வியாழன், 16 ஜனவரி, 2020

பாடம். 2



தொழுகை

பர்ளான தொழுகையின் பெயர்கள்.

v  சுபுஹ்

v  லுஹர்

v  அஸர்

v  மஃரிப்

v  இஷா

v  ஜும்ஆ.



எந்த தொழுகையை எந்த நபிமாருக்கு அல்லாஹ் வழங்கினான்.

சுபுஹ். ஆதம் (அலை).

லுஹர் இப்ராஹிம் (அலை).

அஸர் யாகூப் (அலை).

மஃரிப் தாவூத் (அலை).

இஷா யூனூஸ் (அலை).

தொழுகையின் ரக்அத்கள். (ஷாபிஈ).

பர்ளு
முன் சுன்னத்
பர்ளு
பின் சுன்னத்

சுபுஹ்
2
2
-

லுஹர்
2
4
2

அஸர்
2
4


மஃரிப்
2
3
2

இஷா
2
4
2
வித்ரு 3 நபில் 2
ஜும்ஆ
2
2
2


தொழுகையின் நிய்யத்துக்கள்.

சுபுஹ் நிய்யத்.

உஸல்லி பர்ளஸ் சுபுஹி ரக்அத்தைனி அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபத்தி ஷரிபத்தி மஃமூமன் லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.

லுஹர் நிய்யத்.

உஸல்லி பர்ளல் லுஹரி அர்பஅ ரக்அத்தின் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபத்தி ஷரிபத்தி மஃமூமன் லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.

அஸர் நிய்யத்.

உஸல்லி பர்ளல் அஸரி அர்பஅ ரக்அத்தின் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபத்தி ஷரிபத்தி மஃமூமன் லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.

மஃரிப் நிய்யத்.

உஸல்லி பர்ளல் மஃரிபி சலாச ரக்அத்தின் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபத்தி ஷரிபத்தி மஃமூமன் லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.

இஷா நிய்யத்.

உஸல்லி பர்ளல் இஷா அர்பஅ ரக்அத்தின் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபத்தி ஷரிபத்தி மஃமூமன் லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.

சுன்னத் தொழுகை நிய்யத்.

உஸல்லி ஸலாத்தஸ் சுன்னத்தி ரக்அத்தைனி முஸ்தக்பிலன் இலல் கஃபத்தி ஷரிபத்தி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.

ஜும்ஆ தொழுகை நிய்யத்.

உஸல்லி பர்ளல் ஜும்அத்தி ரக்அத்தைனி அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபத்தி ஷரிபத்தி மஃமூமன் லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.

 தராவீஹ் தொழுகை நிய்யத்.

உஸல்லி சுன்னத்த ஸலாதத் தராவீஹ் ரக்அத்தைனி முஸ்தக்பிலன் இலல் கஃபத்தி ஷரிபத்தி மஃமூமன் லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.

நிய்யத் செய்யும் போது சரியான நேரத்தில் நாம் தொழுதால் அதாஅன் என்றும் நேரம் தவறி தொழுகும் போது கழாஅன் என்றும் சொல்ல வேண்டும்.

ஜமாத்தாக தொழும் போது மஃமூமன் என்றும் தனியாக தொழும் போதும் அவ்வார்த்தையின்றி நிய்யத் செய்ய வேண்டும்.

தொழுகையில் ஓத வேண்டிய தஸ்பீஹ்கள்.

தக்பீர் கட்டிய பின் வஜ்ஜஹத்து ஓத வேண்டும்.
வஜ்ஜஹத்து.

اِنِّى وَجَّهَتُّ وَجْهِىَ لِلَّذِى فَطَرَ السَّموَاتِ وَالْاَرْضَ حَنِيْفًا مُسْلِمًا وَمَا اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ اِنَّ صَّلَوتِى وَنُسْكِى وَمَحْيَايَ وَمَمَاتِى لِلّهِ رَبِّ الْعَلَمِيْنَ لَا شَرِيْقْكَ لَهُ وَبِذَالِكَ اُمِرْتُ وَاَنَا مِنَ الْمُسْلِمِيْنَ

இன்னீ  வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லதி பதரஸ் ஸமாவாத்தி வல்அர்ள ஹனிபம் முஸ்லிமவ் வமா அன மினல் முஷ்ரிகீன். இன்னஸ் ஸலாத்தி வநுஸ்கி வமஹ்யாய வமமாத்தி லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீக்கலஹு வபிதாலிக்க உமிர்த்து வஅன மினல் முஸ்லிமீன்.

ருகூஃ செய்யும் போது

سُبْحَانَ رَبِّىَ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ

ஸுப்ஹான ரப்பியல் அழீய்ம் வபிஹம்திஹி ( 3 தடவை. )
பொருள். மகத்துவமிக்க எனது இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்.

ருகூவிலிருந்து நிமிர்த பின்.

سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهْ
ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்.
رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْأَ السَّمَوَاتِ وَمِلْأَالْاَرْضِ وَمِلْأَمَاشِئْتَ مِنْ شَيْئٍ بَعْدَهُ
ரப்பனா லகல் ஹம்து.  மில்அஸ் ஸமாவாத்தி வமில் அர்ளி வமில்அமா ஷிஃத்த மின் ஷைஇன் பஃதஹு.

குனூத்.
اَللَّهُمَّ اهْدِنِى فِيْمَنْ هَدَيْتَ وَعَافِيْنِى فِيْمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِى فِيْمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِى مِنَ الْخَيْرِ فِيْمَا اَعْطَيْتَ وَقِنِى شَرَّمَا قَضَيْتَ فَاِنَّكَ تَقْضِى وَلَا يُقْضى عَلَيْكَ فَاِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنا وَتَعَالَيْتَ فَلَكَ الْحَمْدُ عَلى مَا قَضَيْتَ اَسْتَغْفِرُكَ وَاَتُوْبُ اِلَيْكَ وَصَلَّى اللهُ عَلى سَيَّدِنَا مُحَمَّدٍ وَبَارِكْ وَصَلِّمْ عَلَيْه رَبَّ نَغْفِرْ وَالرْحَمْ وَاَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

அல்லாஹும் மஹ்தினா பீமன் ஹதைத்.
வஆபினா பீமன் ஆபைத்.
வதவல்லனா பீமன் தவல்லைத்.
வபாரிக்லனா மினல் கைரி பீமா அஃதைத்.
வகினா ரப்பனா ஷர்ரமா களைத்.
பஇன்னக்க தக்ளி வலா யுக்ழா (அலை)க்.
பஇன்னஹு லாயதில்லு மவ்வாலைத்.
வலாயஇஸ்ஸு மன் ஆதைத்.
தபாரக்த ரப்பனா வதஆலைத்.
பலகல் ஹம்து அலாமா களைத்.
வநஸ்தஃபிருக்க வநதூபு இலைக்.
ஸல்லல்லாஹு அலா செய்யதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் (அலை)ஹ்.  ரப்ப நஃபிர் வர்ஹம் வஅன்த்த கைருர் ராஹிமீன்.

ஸஜ்தா செய்யும் போது.
سُبْحَانَ رَبِّىَ الْاَعْلى وَبِحَمْدِهِ சுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி.

ஸஜ்தாவிலிருந்து எழுந்த பின்.

رَبِّى اغْفِرْلِى وَارْحَمْنِى وَاجْبُرْنِى وَارْفَعْنِى وَارْزُقْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَاعْفُو عَنِّى

ரப்பிஃபிர்லி வர்ஹம்னி வஜ்புர்னி வர்பஃனி வர்ஸுக்னி வஹ்தினி வஆபினி வஃபு அன்னி.

அத்தஹயாத்து.

اَلتَّحِيَاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لله اَلسَّلَامُ عَلَيْكَ اَيُّهَاالنَّبِىُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِللهِ الصَّلِحِيْنَ اَشْهَدُ اَنْ لَااِلَهَ اِلَّاالله  وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدَا رَّسُولُ الله
اَللَّهُمَّ صَلِّى عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيَّدِنَا اِبْرَاهِيْمَ وَعَلَى آلِ سَيَّدِنَا اِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلَى سَيَّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيَّدِنِا اِبْرَاهِيْمَ وَعَلَى آلِ سِيَّدِنَا اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
அத்தஹயாத்து முபாரகாத்துஸ் ஸலவாத்துத் தைய்யிபாத்து லில்லாஹி அஸ்ஸலாமு (அலை)க்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு (அலை)னா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்.
அஷ்ஹது அன்லாஇலாஹா இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி செய்யதினா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரீக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

اَللَّهُمَّ اغْفِرْلِى مَا قَدَّمْتُ وَمَا اَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا اَعْلَنْتُ وَمَا اَسْرَفْتُ وَمَا اَنْتَ اَعْلَمُ بِهِ مِنِّى اَنْتَ الْمُقَدِّمُ وَاَنْتَ الْمُؤَخِّرُ لَاِالَهَ اِلَّااَنْتَ سُبْحَانَكَ اِنِّى كُنْتُ مِنَ الظَّلِمِيْنَ .
اَللَّهُمَّ اِنِّى اَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ النَّارِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيا وَالْمَمَاتِ وَمِنْ فِتْنَةِ الْمَسِيْحُ الدَّجَّالْ
اَللَّهُمَّ اِنِّى ظَلَمْتُ نَفْسِى ظُلْمًا كَثِيْرًا كَبِيْرًا فَاغْفِرْلِى مَغْفِرَةً مِنْ عِنْدِكَ اِنَّكَ اَنْتَ الْغَفُورُ الرَّحِيْمُ
اَللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِيْنِكَ وَطَاعَتِكَ وَاِيْمَاِنِكَ يَااَلله

அல்லாஹும் மஃபிர்ளி மாகத்தம்து வமா அக்கர்து வமா அஸ்ரர்து வமா அஃலன்து வமா அஸ்ரப்து வமா அன்த அஃலமு பிஹி மின்னி இன்னக்க அன்தல் முகத்திமு வஅன்தல் முஅக்கிரு லா இலாஹா இல்லா அன்த ஸுப்ஹானக்க இன்னி குன்து மினல் லாழிமீன்.

அல்லாஹும்ம இன்னி அவூது பிக மின் அதாபில் கப்ரி வமின் அதாபின் நார் வமின் பித்னதில் மஹ்யா வமமாத்தி வமின் பித்னதி மஸீஹுத் தஜ்ஜால்.

அல்லாஹும்ம இன்னி லலம்து நப்ஸி லுல்மன் கஸீரன் கபீரன் பஃபிர்ளி மஃபிரதம் மின் இன்திக்க இன்னக்க அன்த கபூருர் ரஹீம்.

அல்லாஹும்ம யாமுகல்லிபல் குலூப். சப்பித் கல்பி அலா தீனிக்க வதாஅத்திக்க வஈமானிக்க யாஅல்லாஹ்.

பின்பு அஸ்ஸலாமு (அலை)க்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று முதலில் வலது புறமாகவும் பின்பு இடது புறமாகவும் முகத்தை முன்னோக்கி கூற வேண்டும்.

( அத்தஹயாத்து ஓதும் போது அஷ்ஹது அன் லாஇலாஹா இல்லல்லாஹ் என்று கூறும் போது வலது கை விரல்களை மடக்கி கலிமா விரலை மட்டும் ஸலாம் கொடுக்கும் வரை நீட்டி வைத்திருக்க வேண்டும். )

தொழுகையின் பர்ளுக்கள்.

நிய்யத் அதாவது இன்ன நேரத்தின் பர்ளான தொழுகையை தொழுகிறேன் என்று நிய்யத் செய்ய வேண்டும்.

தக்பீர் தஹ்ரீமா கூறவேண்டும். (அதாவது தொழுகையை நிய்யத் செய்து அல்லாஹு அக்பர் என்று கூறவேண்டும்.)

நின்று தொழ சக்தியுள்ளோர் நின்று தொழ வேண்டும்.

பாத்திஹா சூரா ஒதவேண்டும்.

ருகூஃ செய்ய வேண்டும்.

இஃதிதாலில் நிற்பது. (அதாவது ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்கு திரும்பி 
வருவதற்கு இஃதிதால் என்று கூறப்படும்.)

இரண்டு ஸஜ்தா செய்ய வேண்டும்.

இரு ஸஜ்தாவுக்கு இடையில் அமரவேண்டும்.

இந்த நான்கு பர்ளுகளிலும் அங்க அசைவுகள் அமைதியாகும் வரை பொறுமையாக நிறைவேற்ற வேண்டும்.

கடைசி அத்தாஹயாத்தில் அமர வேண்டும்.

அத்தஹயாத்து ஓத வேண்டும்.

இதில் நபி صلى الله عليه وسلم அவர்களின் மீது ஸலவாத் ஓதவேண்டும்.

முதல் ஸலாம் கூற வேண்டும்.

இவற்றை வரிசையாக செய்ய வேண்டும்.

தொழுகையின் ஷர்த்துக்கள்.

1. சிறு தொடக்கைவிட்டு நீங்கியிருக்க வேண்டும்.

2. பெருந்தொடக்கை விட்டு சுத்தமாக இருக்க வேண்டும்.

3. மறைவிடத்தை மறைத்து இருக்க வேண்டும்.
(தொழுகையில் ஆண்கள் தொப்புள் முதல் முழங்கால் வரை கண்டிப்பாக மறைத்து இருக்க வேண்டும்.

பெண்கள் முகம் இரு உள்ளங்கை பாதம் ஆகியவற்றை தவிர உடல் முழுவதையும் மறைத்து இருக்க வேண்டும்.)

4. கிப்லா திசையை முன்னோக்கி இருக்க வேண்டும்.

5. தொழுகையை முறிக்கும் காரியங்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.

6. தொழுகையின் நேரம் வந்துவிட்டதை தெரிந்து தொழ வேண்டும்.

7. பர்ளான தொழுகையை பர்ளு என்றும் சுன்னத்தான தொழுகையை சுன்னத் என விளங்கித் தொழ வேண்டும்.


தொழுகையை முறிக்கும் காரியங்கள்

1. இத்தொழுகையை விட்டு போய்விடலாம் என எண்ணுவது,

2. கிப்லா திசையை விட்டு நெஞ்சை திருப்புவது.

3. தொழுகையில் பேசுவது குடிப்பது தின்பது.

4. மறைவிடம் வெளியாகி அதை உடனே மறைக்காமல் விடுவது.

5. ஒளு முறிதல் குளிப்பு அவசியமாகுதல்.

6. தும்மியவருக்கு பதில் சொல்வது.

7. பைத்தியம் பிடித்து புத்திமாறுதல். வெடி சிரிப்பு சிரிப்பது.

8. தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு அந்த சந்தேகத்திலேயே நீண்ட நேரம் இருப்பது.

9. காயத்திலிருந்து ரத்தம் சீழ் நீர் வழிவது.

10. தொழுகையில் தொழுகையல்லாத செயலை வேண்டுமென்றே மூன்றுமுறை செய்வது. (உதாரணமாக சொரிவது, சவைப்பது போல் அசைப்பது.)

11. உடலில் உள்ள வேதனையால் அழுவது முனங்குவது.

12. தும்மியவருக்கு யர்ஹமுக்கல்லாஹ் என பதிலளிப்பது.

13. சந்தோசமான துக்கமான செய்தி கேட்டு அதற்குரிய திக்ருகளை ஓதுவது.

14. பஜ்ரு தொழும்போது சூரியன் உதித்து விடுவது.

15. நஜீஸ் பட்டிருந்த நிலையில் தொழுகையை நிறைவேற்றுவது.


தொழக்கூடாத நேரங்கள்.

சூரியன் உதயமாகும் நேரம்.

சூரியன் நடு உச்சியின் நேரம்.

சூரியன் மறையும் நேரம்.


ஜும்ஆ தொழுகை பற்றிய விபரங்கள்.
வெள்ளிக் கிழமை ஜும்ஆவுடைய நாளாகும். அந்நாள் நாட்களுக்கெல்லாம் தலையானது. அந்நாளில் தான் நபி ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்தான், அதே நாளில் தான் சொர்கத்தில் நுழைய வைத்தான், அதே நாளில் தான் சொர்க்கத்தை விட்டு வெளியாக்கினான், அதே நாளில் தான் அவர்களுடைய தவ்பாவை ஏற்றுக் கொண்டான்.

ஜும்ஆவுடைய தினத்தைக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்திற்கு அளவிட முடியாத நன்மைகள் கிடைக்கின்றது. முஸ்லிம்கள் அனைவரும் இறைவனை பயந்தவர்களாக ஒரே இடத்தில் ஒன்று கூடும் வாய்ப்பு கிடைக்கின்றது. இதனால் அவர்களுக்கிடையில் நட்பும் பாசமும் அதிகமாகின்றது. உள்ளத்தில் உள்ள கோபம் வஞ்சம் நீங்குகிறது. ஒருவர் மற்றொருவரை அன்போடும் பாசத்தோடும் பார்த்து அவர்களின் நிலையை அறிந்து கொள்வார்கள். வசதியுள்ளவர் ஏழைகளின் நிலையை அறிந்து இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவிடும் வாய்ப்பு உருவாகின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு முன்னால் அனைவருமே சமமே என்ற சிந்தனையும் உருவாகின்றது.

ஜும்ஆ தொழுகையின் ஒழுக்கங்கள்.

ஜும்ஆவிற்கு செல்கிறவன் குளித்து அழகிய உடையணிந்தும், நோன்பில்லாதவன் நறுமணம் பூசுவதும், தாடியை ஒதுக்கி முகவேலை செய்து மூக்கு, அக்குள் ஆகியவற்றின் முடிகளைக் களைந்து, நகம் வெட்டிக் கொள்வதும் சுன்னத்தாகும்.

தாடியை சரிபடுத்தி சீப்பைக் கொண்டு சீவுவதும், ஒற்றைப்படையாகக் கண்களுக்கு  சுருமா இடுவதும், தனக்குத் தகுதியான தலைப்பாகை கட்டுவதும், அதைப் பின் பக்கத்தில் தொங்கவிடுவதும் சுன்னத்தாகும்.

கதீபுக்கு அருகிலிருப்பதும், அவரைப் பார்ப்பதும் சுன்னத்து. ஒருவர் தான் உட்கார்ந்த இடத்தில் வேறொருவரை மாற்றி வைத்துவிட்டு அவர் வேறு இடத்திற்கு மாறிச் செல்வது மக்ரூஹ். மனிதர்களை மிதித்துக் கொண்டு செல்வது ஹராம். தான் உட்காருவதற்காக மற்றொருவரை அவ்விடத்திலிருந்து எழுப்புவது ஹராம்.

ஜும்ஆவிற்கு போகும்போது தூரம் கூடுதலான வழியில் கண்ணியமான முறையில் காலால் நடந்து போய், பிறகு தூரம் குறைவான வழியில் திரும்பி வருவது சுன்னத்தாகும்.

ஜும்ஆவின் பலனை இழக்கச் செய்யும் செயல்கள்:

'இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்' என்று நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ((ரலி)யல்லாஹு அன்ஹு) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

'அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்' என்று நபி صلى الله عليه وسلمலல்லாஹு (அலை)ஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஜஃது (ரலி)யல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

ஜும்ஆ நாளில் ஓத வேண்டியவைகள்:

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீது ((ரலி)யல்லாஹு அன்ஹு), நூல் : ஹாகிம்

நபி صلى الله عليه وسلم அவர்களின் மீது அதிகமாக  ஸலவாத் கூறவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக