திங்கள், 20 மே, 2024

பணம்.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

எனது பெயர்..........

பணம் என்ற தலைப்பில் நான் இங்கு பேச வந்துள்ளேன்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

இந்த #பணத்தை கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா...

அடேங்கப்பா இந்த பணத்துக்குத் தான் எவ்வளவு #பெயர்கள்...?


கோயில் உண்டியலில் செலுத்தினால் #காணிக்கை என்றும்...


யாசிப்பவருக்குக் கொடுத்தால் #பிச்சை என்றும்...


அர்ச்சகருக்குக் கொடுத்தால் #தட்சணை என்றும்...

 

கல்விக் கூடங்களில் #கட்டணம் என்றும்...


திருமணத்தில் #வரதட்சணை என்றும்... 


திருமண விலக்கில் #ஜீவனாம்சம் என்றும்...


விபத்துகளில் இறந்தால் #நஷ்டஈடு என்றும்...


ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்

#தர்மம் என்றும்...


நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் #தானம் என்றும்...


திருமண வீடுகளில் பரிசாக #மொய் என்றும்...

     

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது #கடன் என்றும்...


திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது #அன்பளிப்பு என்றும்...


விரும்பிக் கொடுத்தால் #நன்கொடை என்றும்...

     

நீதிமன்றத்தில் செலுத்தினால் #அபராதம் என்றும்...

      

அரசுக்குச் செலுத்தினால் #வரி என்றும்...


அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது #நிதி என்றும்...

      

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது #சம்பளம் என்றும்...


தினமும் கிடைப்பது #கூலி என்றும்...

    

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது #ஓய்வூதியம் என்றும்...


சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் #லஞ்சம் என்றும்...

     

கடன் வாங்கினால் அத்தொகைக்கு

#அசல் என்றும்...


வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது #வட்டி என்றும்...


தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு #முதலீடு என்றும்...


தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #இலாபம் என்றும்...

     

குருவிற்குக் கொடுக்கும் போது #குருதட்சணை என்றும்...


ஹோட்டலில் நல்குவது #டிப்ஸ் என்றும்...


இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் #பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...


இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...


சிலர் அன்பை இழக்கின்றனர்...


சிலர் பண்பை இழக்கின்றனர்...


சிலர் நட்புகளை இழக்கின்றனர்...


சிலர் உறவுகளை இழக்கின்றனர்...


சிலர் கற்பை இழக்கின்றனர்...


சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...


சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்...


சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...


சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...


சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்..

இப்படிப்பட்ட பணத்தைப் பற்றி வல்லோன் அல்லாஹ் தன் அருள் மறையாம் திருக்குர்ஆனில் தெளிவாக கூறுகிறான். 


وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ (28)

உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! ( அல் குர்ஆன்: 8: 28 )


கஅப் பின் இயாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: "ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்குச் செல்வம் சோதனையாகும்'' என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இது மட்டுமல்ல இந்த பணத்திற்காக மனிதன் எந்த அளவுக்கு செல்வான் என்றால் அதையும் நமது மன்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: "தாம் சம்பாதித்தது ஹலாலா? ஹராமா? என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி 2059 )

எனவே இப்படிப்பட்ட பணத்தை இந்த உலகத்தில் நாம் வாழும் காலமெல்லாம் சரியான ஹலாலான வழியில் சம்பாதித்து நாளை மறுமையில் நன்மையையும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் பெற்றுத் தரும் வழியில் செலவழிக்க கூடிய நல்லோர்களாக நம்மையும் நமது குடும்பத்தினர்களையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக