புதன், 20 ஜூன், 2012

நல்ல பாடம் தந்தாய் இறைவா....உனக்கு நன்றிகள் கோடி...!



அபூ யஜீதுல் புஸ்தாமி ரஹ் அவர்கள் ஓரு மலைச் சரிவில் அமர்ந்து மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் விடை காண முயன்றார்கள். அந்த முயற்சியில் மூழ்கியிருந்த அவர்களுக்கு காற்றும். மழையும். கடுமையான கதிரவனின் கனலும். இருளும். ஓளியும். ஓன்றாகவே தெரிந்தது.  தவத்தின் உச்சகட்டத்தை எட்டிய போது  பசி  அவர்களை அலைகழித்தது. ஓரு நாள் பசியல்ல..... இரண்டு நாள் பசியல்ல...... பதினைந்து நாள் பசியோடு இருந்து தவமியற்றிய அவர்கள் பசியின் தாக்கத்தால் பலமிழந்து சாய்ந்தார்கள்.


விழிகள் பஞ்சடைந்தன. செவிகள் ஓளியேற்க்கும் தன்மையை இழந்தன. அதனால் தட்டு தடுமாறி தள்ளாடி நடந்தார்கள். தடுமாறி விழுந்தார்கள். முடிவில் ஓரு வீட்டு வாயிலில் வந்து கதவைத் தட்டினார்கள். கதவை திறந்து கொன்டு வெளியில் வந்தார் வீட்டுக்காரர்.


பசிக்கிறது ஏதேனும் உணவு தருகிறீர்களா....?  என்று கேட்டார்கள் அபு யஜீதுல் புஸ்தாமி ரஹ்.  தருகிறேன் என சொல்லிவிட்டு  உள்ளே சென்ற வீட்டுச் சொந்தக்காரர். மூன்று ரொட்டியை பொரியாரிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள். 


அந்த வீட்டு வாசலில் படுத்திருந்த நாய் ப யஜீதுல் புஸ்தாமி அவர்களைப் பார்த்து குரைத்தது. இறைநேசரை படி இறங்க விடாமல் தடுத்தது. உடனே பெரியார் அவர்கள் நாயே...ஏன் குரைக்கிறாய்.....? பசிக்கிறதா உனக்கும்....? பரவாயில்லை என்று சொல்லிவிட்டு ஓரு ரொட்டியை நாயிடம் போட்டார்கள்.


அந்த நாய் அந்த ரொட்டியை தின்றுவிட்டு மீண்டும் குரைத்தது. இன்னாரு ரொட்டியையும் அந்த நாயிடம் போட்டார்கள். அந்த நாய் அதையும் தின்றுவிட்டு மீண்டும் முறைத்தது. எனவே மூன்றாவது ரொட்டியையும் அந்த நாயிடம் போட்டார்கள் பெரியார் புஸ்தாமி அவர்கள்.


நாய் அதையும் தின்றுவிட்டு குரைத்தது...முறைத்தது. உடனே பெரியார் அவர்கள்  நாயே.... உன் புத்தியை காட்டி விட்டாயே....! இருந்த மூன்று ரொட்டியும் உனக்கே போட்டு விட்டேன் இன்னும் ஏன் குரைக்கிறாய்...?
என்று கேட்டார்கள். நாய் தன் தலையை உயர்த்தி பார்த்து சொன்னதை இறையருளால் அவர்கள் அறிந்து கொண்டார்கள்.


பெரியவரே....என்னைப் பார்த்தா குறை சொல்கிறீர்...உம்முடைய புத்தியை பார்த்து நானல்லவா வியப்படைகிறேன்...!  நான் இந்த வீட்டின் காவல் நாய். வீட்டுக்காரர்கள் உணவு போட்டால் உண்பேன். போடாவிட்டாலும் பொறுமையாக இருப்பேன்.


எனினும்  இந்த வீட்டை விட்டு நான் நகர மாட்டேன். ஆனால் நீரோ....இறைவனிடம் நெருக்கம் பெற தவமிருந்தீர். இடையில் வந்த பசி தாங்காமல் இறைவனுடைய வாசலை விட்டுவிட்டு அவனுடைய அடியானின் வாசலுக்கு வந்து விட்டிர். இப்பொழுது சொல்லுங்கள். நான் புத்தி கெட்டிருக்கிறேனா....? அல்லது நீங்களா....? என்று நாய் கேட்ப்பதாக இறைவன் அறிவித்துக் கொடுத்தான். 


நல்ல பாடம் தந்தாய். இறைவா.....உனக்கு நன்றிகள் கோடி...என்று கூறிவிட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.


இது அவர்களுடைய பயிச்சியின் ஆரம்ப காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும்.


அன்பிற்க்கினியவர்களே...... இன்று நாம் நம்மைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஓரு சிறு கஷ்டம்...கவலை. ஏற்ப்பட்டுவிட்டால்  உடனே நாம் என்ன செய்கிறோம். ஊரில் உள்ள அனைவரிடமும் கூறிவிட்டு இறுதியாக நாம் இறைவனிடம்  யா.....அல்லாஹ்...என கையேந்துகிறோம்.

அடுத்தவரிடம் கேட்க்கும் போது இருக்கின்ற மன உறுதி அல்லாஹ்விடம் கேட்க்கும் போது இருப்பதில்லை.


நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம்மிடம் இருப்பது இறைநம்பிக்கையா...? என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக