1. கலிமா தய்யிப்
லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி
பொருள்: முதல் கலிமா பரிசுத்தமானது
வணக்கத்திற்குரியவன் அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள்.
2. கலிமா ஷஹாதத்
அஷ்ஹது அல்லாஹ் இலாஹ இல்லல்லாஹு வஹ்த்ஹு லாஷரீக்க லஹு வஆஷ்ஹது
அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு.
பொருள்: இரண்டாம் கலிமா (உள்ளத்தால்) சாட்சி கூறுதல்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு எந்த இறைவனுமில்லை
என்று (உள்ளத்தால் உறுதி கொண்டு) சாட்சிக் கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு (யாரும்)
இணை இல்லை. மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் அடியாராகவும், உண்மைத் திருத்தூதராகவும்
இருக்கிறார்கள் என்றும் சாட்சிக் கூறுகிறேன்.