பக்கங்கள்

சனி, 25 ஏப்ரல், 2020

நபி(ஸல்) அவர்களின் உயர்பண்புகள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக. நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் ................................................

நான் இங்கு  நபி ஸல் அவர்களின் உயர்ந்த பண்புகளைப் பற்றி பேச வந்துள்ளேன்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....


நபிஸல்) அவர்கள் எப்பொழுதும் முகமலாச்சியுடன் திகழ்வார்கள், மென்மையான குணம் உடையவர்கள், விரைவாக இரக்கப்படுவார்கள். நபி(ஸல்) அவர்கள் மீது ஆதரவு வைப்பவர் ஏமாற்றப்படமாட்டார், அறுவருப்பான விஷயங்களை பேசமாட்டார்கள்
எவரையும் குறை சொல்லமாட்டார்கள், மேலும், யார் பேசினாலும் அவர் பேசி முடிக்கும்வரை, அவரது பேச்சைத் துண்டிக்கமாட்டார்கள், உரக்க சப்தமிட்டுப் பேசமாட்டார்கள். அவர்களின் குறைவான வார்த்தைகள் அதிக அர்த்தம் பொதிந்தவையாக இருக்கும் என ஹழ்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹுதாஆலா ரஸுலுல்லாஹ் முதன்முதலில் நமது நாயகம்
முஹம்மதுர் (ஸல்) அவர்களையே ஒளியாகப் படைத்தான்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய பண்புகள் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள் என ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும்
அவர்கள் ஒரு போதும் 'இல்லை' என்று சொன்னதில்லை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப்பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஏதேனுமொன்றை வெறுத்தால், அந்த வெறுப்பை அவர்களது முகத்திலிருந்தே நாங்கள் அறிந்து விடுவோம் என நபித்தோழர் அபூசயீத் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்

நபி(ஸல்) அவர்கள் சுப்ஹூத் தொமுகையை முடித்த பின் சூரியன் உதயமாவதற்கு முன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திரிக்க மாட்டார்கள்

நபி(ஸல்) அவர்களை மக்கள் எளிதில் சந்திக்கமுடியம் இன்னும் நெருங்கிப் பழக முடியும். பாதிக்கப்பட்டவர்கள் நபி(ஸல்) அவர்களை எளிதில் அணுக தம் உரிமைகளைப் பெற்று கொள்வார்கள். மக்களுடன் இலகுவாக நெருங்கிப் பழகும்போது தமக்கு ஏற்பட்ட சிரமங்களை நபி(ஸல்) அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்

நபிஸல்) அவர்கள் தமது கையால் எதையும் எப்போதும் அடித்ததில்லை. எந்தப் பெண்ணையும், எந்த ஊழியரையும் அடித்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் தம்மைப் புண்படுத்தியவர் எவரையும் எப்போதும் பழி வாங்கியதில்லை.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒளிரும் வெண்ணிறம்
கொண்டவர்களாக இருந்தார்கள் அவர்களின் வியர்வைத்துளிகள்
முத்துக்களைப் போன்றிருக்கும். இன்னும் நறுமணம் கமழ்பவர்களாகவே இருந்தார்கள் என ஹழ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்களின் வியர்வைத் துளியை எடுத்து நறுமணப் பொருளோடு சேர்த்தால், அப் பொருள் அதிகம் வாசனையைத் தரக் கூடியதாக ஆகிவிடும் என ஸஹாபாக்கள் கூறியுள்ளனர்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகான முகம் உடையவர்களாகவும், அழகான உருவ அமைப்பு உள்ளவர்களாகவும் இருந்தார்கள் என ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்

நபிஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
நான் முஹம்மத் புகழப்பட்டவர்) ஆவேன்.
நான் 'அஹ்மத் (இறைவனை அதிகமாக புகழ்பவர்) ஆவேன்.
நான் 'மாஹீ (அழிப்பவர்) ஆவேன். என் மூலம் இறைமறுப்பு அழிக்கப்படுகிறது
நான் 'ஹாஷிர்' (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன். மக்கள் எனக்குப்
பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
நான் 'ஆகிப்’ (இறுதியானவர் ஆவேன். எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் இல்லை என்பதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஹழ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ்வின் மீதாணையாக நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல் அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த எதைப் பற்றியும் 'இன்னின்னதை நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் 'நீ இன்னின்னதைச் செய்திருக்கக் கூடாதா?' என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதாக எனக்குத் தெரியவில்லை

நமது மன்னர் பெருமானார் ஸல் அவர்கள் தன் உயிருக்கும் மேலாக நேசிப்பவர்களாக அவர்களின் வாழ்வை முழுமையாக பின் பற்றுவோராக நம்மையும் நமது குடும்பத்தனர்களையும் அல்லாஹ்  ஆக்கி அருள் புரிவானாக.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக