர்.#மைமூன்_பப்ளிஷிங் ஹவுஸ்.


#திருவிதாங்கோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக