பக்கங்கள்

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

தொழுகையாளியின் செயல்கள்.


தொழுகையை சரியாக தொழுது வரும் தொழுகையாளிகளின் தன்மைகள் தொழுகைக்கு வெளியேயும் எவ்வாறு அமைய வேண்டும். அவர்களுடைய குணங்கள் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். இந்த குணம் உள்ளவர்களைத் தான் அல்லாஹ் தொழுகையாளிகள் என்பதாக அழைக்கிறான்.


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே.....

ஒரு தொழுகையாளி எப்படி இருப்பார் என்றால்...

தங்கள் செல்வத்தில் ஏழைகளுக்கு ஜகாத் என்ற தர்மத்தை
வழங்குவார்கள்.

மேலும் யாசிப்போர்க்கும், வெட்கத்தால் கேட்காமல் இருக்கும்
தேவையுடைய ஏழைகளுக்கும் செல்வத்தால் உதவி செய்வார்கள்

நியாயத் தீர்ப்பு நாளை மனதில் அஞ்சி செயல்படுவார்கள்

அல்லாஹ்வின் தண்டனைக்கு பயந்து பெரும் பாவத்தை
விட்டும் விலகி நடந்துகொள்வார்கள்

தங்கள் கற்பை (மறைவிடங்களை) ஹராமான செயலை விட்டும் பாதுகாத்துக் கொள்வார்கள்

அமானிதங்களையும் வாக்குறுதிகளையும் பேணிப் பாதுகாப்பார்கள்

சாட்சியங்களை உண்மைக்காக நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பார்கள்

தங்கள் தொழுகையில் பேணுதலாக இருப்பார்கள்.


மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக