வெள்ளி, 28 ஜூன், 2024

உன்னை நீ உணர்ந்தால்

 

✏உன்னை நீ உணர்ந்தால்

உன் ரப்பை நீ பணிவாய்!!!


✏உன் கண்களை மூடிக் கட்டிக்கொண்டு

ஒரு நாள் முழுதும் இயங்கிப் பார்...


✏பார்வை என்ற ஒன்றைத் தந்த

படைத்தவன் அருளை உணர்வாய்...!


✏வாய் பேசாமல் சைகை மூலம் -உன்

மனதில் தோன்றுவதை வெளிப்படுத்து...


✏பேச்சாற்றல் என்ற பேரருளின் சிறப்பை உனக்குள் உணர்ந்து கொள்வாய்...!


✏ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம்

தடுக்கி விழுந்து நடந்து பார்...


✏நீ மற்றைய காலின் மகிமை எண்ணி மனங்குளிர்ந்து தான் போவாய்...!


✏கையை முழுதும் கட்ட வேண்டாம்

விரல்களை மடக்கிக் கொண்டு - உன் சுய தேவைகளை செய்து பார்...


✏விரல்களின் விசித்திரம் அறிவாய்...!


✏துடிக்கும் இதயம் பற்றி நீ அலட்டிக்கொள்வதில்லை

அதிலோர் ஓட்டை விழுந்தவரிடம் கொஞ்சம் இதயம் பற்றிக் கேளு...


✏உண்மைகள் புரியும் உனக்கு...!


✏இழுத்து விடும் மூச்சின்

அருமை என்றுமே புரிந்ததில்லை 

மூன்று நிமிடம் மூக்கைப் பிடித்துப் பார்...


✏முழுதும் உணர்ந்து கொள்வாய்...!


✏இயற்கை உபாதைகள் இயல்பாய் நடப்பதால்...


✏அதன் அவசியம் அறிந்ததில்லை...


✏இரு நாட்கள் அதில் சிக்கல் வந்தால் தெரியும் கழிவகற்றலின் மகிமை...!


✏தினமும் இயங்கிய மூளை ஓர் நாள்

திடீரென இயங்க மறுத்தால்...


✏கோமா எனும் நிலையினை நீயும்

கொஞ்சம் கண் முன்னே நிறுத்து...!


✏இப்படி எம்மில் இறைவன் தந்த 

அத்தனை உறுப்புக்களினதும்

இயக்கம் இருக்கும் வரையில் 

எமக்கு எதுவுமே புரிவதில்லை...


✏குருடு செவிடு ஊமை முடம்

என எந்த ஊனமும் இல்லா

முழு உடலைத் தந்த ரப்பை மறத்தல் -உன் மனதின் ஊனம் அன்றோ?


✏உன் அங்கம் ஒவ்வொன்றும் தங்கம் தான் என்பதை உளமாற உணர்ந்தால்...


✏இறையருள் உன் மீது கொட்டிக்கிடப்பதை தானாய் உணர்ந்து கொள்வாய்...!!!


✏இத்தனை அருட்களை உனக்குக் கொடுத்த படைத்தவன் உன்னிடம் வேண்டுவதெல்லாம் - தினம்

பாங்காய் ஐவேளை சிரம் பணிந்திடும் பயம் பக்குவம் நிறைந்த மனதைத் தான்...!


✏உன்னை உணராமலயே நீ வாழ்ந்து விட்டால் மறுமையில் வெற்றி என்பதே இல்லை...


✏படைத்தவனை நீ புரிந்து கொண்டால் என்றும் தோல்வி உனக்கில்லை!!!


               🌹 إن  شاء الله 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக