ஒரு கட்டில் நரி யானை கிட்ட சென்று உனக்கு தெரியுமா இந்த வாத்து உன்னை பற்றி இல்லாததும் பொல்லாதத்தும் சொல்லுது! நீ போய்
என்னானு கேளு மக்கா! என்று சொன்னது!
அதற்கு யானை! நான் இப்பவே போய் அதன் எலும்பை உடைத்து சூப் வைத்து விடுகிறேன்! நான் பார்த்து கொள்கிறேன்! நீ போய் தூங்கு என்று சொல்லி நரியை அனுப்பி வைத்தது.
இரண்டு நாள் கழித்து மறுபடியும் நரி போய் யானை கிட்ட நீ என்ன அந்த வாத்தை ஒன்னுமே செய்யாமல் விட்டுட! அந்த வாத்து இன்னைக்கு கூட உன்னை பற்றி எப்படி தப்பு தப்பா பேசினான் தெரியுமா என்று சொல்ல!
யானைக்கு பயங்கர கோபம்! நீ கவலை படாதே இன்னைக்கு அவன் கழுத்தை திருவி போட்டு விடுகிறேன்! நீ போ என்று அனுப்பியது!
அப்புறம் ரெண்டு நாள் கழித்து மறுபடியும் யானை கிட்ட போய் நீ எல்லாம் ஒரு ஆளு அந்த வாத்தை ஒன்னுமே செய்ய மாட்டிக்குறே!
இந்த தடவை யானைக்கு கோபம் உட்ச்சத்தை தொட்டது! அவனை இப்பவே போய் நான் என்ன செய்றேன் பாரு என்று சொல்ல!
நரி வெறும் கையோடு போகாதே என்று கடப்பாரை ஒன்று கொடுத்தது. யானை வாங்கி கொண்டு வேகமாக சென்றது!
நரியும் சரி இந்த யானை என்ன தான் செய்கிறது என்று பார்க்கலாம் என்று அதன் பின்னே சென்றது.
பார்த்தால் என்ன ஆச்சரியம் யானை தன் விவசாய நிலத்திற்கு சென்று மண்ணை கொத்திகொண்டு இருந்தது.
நரிக்கு ஒரே கோபம் யானை கிட்ட வந்து நீ என்னப்பா செய்து கொண்டு இருக்க என்று கேட்க!
அதற்கு யானை சொல்லியது எனக்கு நிறைய வேலை இருக்கு இந்த வாத்துக்கு கத்துவது மட்டும் தான் வேலை ஆனால் நான் அப்படி இல்லை நான் பலசாலி, அறிவாளி இந்த பொய்யான வதந்திகளுக்கு செவி சாய்க்க தேவை இல்லை! என்று சொல்லி நரியை அனுப்பியது!
கருத்து - வாழ்க்கையில் அப்படி தான் இருக்க வேண்டும்.
நாம் பலசாலிகள், அறிவாளிகள் நம் இலக்கை நாம் அடைய உழைக்காமல் , இந்த வாத்துக்கள் போல் இருக்கும் மனிதர்களின் தேவை இல்லாத பேச்சால் நம் இலக்கு தடை பட கூடாது!
நோக்கமின்றி பிறரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதைவிட எவ்வாறு நல்ல நன்பர்களை சம்பாதிக்க இயலும் என்று என்னுவது உத்தமம் ஆகும்.
பதிலளிநீக்குஅந்த நேரத்தை பொன்னான வழியில் கழித்தல் நலம் உண்டாகும்.