நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம்
அம்மா பஃத்.
நமது உயிரினும்
மேலான நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள்
அனைவரின் மீதும் குறிப்பாக இந்த விழாவில் கூடியிருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின்
அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக.
அன்பிற்கினிய அல்லாஹ்வின்
நல்லடியார்களே...
அன்றொருநாள் நபி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களிடம் அவருடைய சிறிய தந்தையான அப்பாஸ் ரலியல்லாஹு அவர்கள் கேட்டார்கள்
:
*யா ரஸுலுல்லாஹ் எனக்கு
ஒரு துஆவை கற்றுக் கொடுங்கள் என்றார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
கூறினார்கள் என்னுடைய சிறிய தந்தையே:-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ
‘ அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா ’
இதன் பொருள் யா அல்லாஹ்!
நான் உன்னிடம் ஆஃபியாவைக் கேட்கிறேன்! என்ற இந்த துஆவை கேளுங்க என்றார்கள். அவரும்
சரி என்று கூறி சென்றார்கள்.
இன்று நம்மில்
பலரும் பள்ளிவாசல் ஹஸ்ரத்திரம் போய் ஹஸ்ரத் ஏதாவது ஒரு நல்ல தஸ்பி திக்ரு துஆ
இருந்தா சொல்லிக்குடுங்க. அதை ஓதி கேட்டா அன்னிக்கே நடந்துறனும் அந்த மாதிரி
ஏதாவது ஸ்பெஷல் ஐட்டம் இருந்தா நமக்கு சொல்லிக் குடுங்க என்று கேட்பாங்க.
ஹஸ்ரத்தும் மூளைய
கசக்கி வழக்கமா வற்ற ரப்பனா ஆதினா மாதிரி இல்லாம புதுவார்த்தைகள் நிறைந்த ஒரு
துஆவை எழுதி கொடுத்து இதை அதிகமா தஹஜ்ஜத்துல ஓதி துஆ கேளுங்க கண்டிப்பா நடக்கும்
சொன்னா
அதுக்கு அவர்
சொல்வாரு ஹஸ்ரத் தஹஜ்ஜத் எந்திரிக்கிறது கொஞ்ச கஷ்டம் அதனால மஃரிப்ல கேட்டா
பலிக்கிற மாதிரி துஆ இருந்தா கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு போவாங்க
அந்த மாதிரி
அப்பாஸ் ரலியல்லாஹு
அவர்கள் இதைப்பற்றி சிந்தித்து விட்டு, சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து நபியவர்களிடம் கூறினார்கள் :
யா ரஸூலுல்லாஹ் !
இந்த துஆ பார்வைக்குச் ரொம்ப சுருக்கமாகத் தெரிகிறது. எனக்கு வேறு ஏதாவது பெரிசா வேண்டும்
என்றார்கள்!
இதைக் கேட்ட பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் :-
என்னுடைய நேசத்திற்குரிய
சிறிய தந்தையே, அல்லாஹ்விடம் ஆஃபியாவை
கேளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆஃபியாவை விடச் சிறந்ததாக நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள்!
இந்த ஹதீஸ் (நூல் :
திர்மிதி : 3514 | ரியாளுஸ்ஸாலிஹீன்
: 1488)
பதிவாகியுள்ளது
இப்போ கேள்வி
என்னன்னா ஆஃபியா என்றால் என்ன?
மாஃபியா கேள்விபட்ருக்கோம் சோஃபியா கேள்விபட்ருக்கோம் ஹஸ்ரத்து
கூட நம்மல பாக்குறப்ப ஆஃபியத்தா இருக்கீங்கலான்னு கேட்பாரு ஆமா அதென்ன ஆஃபியா
அப்பிடீன்னா.
• ஆஃபியா என்பது இம்மை மறுமை இரண்டையும் குறிக்கும் சொல் ஆகும்!
*• இந்த துஆ மிக எளிமையான
துஆ! இந்த துஆவின் உண்மையான பொருள் என்னவென்றால்
யா அல்லாஹ் நான் உன்னிடம்
சகல விதமான துன்பத்தை விட்டும், கேடுகளை விட்டும்,
ஆழந்த துக்கத்தை விட்டும், கஷ்டத்தை விட்டும், பாதுகாப்புத் தேடுகிறேன்! என்னை சோதிக்காதே!
• இந்த அர்த்தங்கள் அனைத்தும் ‘ அல்லாஹும்ம இன்னி
அஸ்ஆலுக அல் – ஆஃபியா என்ற சிறிய
துஆவில் உள்ளடங்கிவிடும்!
• நாம் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்றால் அதுவும் ஆஃபியா ஆகும்!
• வாழ்வதற்கு போதிய பணம் இருக்குமானால் இதுவும் ஆஃபியா ஆகும்!
• நம்முடைய பிள்ளைகள் எவ்வித தடங்கலுமின்றி நலமாக உள்ளார்கள் என்றால் இதுவும் ஆஃபியா
ஆகும்!
• நாம் செய்த பாவங்களுக்கு அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் நமக்கு தவ்பா செய்யும் வாய்ப்பை
வழங்கி இருந்தால் இதுவும் ஆஃபியா ஆகும்!
• ஹராமானவற்றின் பக்கம் செல்லாமல் அல்லாஹ் நம்மை ஹலாலைக் கொண்டு போதுமாக்கி வைத்து
உள்ளான் என்றால் இதுவும் ஆஃபியா ஆகும்!
அப்படியென்றால் எவ்வளவு அர்த்தம் பொதிந்த துஆ என்பதை நாம்
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
துஆவிற்கு கையை தூக்கினால் எப்ப பார்த்தாலும் வெறும் காசு
பணம் வீடுன்னு காசு பணம் வீடுன்னு காசு பணம் வீடுன்னு கேட்காம அல்லாஹ்விடம்
ஆஃபியத்தை திகமாக கேட்க வேண்டும்
• எனவே இப்படிப்பட்ட அர்த்தம் நிறைந்த
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ
‘ அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா ’
என்ற இந்த துஆவை தினமும்
நமது தொழுகையிலும் தொழுகைக்கு வெளியேவும் கேட்க வேண்டும்! மட்டுமல்ல நமது குடும்பத்தினர்
மற்றும் பிள்ளைகளுக்கும் இந்த துஆவை கற்று கொடுங்க வேண்டும்!
இந்த உலகத்தில் வாழும் காலமெல்லாம் அல்லாஹ்வை
மறக்காதவர்களாக அவனை அதிகம் நினைவுகூரக்கூடியவர்களாக வாழக்கூடிய நல்லோர்களில்
ஒருவராக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக