அல்லாஹ்வின் நல்லடியார்களே…… நமது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை காணுவதற்கு
ஹஸ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களுடன் மிஃராஜ் பயணம் சென்றார்கள் அங்கே அவர்கள் பல
காட்சிகளை கண்டார்கள்.
அன்பிற்கினியவர்களே……நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், மிஃராஜ் இரவில் சுவர்க்கம் முழுவதும்
எனக்குக் காண்பிக்கப்பட்டது அங்கு நான்கு நதிகள் ஓடுவதைக் கண்டேன்
1. தண்ணீர் நதி
2. பால் நதி
3. மது நதி
4, தேன் நதி,
இந்த நதிகள்
எங்கிருந்து புறப்பட்டு எங்குபோய்ச் சேர்கின்றன என ஜிப்ரயீல் (அலை அவர்களிடம்
கேட்டேன். அதற்கு அவர்கள், இவைகள் ஹவ்லுல் கெதர் என்ற நீர்த் தடாகத்தில்
போய்ச் சேர்கிறது, எங்கிருந்து புறப்பட்டு வருகிறது என்பது எனக்குத் தெரியாது அல்லாஹ்வே மிக
அறிந்தவன் என்றார்கள்






