பொறாமை ஏற்படும்போது, பொறாமைக்காரனின்
மனித வாழ்க்கையில் இரண்டு வகைக் காரணங்களால் துன்பம்
சூழுகிறது. அவன் செய்த தீவினையின் விளைவாக ஏற்படுவது ஒருவகை அவனது காரணமின்றியே ஏற்படும் துன்பங்கள் மற்றொரு வகை
இரண்டாம் வகைத் துன்பங்களைப் பற்றியும், அதிலிருந்து மீட்சி பெறுவதற்கான வழியைப் பற்றியும் மேற்காணும் திருவசனம் கோடிட்டுக்காட்டுகிறது
பொறாமையின் உட்பிரிவுகளில் கண்திருஷ்டி என்பதும் ஒன்றாகும்
அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை
செய்கிறார்கள்
கண் திருஷ்டி ஏற்படுவது என்பது உண்மையாகும். தலைவிதியையும் மீறி செயல்படும் ஆற்றல் எதற்கும் இருக்குமானால் அது கண் திருஷ்டிக்கு
இருந்திருக்கும் . அறிவிப்பவர் : ஹனரத் இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம்
ஸஹ்லு - ரலி என்ற நாயகத் தோழரொருவர் குளித்துக் கொண்டிருந்தார்
அவ்வழியாகச் சென்ற ஆமிர் - ரலி என்பவர் குளித்துக் கொண்டிருந்தவரின்
அழகைக் கண்டு பிரமித்து இன்றைய காட்சி போன்று நான் என்றும் கண்டதில்லை. கன்னிப் பெண்கள் கூட இவ்வளவு அழகாக இருக்க மாட்டார்கள் என்று கூறுகிறார் அவர் அவ்வாறு கூறிச் சென்றதும், ஸஹ்லு - ரலி உணர்வற்று கீழே விழுந்து விட்டார். உடனே அங்கிருந்தோர் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சந்நிதானத்திற்கு தூக்கிச் சென்றார்கள். "யா ரஸுலல்லா.. ஸஹ்லு குளித்துக் கொண்டிருக்கும் போது உணர்வற்று விழுந்து விட அதிலிருந்து அவர் தலையைத் தூக்கவேயில்லை கூறினார்கள்
அவரைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் இவரை யாரும் திருஷ்டி
போட்டிருப்பார்களென்று சந்தேகிக்கிறீர்களா? என வினவினார்கள், குளித்துக் கொண்டிருக்கும் போது ஆமிர் - ரலி என்பவர்தான் அவ்வழியாகக் சென்றார். அவரைத்தான் நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று அவர்கள் பதிக் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆமிர் - ரலி அவர்களை அழைத்து வரச்செய்து அவரை மிகவும் கடிந்து கொண்டார்கள். "ஏன்க் உங்களின் சகோதரர்களை இப்படிக் கொல்லுகிறீர்களோ? பிரமிக்கும் அழகைத் கண்டபோது “பாரக்கல்லாஹுலஹு (அல்லாஹ் அவருக்கு பரக்கத்துச் செய்வானாக)”என்று சொல்லியிருக்கக் கூடாதோ? அப்படிக் கூறினால் கண் திருஷ்டி ஏற்பட்டிருக்காதே என்று அவர்கள் கூறினார்கள். பின்னர் அவரிடம் உடலைக்கழுகி, கழுகிய தண்ணீரைக் கொண்டு வரச் சொன்னார்கள். அவர் தனது முகம், இரு கைகள், முழுங்கைகள், இருகால்கள், முட்டுக் கால்கள், மற்றும் ஆடையின் உட்பகுதியைக் கழுவி கழுகிய தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தார் அந்த தண்ணீரை உணர்வற்றுக் கிடந்த ஸஹ்லு - ரலி அவர்களின் மீது தெளிக்கப்பட்டது. அவர் உணர்வு பெற்று எழுந்தார்
அறிவிப்பவர் : ஹளரத் இப்னுஸஹ்லு (ரலி) நூல் : மாலிக்
பொறாமையின் தீங்கு
கண் திருஷ்டியின் தீங்கைப் போன்றே பொறாமையின் தீங்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். பிறர் பொறாமைப்படும்படி நடந்து கொண்டதால் வீழ்ச்சியும், உடல்நலம் பாதிப்பும் அடைந்தோர் அனந்தம் அனந்தம் சரித்திரக் கண்ணோட்டத்திலும் இத்தகைய நிகழ்வுகளைக் காணலாம்
ஹளரத் ஆதம் வாழ்க்கையைக் கண்டு ஷைத்தான் பொறாமை கொண்டதனாலன்றோ அவர்களுக்கு அந்த இன்ப வாழ்க்கை நழுவிப் போனது
நபி (அலை) அவர்களுக்குக் கிடைத்த சுவன ஆதமின் மைந்தர்களில் ஒருவருக்கு கண்ணுக்கழகான மனைவி கிடைத்ததைக் கண்ட மற்றொருவர் பெறாமை கொண்டதனால் அவர் கொலையுண்டு மாண்டார்
நபி ஹளரத் யூசுப் (அலை) அவர்களின் மீது அவர்கள் தந்தை காட்டும் அதிகப் பரிவைக் கண்டு பொறாமை கொண்ட அவர்களின் உடன் பிறந்தார்கள் அவர்களை கிணற்றில் தள்ளினார்கள் வாய் கூசாமல் அவர்களைஅடிமையென்று கூறி விலைக்கு விற்றார்கள். அதனால் ஏற்பட்ட பாதிப்பு பல காலம் தொடர்ந்ததல்லவா
இத்தகைய நிகழ்வுகளால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே பொறாமையின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுமாறு இறைவன் உத்தரவிடுகிறான்
பொது நிர்வாகத்திலிருப்பவர் தனது நிர்வாகத்துக்குட்பட்டவர்களிடையே சமநோக்கோடு நடக்க வேண்டும். அவ்வாறு நடக்கத் தவறினால் அவர்களிடையே பொறாமை தோன்றி விடும் ஒருவருக்கு பல குழந்தைகளிருந்தால் அவரின் உள்ளம் ஏதாவதொரு குழந்தையின் மீதுஅதிகப்பாசம் கொள்ளவே செய்யும் சிலருக்கு பெண் குழந்தைகளின் மீது அதிகப் பாசம் ஏற்படலாம். பெற்றோர் அந்தப் பாசத்தை வெளியில் காட்டி தனது மகவுகளுக்கு மத்தியில் பாரபட்சமாக நடக்கலாகாது. அப்படி நடந்தால் பாசத்துக்குரிய குழந்தையின் மீது மற்ற குழந்தைகளுக்கு பொறாமை ஏற்படும் அதனால் அவர்கள் துன்பம் தரத் துவங்குவார்கள். மேலும் தங்களை பெற்றோர் பாசமாக நடத்தவில்லையென்ற தாழ்வு மனப்பான்மை அவர்களுக்குத் தோன்றும் இதனால் அவர்கள் வாழ்க்கையில் பின் தங்கிப் போய் விடுவார்கள்
நபிகள் நாடகம் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் துணைவியர்களில் ஹளரத் ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அதிக அன்பு இருந்து வந்தது. ஹளரத் ஆயிஷா (ரலி) அவர்கள் சிறந்த புத்திசாதுர்யமாக இருந்ததால் தனது போதனைகளை மக்களுக்கு எட்டச் செய்வதில் அவர்கள் சிறந்து விளங்குவார்களென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அறிந்திருந்ததே அதிக அன்புக்குக் காரணம். ஆனாலும் அவர்கள் அதை வெளியில் காட்டமாட்டார்கள்
ஒவ்வொரு நாளும் ஒரு மனைவி வீட்டில் தங்கும் போது அவர்களிடம் வேறுபாடு காட்ட மாட்டார்கள், அவர்களின் இறுதி காலத்தில் அவர்கள் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்த போது இருவர் கைத்தாங்கலாக ஒவ்வொரு வீடாக மாறிவந்தார்கள். அவர்களின் ஆழ் மனதில் ஹளரத் ஆயிஷா (ரலி)அவர்களின் வீட்டிலேயே கடைசி காலத்தைக் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், அதை அவர்கள் வெளிப்படுத்தவேயில்லை. அவர்களின் தர்ம் சங்கடத்தைப் புரிந்து கொண்ட மனைவியர்களே பெருமானாரை ஹளரத் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிலேயே தங்கி விடுமாறு கேட்டுக் கொண்டார்கள்
அல்லாஹும்ம - ஹாதா- கஸமீ-பீமா-அம்லிகு-வலா-தலும்ளி- um தம்லி கு.
(யா அல்லாஹ்! நான் சக்தி பெற்ற அளவு சமமாக நடக்கிறேன் என்னையும் மீறி நான் செலுத்தும் அன்புக்கு என்னை குற்றவாளியாக்கி விடாதே!) என்று அவர்கள் அடிக்கடிக் கூறுவார்கள்
(யா அல்லாஹ்! நான் சக்தி பெற்ற அளவு சமமாக நடக்கிறேன் என்னையும் மீறி நான் செலுத்தும் அன்புக்கு என்னை குற்றவாளியாக்கி விடாதே!) என்று அவர்கள் அடிக்கடிக் கூறுவார்கள்
பெற்றோர் தங்களின் மகவுகளின் மீது காட்டும் பரிவில் இத்தகைய நியதியைக் கடைப்பிடிக்க வேண்டும். அஃதில்லை யெனில் பொறாமைக்கு அவர்களே வித்திட்டவராவார்கள்
நபி ஹளரத் யூசுப் (அலை) அவர்கள், பதினொன்று விண்மீன்கடி சூரியனும், சந்திரனும் தனக்கு தலைவணங்கு வதாகக் கண்ட கனவை அவர்கள் தன் தந்தையிடம் வெளிப் படுத்திய போது, அந்தக்கனவு சகோதரர்களில் காதுக்கு எட்டாத வாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென தந்தை கூறினார்கள்
தனது மக்களுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டலாகாது என்பதற்காகதே தந்தையும் அந்தக்கனவு தனக்கு தெரிந்ததை வெளியில் காட்டி் கொள்ளவேயில்லை
அடக்கமாக வாழ வேண்டும்
ஏழைகளுக்கு மத்தியில் வாழும் வசதி படைத்தோர் - நண்பர்கள். உறவினர்களுக்கு மத்தியில், அதிக முன்னேற்றம் கண்டவர்கள் அடக்கமாக வாழி வேண்டும். தனக்கு இருக்கும் வசதிகளை கண்ணாடி போட்டுக் காட்டலாகாது அவ்வாறு செய்தால் பொறாமை எண்ணங்கள் தோன்றி பாதிப்புகள் எற்படலாம்
இன்றைய சமூக அமைப்பில் ஒரு சமூகத்தைச் சார்ந்தோர் தாங்கள் பெற்ற வளங்களின் வனப்பை அடுத்த சமூகத்தவர்கள் முன் காட்டுவது கூட பொறாமைக்கு வித்திடுகிறது
இதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீங்கள் உங்களின் தேவைகளுக்கு இறை உதவியை தேடும்போது கூட மறைவாக்கிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பாக்கியமும் பொறாமையை உண்டாக்கவே செய்யும் என நவின்றார்கள்
இறை உதவியே சிறந்த வழியாகும்
நமது கட்டுப்பாட்டையும் மீறி பொறமை எண்ணங்கள் தோன்றி விட்டால்,
அதனால் எந்த வகையில் பாதிப்பு ஏற்படுமென்று கணித்திட இயலாது பொறாமை எண்ணம் எப்போது தோன்றும்? எப்படித் தோன்றும்? எந்த வகையில்தீமை பயக்கும்? எந்த அளவு தீமைபயக்கும்? என்பது அறிவின் கணிப்பிற்கு
அப்பாற்பட்டதாகம். எந்தப் புற்றில் எந்தப் பாம்போ
அனைத்தையும் அறிந்த நல்லவனாகிய, அவனன்றி அணுவும் அசையாத
வல்லவனாகிய ஏக இறைவனின் உதவியின்றி பொறாமையின் தீங்கைத் தடுத்திட
இயலாது. எனவே தான் அனுதினமும் அவனிடம் அதற்காகப் பாதுகாப்பு
வரத்தைப் பெற்றிட வேண்டுமென இறைமறை போதிக்கிறது. அவன் நம்மைக்
காப்பானாக.
இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுளள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.
ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.
ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் நிறைவாக தந்தருள்வானாக.
BY. A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக