பக்கங்கள்
▼
வியாழன், 30 ஏப்ரல், 2020
யார் அந்தப் பேரறிஞர்..?
மெளலானா, எஸ், லியாகத் அலீ மன்பஈ
திடீரென ஒரு நாள் கனவொன்று கண்டேன். ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
மரணமாகிறார்கள். மக்களெல்லாம் ஜனாஸா இறுதி ஊர்வலத்தில் திரளாகச் செல்வது அவர்களின் போன்று அதில் காட்சி ஓடியது.
விழித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்து, கனவு விளக்கம் சொல்வோரிடம் சென்று விசாரித்தேன். இப்பொழுதுள்ள பேரறிஞர்களில் ஒருவர் சமீபத்தில் மரணிக்கப்போகும் முன்னறிவிப்புதான் இது
இத்தா கேள்வி:பதில்
தொகுப்பு: எம். ஷெய்கு அப்துல் காதிர் காஷிஃபி
இத்தா குறித்து வாசகர்கள் கேட்ட பல ஐயங்களுக்கு விளக்கமாகவே இக்கட்டுரை கேள்வி
பதிலாக தரப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள பல விளக்கங்கள் திறமைமிக்க மார்க்கச் சட்ட
வல்லுனர்களான முஃப்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஃபதாவா ரஹீமிய்யா.
அஹ்ஸனுல் ஃபதாவா எனும் ஃபத்வா தொகுப்புகளிலிருந்து எழுதப்பட்டுள்ளது. (ஆசிரியர்)
அஹ்ஸனுல் ஃபதாவா எனும் ஃபத்வா தொகுப்புகளிலிருந்து எழுதப்பட்டுள்ளது. (ஆசிரியர்)
புதன், 29 ஏப்ரல், 2020
மூவரில் ஒருவர் மட்டுமே
மெளலானா S. லியாகத் அலி மன்பஈ
இஸ்ரவேலர்களில் மூவர் அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
வகையான சோதனையில்
பீடிக்கப்பட்டிருந்தனர் அவர்களுக்கு முன்னால் இறைவனின் புறத்திலிருந்து நல்லதொரு வாய்ப்பு வந்தது. அந்த
வாய்ப்பைப் பெற்ற பிறகு அவர்கள் மீண்டும்
என்னவானார்கள் என்பதை தான் நபி ஸல் அவர்கள் அழகாக எடுத்துரைக்க, அன்புத் தோழர்
அபூஹுரைரா (ரலி) அவர் கள் அறிவிக்க, ஹதீஸ்
கலா மாமேதைகளான இமாம் புஹாரி (ரஹ்), இமாம் முஸ்லிம்
(ரஹ்) உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர். (மிஷ்காத், பக்கம்-165)
மெளலானா பதில்கள்
கேள்வி:ஆண்கள் மேலாடை (பனியன் கூட) இல்லாமல் கைலி மட்டும்
அணிந்து ஒளூ செய்தால் கூடுமா? அல்லது மேலாடை அணிந்து ஒளு செய்ய வேண்டுமா..?
பதில் : மேலாடை (சட்டை, ஜுப்பா, பனியன்) இல்லாமல்
கைலி அணிந்து கொண்டு ஒளு செய்தால்
கூடும். அதில் தவறதுமில்லை. ஆனால் இயன்ற வரை தலையை மறைப்பது சிறந்தது
(ஆப்கே மஸாயில், பக்கம் - 39.43, பாகம் - 2)
செவ்வாய், 28 ஏப்ரல், 2020
அல்லாஹ் விரும்பும் மனிதன்
(மவ்லவி காரி அப்துல் பாரி பாகவி, வேலூர்.)
அல்லா ஹுத்தஆலாவிடமிருந்து நபி மூசா கலீமுல்லாஹ் (அலை)
அவர்களுக்கு வஹீ வந்தது ஏ மூசா, நாம் உங்களைத்
தேர்வு செய்திருக்கிறோம்.
நபி மூசா (அலை) அவர்கள் கேட்டார்கள்
யா ரப்பே...! எந்த சிறப்பு அம்சத்தை வைத்து மக்களைத் தேர்வு
செய்கிறாய்? அது என்னவென்று தெரிந்தால அதை நான் மேலும் அதிகப்படுத்திக்
கொள்வேன்.
மெளலானா பதில்கள்
கேள்வி : ஜும்ஆவுடைய தொழுகை வாஜிபா? ஃபர்ளா? மற்றத் தொழுகைகளை காட்டிலும் ஜும்ஆவுடைய தொழுகையில் மக்கள் ஏன் அதிகம்
கலந்து கொள்கிறார்கள்
பதில் : ஜும்ஆ தொழுகை மற்ற ஐவேளைத் தொழுகைகளைப் போன்று ஃபர்ளாகும். ஃபர்ளுத் தொழுகையை ஃபர்ளு இல்லை என
மறுத்தால் அவன் காஃபிராகி
விடுவான். ஜும்ஆ தொழுகை ஃபர்ளு என்பது குர்ஆன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகும்
மெளலானா - பதில்கள் 2008. ஜூன் மாதம்
கேள்வி : கம்பெனிகளில்
வேலை செயபவர்கள் ஷ-சாக்ஸ் அணியும் கட்டாய சூழ்நிலையில், ஒளுவின் போது கால்களை கழுகுவதற்குப்
பகரமாக சாக்ஸில் மஸஹ் செய்யலாமா ஹதீஸில் கூறப்பட்டுள்ள "குப்பைன்” (மோஜாவின்) சட்டம் சாக்ஸிற்கு பொருந்துமா? பொருந்தாதா? ஆதாரம் என்ன...?
திங்கள், 27 ஏப்ரல், 2020
மௌலானா பதில்கள்.
கேள்வி:
அரசு மூலம் தரப்படும் லோன் - கடன் பெற்று வியாபாரம்
செய்யலாமா...?
பதில்: வட்டிக்கு கடன் வாங்கி அதன் மூலம் வியாபாரம் செய்வதால் அபிவிருத்தியின்மையும், வாழ்வில் நிம்மதியின்மையும் உருவாகும். அத்தோடு மறுமையில் வட்டியைப் புசிப்பவருக்கு கொடுக்கப்படவிருக்கும் தண்டனைகள் குறித்த எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ளுங்கள். இப்போது புரிந்திருக்குமே அரசிடம் வட்டிக்குக் கடன் பெற்று வியாபாரம் செய்வது கூடாது என்பது
கேள்வி பதில்கள்.
கேள்வி : என் வயது 45. பதினைந்து
வருடங்கள் முன்பு கணவர் இறந்து விட்டார். தற்போது நான் என் மகனுடன் தான் ஹஜ் செய்ய
வேண்டுமா? அல்லது தனியாக
ஹஜ் கமிட்டி மூலமாக நிறைவேற்றலாமா?
பதில் : ஒரு பெண் 48 மைல்கள்
தூரம் உள்ள ஊர்களுக்கு பயணிப்பதாக இருந்தால் அவளுடன் மஹ்ரமான நபர்கள் இருத்தல்
அவசியமாகும். ஏனெனில் மஹ்ரமான நபர் துணையில்லாமல் ஒரு பெண் பயணிப்பதை நபி ஸல் அவர்கள் தடை
செய்துள்ளார்கள்.
ஞாயிறு, 26 ஏப்ரல், 2020
இமாமும்.. இமாமத்தும்.
எழுதியவர். மர்ஹும். மெளலானா K.A. நிஜாமுத்தீன் மன்பயி. ஹழ்ரத் அவர்கள்.
இமாம்! அவர் மகத்துவத்திற்குரியவர்
இமாமத்! - அது ஒரு மகத்தான பணி!
அதற்கு நிகராக உலகில் வேறு எந்தப் பணியும் கிடையாது. மிகத் தூய எண்ணத்துடன்- அல்லாஹ்வுக்காக இமாமத் செய்கிற இமாம் கண்ணியத்திற்குரியவர்; புண்ணியத்திற்குரியவர்
சனி, 25 ஏப்ரல், 2020
வெள்ளி, 24 ஏப்ரல், 2020
ஜனாஸா ஒழுக்கங்கள்.
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
பின்னர் அல்லாஹ் மனிதனை மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனை மண்ணறையில் ஆக்குகிறான். (திருக்குர்ஆன் 8:21)
மனிதனின் அனைத்து காரியங்களிலும் சட்டத் திட்டங்களை அமைத்து வாழ்க்கை நெறியை
வகுத்து தருகிறது இஸ்லாம். ஒவ்வொரு மனிதனுடைய இறப்பு நேரத்திலும், அதன் பிறகும்
சில ஒழுக்கங்களை பிற மனிதர்கள் கடை பிடிப்பது அவசியமாகும்.
அர்த்தமுள்ள ஆன்மீகம். 1
அல்லாஹ்வினுடைய அன்பும் அருளும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக.
அர்த்தமுள்ள ஆன்மீகத்தில் இன்றையதினம் குர்ஆனிலும் ஹதீஸிலும் அதிகமாக
வந்திருக்கின்ற மட்டுமல்ல நமது செவிகளில் அதிகமாக கேள்விப்பட்டிருக்கின்ற ஒரு நிகழ்ச்சியை
இப்போது நாம் நினைவுகூர இருக்கின்றோம்.
புதன், 22 ஏப்ரல், 2020
சோப்பு எப்படி உருவானது...?
மெசபடோமியப் பிரதேசத்தின்
புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் (தற்போதைய ஈராக்கின்
அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ்; Al Hillah & Babil
Province) கடைசி அரசரான நபோனிதஸ்
(கி.மு.556 – கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து
வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை
பயன்படுத்தி சலவைக்கற்களின் (Marble) மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர். இதனை ஒரு நாள்
தற்செயலாக பார்வையிட்ட நபோனிதஸ் இது குறித்து தன்னுடைய அரண்மனை ரசவாதிகளிடம்
(வேதியியலாளர்கள்) விவாதம் செய்தார். இந்த நிகழ்வுதான் சோப்பு தயாரிப்பிற்கு
வித்திட்டது என்று சொல்லலாம்.