ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

கேள்வி பதில் பாகம்.6

 


முஹம்மது_றஸூலுல்லாஹ்

              #வினா_விடை.

                  #பாகம்_6.



126 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இரண்டு முஅத்தின்கள் (பாங்கு சொல்பவர்) யார்?


*பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மற்றும் உம்மு மக்தூம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.* 


127 : மதீனாவில் ஸஹாபாக்கள் ஒவ்வொருவரும் தமது வீட்டிற்கு வருமாறு நபியவர்களை அழைத்த போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்ன சொன்னார் சொன்னார்கள்.?


*எனது ஒட்டகம் யார் வீட்டின் முன் அமர்கிறதோ அங்கே தங்குவேன் என்று சொன்னார்கள்.*


128 : ஒட்டகம் யார் வீட்டின் முன் அமர்ந்தது?


*அபூ அய்யூபுல் அன்சாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வீட்டின் முன் அமர்ந்தது.*


129 : ஒட்டகம் இரண்டாவதாக அமர்ந்த இடத்தில் என்ன செய்தார்கள்.?


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பள்ளியான அல் மஸ்ஜிதுன் நபவிய்யை கட்டினார்கள்.*


130 : முஹாஜிர்கள் என்றால் யார்?


*மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற ஸஹாபிகளுக்கு முஹாஜிர்கள் என்று பெயர்.*


131 : அன்ஸாரிகள் என்றால் யார்?


*மக்காவிலிருந்து வந்த ஸஹாபிகளுக்கு உதவி ஒத்தாசைகள் செய்த காரணத்தால் மதீனாவைச் சேர்ந்த ஸஹாபிகளுக்கு அன்ஸாரிகள் என்று பெயர்.*


132 : மதீனா வந்து சேர்ந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலில் கொடுக்கப்பட்ட உணவு எது?


*கஸ்அத்தும் மஸ்தூறா*


133 : கஸ்வா என்றால் என்ன? 


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நேரடியாக கலந்து கொண்ட போருக்கு கஸ்வா என்று பெயர்.*


134 : ஸரியா என்றால் என்ன? 


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நேரடியாக கலந்து கொள்ளாத போருக்கு ஸரியா என்று பெயர்.*


135 : பத்ர் போர் எப்போது நடைபெற்றது.?


*ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமளான் பதினேழு.*


136 : பத்ர் போரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு? 


        *313 பேர்* 


137 : பத்ர் போரில் காஃபிர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 


*காஃபிர்கள் 1000 பேர்.*


138 : முஸ்லிம் படையில் எத்தனை பேர் ஷஹீதானார்கள்?


*பதினான்கு பேர்*


139 : கொல்லப்பட்ட காஃபிர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்?


        *எழுபது*


140 : பத்ர் போரில் காஃபிர்களின் தலைவன் யார்?

 

    *அபூ ஜஹ்ல்*


141 :பத்ர் போரில் காஃபிர்களை எங்கே போட்டார்கள்?


*கலீஃப் என்ற கிணற்றில் போட்டார்கள்.*


142 : கிணற்றில் போடப்பட்ட பிணங்களுடன் பேசிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பார்த்து உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்ன கேட்டார்கள்?


*உயிரற்ற ஜடங்களுடனா பேசுகிறீர்கள்.*


143 : அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்ன பதில் கூறினார்கள்?


*உங்களை விட நன்றாக கேட்பார்கள்.என்றாலும் அவர்களால் பதில் அளிக்க இயலாது.*


144 : யுத்தத்தில் எதிரிகள் விட்டு செல்லும் பொருட்களுக்கு என்ன பெயர்.?

 

       *கனீமத்*


145 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆயிஷா பீவியை திருமணம் செய்யும் போது ஆயிஷா பீவியின் வயது எத்தனை?


      *ஒன்பது*


146 : ஆயிஷா பீவியின் தந்தை பெயர் என்ன?


 *அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*


147 : ஆயிஷா பீவியின் தாயார் பெயர் என்ன?


   *உம்மு ரூமான்*


148 :பெண்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்தவர் யார்?


 *ஆயிஷா பீவி அம்மையார் அவர்கள்*


149 : ஆயிஷா பீவி எங்கே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்?


   *ஜன்னத்துல் பக்கீஃ*


150 : ஸவ்ர் குகையில் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் தங்கிய நபித்தோழர் யார்?


*ஆயிஷா பீவி அம்மையாரின் தந்தை அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.* 


#ஆக்கம். 

M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.


#இயக்குனர். 

#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்.

#திருவிதாங்கோடு.

குமரி மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக