புதன், 30 டிசம்பர், 2015

பாத்திமா நாயகியின்(ரழியல்லாஹூ அன்ஹா )





ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தமது அருமை மகளார் பாத்திமா (ரழியல்லாஹூ அன்ஹா ) அவர்கள் வீட்டுற்கு வந்தார்கள். வீட்டில் பாத்திமா( ரழியல்லாஹூ அன்ஹா ) அவர்கள் சோகமாக காணப்பட்டார்கள். துடிதுடித்துப்போன நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! ஏன்  சோகமாக உள்ளாய்?       என்ன நடந்து விட்டது? சொல்லம்மா என்று  கேட்டார்கள்.

வியாழன், 17 டிசம்பர், 2015

உங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா?????








“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?
எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓயமாட்டேன்” என்று அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?



குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது.
“யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்கிறான்.

புதன், 25 நவம்பர், 2015

அல்லாஹ்வும் நம்மோடு இருக்கிறான்.







சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது;
ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால் வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலை பார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள்.
ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை

உலகில் வாழும் தேவதை.


பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.
உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.


வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஓடியது,

திங்கள், 23 நவம்பர், 2015

திருக்குர்ஆன் கேள்வி பதில்கள்





1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்?
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1...) கூற வேண்டும்.


2) திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது?
அல்லாஹ்விடமிருந்து இறங்கியது




3) திருக்குர்ஆன் யார் மூலம் இறங்கியது?
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) மூலம் இறங்கியது.


4) திருக்குர்ஆன் யாருக்கு இறங்கியது?
ஹழ்ரத்முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது


5) திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது?
ஹிரா என்னும் மலைக் குகையில் இறங்கியது


6) திருக்குர்ஆன் எந்த மொழியில் இறங்கியது?
அரபி மொழியில் இறங்கியது.


7) திருக்குர்ஆனில் முதன்முதலாக இறங்கிய வசனம் எது?
இக்ரஹ் என்னும் வசனம் ஆகும்.


8) திருக்குர்ஆன் எதற்காக வேண்டி இறங்கியது?
மனித, ஜின் வர்க்கத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகஇறங்கியது.


9) திருக்குர்ஆனின் திருப்பணி என்ன?
நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் ஆகும்.


10) திருக்குர்ஆனில் அல்லாஹ் என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?.
2698 இடங்களில்