செவ்வாய், 21 மே, 2024

அம்மாவுக்கு ஒரு கவிதை.

 


அம்மா…இன்று நீங்கள் என்னை ஃபஜருக்கு எழுப்பவில்லை 


✒️✒️✒️✒️✒️✒️✒️


அம்மா…என் மீது உனக்கு எவ்வளவு அன்பு


                                 الله

உங்களுக்கு அருள் புரிவானாக......


அம்மா…..நான் கஷ்டப்பட கூடாது 


நான் கவலை பட கூடாது.


நான் அழ கூடாது


நான் அடிப்பட கூடாது


நான் அடிவாங்க கூடாது


நான் விழ கூடாது


நான் தோற்க கூடாது


என


என் மீது உனக்கு எவ்வளவு அன்பு.


ஆனால் இந்த அன்பு தற்காலிகமானதா???


அம்மா…இதை விட எல்லாம் கொடுமையானது 


மரண நேரம்


கப்ருடைய அந்த மண்ணறை வாழ்க்கை


மறுமை தீர்ப்பு நாள்


நரக வேதனை


இங்கே எனக்காக விழுந்து விழுந்து உழைத்த நீ கூட அங்கே எனக்கு உதவி செய்ய முடியாது அம்மா…


யா நஃப்ஸி‌‌.......

யா நஃப்ஸி.......

யா நஃப்ஸி........ என்று


என்னை அனாதையாய் விட்டு விட்டு ஒடுவாய் அம்மா…


அப்படிப்பட்ட அந்த நாளில்


உன் பிள்ளை பாசமாக 

நீ பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளையான நான் 


ஃபஜர் தொழாததால்


தொழுகையை விட்டததால்


அல்லாஹ்வின் இல்லத்திற்கே செல்லாததால்


மார்க்க கல்வியை கற்றுக் கொள்ளாததால் 


வேதனை செய்யப்படுவேனே


நரக நெருப்பில் தள்ள படுவேனே


அப்போது எனக்கு வழிக்காதா???


அதை பார்த்து உனக்கு வலிக்காதா…?


உன் அன்பு போலியானதா??? 

அம்மா…


என்னை சொர்க்கம் அழைத்து செல்லும் தாயாக நீ மாற வேண்டாமா???


அம்மா…மரணம் வரை தானே இந்த உலக வாழ்க்கை


என்னை மீட்டெடு அம்மா......


உன் பிள்ளையாகிய நான் ஸாலிஹான பிள்ளையாக உருவாக என்னை மீட்டெடு


சிறந்த தலைமுறையாக வாழ என்னை உருவாக்கு


இப்படிக்கு

உன் அன்பு பிள்ளை

🤲

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக