புதன், 21 பிப்ரவரி, 2024

நான் சாதித்து விட்டேன். (கதை)


 " அன்று பெளர்ணமி.

இரவு நேரம்.

முல்லா வீதியில் நடந்து போய் கொண்டிருந்தார்.

வழியில் ஒரு கிணறு.

அனைவருக்கும் வருகிற ஆசை,
முல்லாவுக்கும் வந்தது.
உடனே
கிணற்றை எட்டிப்பார்த்தார்.

அதிர்ச்சியடைந்தார்.

'அடப்பாவமே !
நிலா,
வானத்திலிருந்து வழுக்கி கிணற்று நீரில் விழுந்து விட்டதே.



அதை உடனடியாக கிணற்றிலிருந்து காப்பாற்றி,
ஆகாயத்துக்கு அனுப்பி விட வேண்டும்.
அப்போதுதானே,
நிலா தேய்ந்து வளரும்.
அடுத்த மாதம் ' ரம்ஜான் '
வருகிறது.
அவசியம் ' பிறை ' பார்க்க வேண்டுமே.
ஆகவே,
உடனடியாக நிலவை,
கிணற்றிலிருந்து காப்பாற்றயாக வேண்டும். '

ஓட்டமும் நடையுமாக,
வீட்டிற்கு ஓடி,
ஒரு பெரிய கயிறை எடுத்துக்கொண்டு
மீண்டும் கிணற்றுக்கு ஓடினார் முல்லா.

கயிற்றின் ஒரு முனையை பலமாக பிடித்துக்கொண்டு,
மறு முனையை கிணற்றுக்குள் வீசினார்.

' பிடித்துக்கொள்.
பலமாக கயிற்றை பிடித்துக் கொள் நிலவே ' என்று உரத்த கத்தினார்.

கிணற்றில் இருக்கும் நிலவுக்கு கேட்க வேண்டுமே.

கயிறு,
கிணற்றின் ஆழத்தில்
எதோ ஒன்றில் மாட்டிக் கொண்டது.

முல்லா பலமாக கயிற்றை இழுத்தார்.

அவர் எதிர்பாராத விதமாக
கயிறு அறுந்து,
முல்லா தரையில் விழுந்தார்.

உடனே வானத்திலிருந்த நிலவை பார்த்தார்.

' அப்பாடா !
நிலவை காப்பாற்றி விட்டோம்.😁😁

இனி அனைவரும்
அடுத்த மாதம் பண்டிகையை கொண்டாடலாம்.'😆😆

பெருமிதமாக எழுந்து நடந்தார் முல்லா.😷😷😷
*-----*

முல்லா போல்தான்
சிலர்,
எல்லாமே இருந்தபடியே இருந்தாலும்,

அதிலிருந்து
தான் ஏதோ சாதித்து விட்டதாக

தனக்குத்தானே கற்பனையில் உழன்று
பெருமிதம் கொள்கிறார்கள்.

மனிதன் இப்படிதான்
தனது ஆணவத்திற்கு கற்பனையால் தீனிப் போட்டுக் கொண்டே இருக்கிறான்."

-- ஓஷோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக