ஞாயிறு, 17 மார்ச், 2024

வாக்குறுதியின் பலம்: (கதை)

 

ஒரு குளிர் நாள் இரவில் ஒரு கோடீஸ்வரர் ஒரு வயதான ஏழையை அவரது வீட்டிற்கு வெளியில் வெளியில் சந்தித்தார். அவர் அவரிடம், "வெளியில் குளிர் அதிகமாக இருக்கிறதே..உங்களுக்கு குளிரவில்லையா?என்று கட்டர்..அதோடு உங்களிடம் போர்வை, கம்பளி எதுவும் இல்லையா?" என்று கேட்டார்.


முதியவர் பதிலளித்தார், "என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் நான் இந்த குளிருக்கு பழகிவிட்டேன். சமாளித்துக் கொள்வேன் " என்றார். கோடீஸ்வரர் பதிலளித்தார், "எனக்காகக் காத்திருங்கள், நான் என் வீட்டிற்குள் சென்று உங்களுக்கு போர்வை ஒன்றைக் கொண்டு வருகிறேன்," அந்த ஏழை மிகவும் மகிழ்ச்சியடைந்து, "சரி உங்களுக்காக காத்திருக்கிறேன்" என்றார்.


கோடீஸ்வரர் தன் வீட்டிற்குள் நுழைந்து அங்கு வேறு வேலையில் மூழ்கி அந்த ஏழையை மறந்துவிட்டார். காலையில் அவருக்கு அந்த ஏழை முதியவர் நினைவு வந்தது., அவர் அவரைத் தேட வெளியே சென்றார், ஆனால் அவர் கடும் குளிர் காரணமாக அவர் இறந்துவிட்டார், ஆனால் அவர் அருகில் ஒரு குறிப்பை விட்டு சென்றிருந்தார். "என்னிடம் போர்வையோ, கம்பளியோ இல்லாதபோது, என்னிடம் எதிர்த்து போராடும் வலிமை இருந்தது. ஏனென்றால் எனக்கு அது பழகி விட்டது. ஆனால் எனக்கு உதவி செய்வதாக நீங்கள் எனக்கு உறுதியளித்தபோது, உங்கள் வாக்குறுதியை நம்பினேன். அது என்னுடைய எதிர்த்து போராடும் வலிமையை குலைத்துவிட்டது. " என்று எழுதி இருந்தது. 

பணக்காரரருக்கு நடு மண்டையில் தன் தவறு உரைத்தது.


பாடம் : உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாவிட்டால், அதை கொடுக்கவேண்டாம். அது உங்களுக்கு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது வேறொருவருக்கு மிகவும் முக்கியமாக, தேவைப்படும் விஷயமாக இருக்கும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக