வெள்ளி, 28 ஜூன், 2024

பெருநாள் தொழுகை முறை (ஹனஃபி.

 


பெருநாள் தொழுகை முறை (ஹனஃபி).

நிய்யத்:

~~~~~~~

1. ஈதுல் ஃபித்ர் உடைய வாஜிபான 2 ரக்அத்துகளை 


2. அதிகப்படியான வாஜீபான ஆறு தக்பீர்களுடன் 

3. கிப்லாவை முன்னோக்கி 

4. இந்த இமாமைப் பின்தொடர்ந்து அல்லாஹ்வுக்காக தொழுகிறேன்.


பெருநாள் தொழுகை முறை:

~~~~~~

முதலில் 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லி தக்பீர் கட்டி 'ஸனா' (சுப்ஹானல்லாஹும்ம....) ஓத வேண்டும். 


பிறகு, இரண்டு முறை தக்பீர் சொல்லி கைகளை உயர்த்தி கீழே விட்டுவிட வேண்டும். மூன்றாம் முறை தக்பீர் சொல்லி கைகளை கட்டிக் கொள்ள வேண்டும். 


தக்பீர் கட்டிய பின் அல்ஹம்து ஸூரா, துணை ஸூரா ஓதி வழமைபோல் நிற்பது, ருகூஃ, ஸஜ்தா.... இரண்டாம் ரக்அத்திலும் வழமைபோல எழுந்து அல்ஹம்து ஸூரா, துணை ஸூரா ஓதி,

ருகூஉக்கு முன் மூன்று முறை தக்பீர் சொல்லி கைகளை காதுவரை உயர்த்தி கீழே விட்டு விட வேண்டும். 


நான்காவது முறை தக்பீர் சொல்லி ருகூஉ செய்ய வேண்டும். அடுத்து வழமைபோல் நிற்பது, ஸஜ்தா.... என தொடர்ந்து ஸலாம் கொடுத்து இரண்டாம் ரக்அத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 


தொழுகை முடிந்ததும் குத்பா, துஆ ஓதி

 சபை நிறைவு பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக