நபிமார்களை உதாரணம் காட்டி அர்த்தம் நிறைந்த ஒரு சிறிய துஆ
செய்ய
நமது மதரஸா மாணவர் / மாணவி
.................... வருகிறார்.
யா அல்லாஹ் ! எங்களுக்கு நபி ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களின் மன்னிப்பை கொடுப்பாயாக,
யா அல்லாஹ் எங்களுக்கு நபி நூஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் நீண்ட
ஆயுளை கொடுப்பாயாக.
யா அல்லாஹ் ! எங்களுக்கு நபி இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்களின்
வீரத்தை கொடுப்பாயாக,
யா அல்லாஹ் எங்களுக்கு நபி யாகூப் அலைஹி வஸல்லம் அவர்கள் போல்
குழந்தை செல்வத்தை கொடுப்பாயாக
யா அல்லாஹ்!எங்களுக்கு நபி யூசுப் அலைஹி வஸல்லம் அவர்களின் அழகையும்
நற்குணத்தையும் கொடுப்பாயாக,
யா அல்லாஹ்!எங்களுக்கு நபி மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் தைரியத்தை
கொடுப்பாயாக
யா அல்லாஹ்!எங்களுக்கு நபி சுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களின்
செல்வத்தை கொடுப்பாயாக,
யாஅல்லாஹ்! எங்களுக்கு நபி அய்யூஃப் அலைஹி வஸல்லம் அவர்களின்
பொறுமையை கொடுப்பாயாக
யா அல்லாஹ்!எங்களுக்கு நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவை
கொடுப்பாயாக ,
யா அல்லாஹ் !எங்களுக்கு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின்
தக்வா எனும் இறை அச்சத்தை கொடுப்பாயாக
யா அல்லாஹ்!
உன்னிடமே நாங்கள் மீள இருக்கின்றோம். ஆகையால்
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்
எங்களுக்கு உதவி செய்வாயாக!
மனம் திறந்து கேட்கிறோம். யா அல்லாஹ்...
எங்களுக்கு எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வாயாக நாயனே!!
ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக