குழப்பமான சூழ்நிலையில் சரியானதை தேர்வு செய்ய நபி (ஸல்) அவர்களின் அழகிய வழி காட்டல்!
• இஸ்லாம் நமக்கு ஒவ்வொரு செயலையும் பற்றியும் அழகிய முறையில் வழி காட்டி உள்ளது!
• நம்மில் பலருக்கு ஒன்றை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படலாம்! இதை தேர்வு செய்வது நமக்கு நல்லதா அல்லது தீங்கா? இவரை நிக்காஹ் செய்யலாமா? இந்த படிப்பு தேர்வு செய்யலாமா வேண்டாமா? இவ்வாறு பல குழப்பம் ஏற்படும் எதை தேர்வு செய்வது என்பதில்!
• இவ்வாறு குழப்பம் ஏற்பட்டால் சிறந்த ஒன்றை தேர்வு செய்ய நாம் அல்லாஹ்விடம் உதவி கேட்கலாம்! இதற்கு நாம் அழகிய முறையில் உளூ செய்து இரண்டு ரக்ஆத் தொழ வேண்டும் இதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும்!
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள். அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர் 'இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தையும்விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1162)
💟 இஸ்திகாரா தொழுகை முறை :
• இஸ்திகாரா தொழுகை நாம் வழமையாக தொழுவது போல் தான் இரண்டு ரக்ஆத் தொழ வேண்டும் இதற்கு என்று குறிப்பிட்ட தொழுகை முறை கிடையாது!
• இஸ்திகாரா தொழுகை தொழ பின்பு இஸ்திகாராவிற்கு என்று நபி (ஸல்) அவர்கள் துஆ கற்று கொடுத்து உள்ளார்கள் அதனை கூறி நாம் அல்லாஹ்விடம் கேட்கவேண்டும்!
❤️ தொழுகையின் நிய்யத் :
• உள்ளத்தில் இஸ்திகாரா தொழுகிறேன் என்று எண்ணம் இருந்தால் போதும் வாயினால் கூற வேண்டியது கிடையாது!
❤️ இஸ்திகாரா தொழுகை சுன்னாஹ் & நஃபிலா :
• இது சுன்னத் ஆன தொழுகை ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1162)
❤️ என்ன சூராக்களை ஓத வேண்டும் :
• குறிப்பிட்ட சூராக்களை ஓத வேண்டும் என்று கிடையாது நமக்கு நன்கு மனனம் உள்ள சூராக்களை ஓதி நாம் தொழுது கொள்ளலாம்!
❤️ எத்தனை ரக்ஆத்துகள் தொழ வேண்டும் :
• இரண்டு ரக்ஆத்துகள் தொழு வேண்டும்!
❤️ எந்த நேரத்தில் தொழுக வேண்டும் :
• பொதுவாக தொழ தடுக்கப்பட்ட ஐந்து நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் நாம் தொழுது கொள்ளலாம்!
💙 தொழ தடுக்கப்பட்ட 5 நேரங்கள் :
1) பஜ்ர் பின்பு இருந்து சூரியன் உதயம் ஆகும் வரை தொழ கூடாது :
(நூல் : ஸஹீஹ் ஜாமிஃ : 678)
2) சூரியன் உதயம் ஆகும் பொழுது தொழ கூடாது!
3) சூரியன் உச்சியில் இருந்து சாயும் வரை உள்ள நேரத்தில் தொழ கூடாது!
4) சூரியன் சாய்ந்ததில் இருந்து மறையும் வரை உள்ள நேரத்தில் தொழ கூடாது!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 831)
5) அஸர் தொழுகைக்கு பின்பு இருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரத்தில் தொழ கூடாது!
(நூல் : புகாரி : 581 | முஸ்லீம் : 827)
• உதாரணமாக : சூரிய உதயம் 6 : 00 மணி என்றால் நாம் 6 :10 அல்லது 6:15 மணிக்கு பிறகு நாம் தொழுகலாம்!
💟 இஸ்திகார துஆ :
• இரண்டு ரக்ஆத் இஸ்திகார தொழ பின்பு நாம் கிழே உள்ள துஆவை கேட்க பின்பு நம்முடைய தேவைகளை கேட்கலாம்!
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பிஇல்மி(க்)க லஅஸ்தக்திரு(க்)க பிகுத்ரதி(க்)க வஅஸ்அலு(க்)க மின் ஃபழ்லி(க்)கல் அளீம். ஃப இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வதஃலமு வலா அஃலமு வஅன்(த்)த அல்லாமுல் குயூப்.
அல்லாஹும்ம இன்குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைரு(ன்)ல் லீ ஃபீதீனீ வமஆஷீ வஆ(க்)கிப(த்)தி அம்ரீ ஃபக்துர்ஹுலீ வயஸ்ஸிர்ஹுலீ ஸும்ம பாரிக்லீ ஃபீஹி வஇன்குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ரு(ன்)ல்லீ ஃபீதீனீ வமஆஷீ வஆ(க்)கிப(த்)தி அம்ரீ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ வஸ்ரிஃப்னீ அன்ஹு வக்துர்லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ழினீ பிஹி
பொருள் : இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தையும்விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1162)
💟 எப்போது துஆ செய்ய வேண்டும் :
• பலர் இஸ்திகார துஆவை தொழுகையின் போது ஸஜ்தாவிழும் இன்னும் சிலர் அத்தஹியாத் இருப்பிலும் ஓதுவார்கள் ஆனால் இது பிழையான ஒன்றாகும்!
• இஸ்திகார துஆவை நாம் தொழுத பின்பு அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்!
(பஃத்வா :ஷெய்க் அல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) : அல் ஃபத்தாவா அல் குப்ரா : 2 / 265)
💟 இஸ்திகாரா தொழுகை பற்றிய சில கேள்வி / பதில்கள் :
1) இஸ்திகாரா தொழுகை தொழுத பின்பு உறக்கினால் கனவில் அல்லாஹ் நமக்கு பதில் அளிப்பான் என்கிறார்கள் இது உண்மையா?
பதில் :) இல்லை! இவ்வாறு ஒரு வழிமுறை இஸ்லாம் நமக்கு கூறவில்லை! அல்லாஹ் நம்முடைய துஆவிற்கு எந்த வழியில் வேண்டும் என்றாலும் பதில் அளிப்பான்! குறிப்பிட்ட முறையில் தான் நமக்கு பதில் கிடைக்கும் என்பதற்கு ஆதாரமும் கிடையாது!
2) எங்கள் சார்பாக வேறு யாராவது இஸ்திகாரா தொழுகை தொழ முடியுமா?
பதில் :) இல்லை ! நம்முடைய தேவைகளுக்கு நாம் தான் தொழுது கேட்க வேண்டும்!
3) நம்மிடம் இந்த துஆ மனம் இல்லையென்றால் அதைப் பார்த்து இந்த துவாவைப் படிக்கலாமா?
பதில் :) ஆம் தாராளமாக படிக்கலாம் !
4) நாம் இந்த துஆவை அரபியில் தான் கேட்க வேண்டுமா? அல்லது நமக்கு தெரிந்த மொழியில் துஆவை கேட்கலாமா?
பதில் :) நமக்கு அரபியில் அதை எப்படி படிப்பது அல்லது சொல்வது என்று தெரியவில்லை என்றால், நாம் நமக்கு தெரிந்த மொழியில் கேட்கலாம்!
5) இஸ்திகாரா தொழுகை எவ்வளவு ரக்ஆத் தொழுகலாம்? அதற்கு ஏதேனும் எல்லை உண்டா?
பதில் :) குறைந்தது இரண்டு ரக்ஆத் தொழுதால் போதுமானது ஆகும்! அதிகப்படியாக இரண்டு இரண்டு ரக்ஆத்களாக எவ்வளவு வேண்டும் என்றாலும் தொழுகலாம் வரம்பு ஏதும் இல்லை!
6) இந்த தொழுகை தொழ குறிப்பிட்ட வயது ஏதேனும் உள்ளதா?
பதில் :) அனைவரும் இந்த தொழுகையை தொழுகலாம்!
7) இஸ்திகாராவின் அறிகுறிகள் உள்ளதா? அல்லது இஸ்திகாரா தொழுகைக்கு எவ்வாறு பதில் அளிக்கப்படுகிறது?
பதில் :) 1) நமக்கு ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும் விசயத்தை பற்றி குழப்பம் ஏற்பட்டால் அதை பற்றி தெரிந்த நம்பிக்கையான நபரிடம் கூறி முதலில் ஆலோசனை கேட்க வேண்டும்! பின்பு இஸ்திகாரா தொழுகை தொழுது! அல்லாஹ்விடம் சிறந்த வழி காட்டுதலை கேட்க வேண்டும்!
2) இதன் பின்பு இரண்டில் அல்லது எதில் நமக்கு மனம் இதை தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அதை தேர்வு செய்ய வேண்டும்!
3) நீங்கள் தேர்வு செய்த ஒன்று சரியாக இருந்தால் அல்லாஹ் அதற்கான பாதையை எளிதாக்கி வைப்பான்! அது தவறு என்றால் தடுங்கல் சிரமம் அதில் ஏற்படும் இதில் இருந்து அது நமக்கு ஏற்றது அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்!
4) அல்லது நாம் தேர்வு செய்த ஒன்று நமக்கு நஷ்டத்தையும் தரலாம் அல்லாஹ் இதன் மூலம் வேறு சிறந்த வழியை நமக்கு காட்ட கூட ஆரம்பத்தில் நஷ்டத்தையும் கொடுப்பான்!
@அல்லாஹ் போதுமானவன் 💞
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக