செவ்வாய், 31 மார்ச், 2020

நாவடக்கம்.


எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே  நிலவட்டுமாக அன்பிற்குரியவர்களே நாவடக்கம் பற்றி நான் இங்கு பேச வந்திருக்கின்றேன். 

நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது நாவடக்கத்தைப் பற்றி ஆசிரியர்கள் போதிக்கும் போது வள்ளுவர் கூறிய ஒரு குரலை நமக்கு சொல்லித் தருவார்கள். யாகவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்ற குரலை நமக்குச் சொல்லித் தருவார்கள்.

இவ்வுலகில் நாம் வாழும் போது நமது நாவை தீமையிலிருந்து காத்தால் அது நம்மை சோகத்தில் இருந்து காக்க கூடியதாக இருக்கிறது.  ஒரு வார்த்தை சொல்வார்கள் பல்லக்கு ஏறுவது நாவாலே பல்லு உடைவதும் நாவாலே என்பதாக கூறுவார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தனது நாவை இரண்டு வகையாக அவன் கட்டுப்படுத்தவேண்டும்.

முதலாவது தேவையானவற்றை மட்டுமே பேச வேண்டும் இதனால் அவனது உடல் மட்டுமல்ல உள்ளமும் பாதுகாப்பாக இருக்கும்.

இரண்டாவது உணவை உண்ணக் கூடிய விஷயத்தில் அவன் தன் நாவை கட்டுப்படுத்தவேண்டும். நாவிற்கு சுவையாக இருப்பதையெல்லாம் அளவிற்கு அதிகமாக சாப்பிடாமல் இருந்தால் உடலும் உள்ளமும் அது சுகமாக இருக்கும்.

நமக்குத் தெரிந்த உரிய மனிதர்களை மட்டுமே நம் வீட்டு வாயிலுக்குள் வர அனுமதிப்பதை போல உரிய பேச்சுக்களை மட்டுமே  நாம் பேச வேண்டும் அதனால்தான் இரண்டிற்குமே அதாவது வீட்டினுடைய வாயிலுக்கும் மனிதனுடைய வாய்க்கும்   வாயில் என்பதாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் தன் நாவை காப்பவனாக இருக்கவில்லை என்றால் அது அல்லாத வேறு எதனையும் அவன் காப்பவன் ஆக இருக்க முடியாது. என்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

நாம் பேசக்கூடிய பேச்சி 8 இலக்கணம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.

1. உண்மை 2.நன்மை 3.அன்பு 4.நிதானம் 5.இனிமை 6.ஆழம் 7.சமயம் 8. சபை ஆகிய எட்டு இலக்கணங்கள் பொருந்தியதாக இருக்க வேண்டும்.

1. உண்மையே பேசவேண்டும் பொய் பேசக்கூடாது 

2. நன்மையான அதையே பேசவேண்டும் தீமையானது பேசக்கூடாது 

3. எல்லோரிடமும் அன்பாக பேசவேண்டும் வெறுப்போடு பேசக்கூடாது 

4. எதையும் நிதானமாக பேசவேண்டும் அவசரமாக பேசக்கூடாது 

5. இனிமையாக பேசவேண்டும்  கடுப்போடு பேசக்கூடாது 

6. கருத்தாழம் உள்ளதையே பேசவேண்டும் கருந்தற்ற பேச்சுக்களை பேசக் கூடாது 

7. நேரம் அறிந்து பேசவேண்டும் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் பேசக்கூடாது 

8. சபை அறிந்து பேசவேண்டும் எல்லா சபைகளிலும் எல்லாவற்றையும் பேசக்கூடாது.

பேசாத பேச்சுக்கு நீ எஜமான் பேசிய பேச்சுக்கள் உனக்கு எஜமான் என்பதாக ஒரு பழமொழி கூட சொல்வார்கள்.

நமது வாயில் பேச்சுக்கள் எவ்வாறு உருவாகிறது என்றால் நமது குரல்வளை பெட்டி போன்ற அமைப்பு கொண்டது அதனுடைய உட்புறச் சுவர் பல தசை நார்களால் பின்னப்பட்டுள்ளன இவற்றினுடைய அசைவுகளால் தான் நமது வாயில் பேச்சுக்கள் பிறக்கின்றது 

மனிதனுடைய குரல்வளை வயிறு நெஞ்சு வாய் நாக்கு உதடு போன்ற 44 உறுப்புகளினுடைய உதவியினால் தான் ஒரு மனிதன் பேசுகின்றான்.

பேசக்கூடிய திறனை மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கி இருக்கின்றான் வேறு எந்த உயிரினமும் மனிதனைப் போன்று அது பேசுவது கிடையாது எனவே மிகப்பெரிய அருளாக வழங்கப்பட்டுள்ள பேச்சை பயனுள்ள காரியத்திற்காக மட்டுமே நாம் பயன்படுத்திட வேண்டும் பயனற்ற பேச்சுகள் என்பது பல்வேறு துன்பங்களை நம் வாழ்வில் கொண்டு வந்து சேர்த்து விடும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு சஹாபி வெற்றிக்கு வழி என்ன என்பதாக கேட்டார் அப்போது நபியவர்கள் உன்னுடைய நாவை கட்டுப்படுத்தி கொள்வாயாக என்று கூறினார்கள்.

இறுதியாக ஒரு வார்த்தையை கூறி நான் விடைபெறுகிறேன்.

மனிதனின் மதிப்பு அவன் நாவில் இருக்கின்றது நாவின் மதிப்பு அவன் மனதில் இருக்கின்றது அறிவு நிறைந்திருப்பவர்கள் பேச்சை குறைப்பார்கள். ஒருமுறை பேசவேண்டும் இருமுறை கேட்க வேண்டும்.

என்று கூறி எனக்கு இங்கே பேச வாய்ப்பளித்த ஹழ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.


மேலும் தகவலுக்கு A. காதிர் மீரான் மஸ்லஹி. 9952129706

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக