வெள்ளி, 1 மார்ச், 2024

இனிமே தொழப் போக மாட்டேன் ( உரையாடல்.)


 

அத்தா அக்பர்

அம்மா ஆயிஷா

மகன் அன்வர் 

 

அக்பர் அஸ்ஸலாமு அலைக்கும் யாஅல்லாஹ்....என்னா வெயிலு தாங்க முடியல மண்டைய பொழக்குது ஜும்மா தொழுதுட்டு வீட்டுக்கு வற்றதுக்குள்ள ஒருமாதிரியா ஆயிருது.

ஆயிஷா வஅலைக்கும் ஸலாம் வாங்கங்க உக்காருங்க. இந்தாங்க தண்ணீ

அக்பர் தண்ணீ கொஞ்சம் ஜில்லுன்னு கொண்டு வாமா

ஆயிஷா இந்தா கொண்டு வறேன்.

அக்பர் அன்வர் எங்க போனான்.

ஆயிஷா இன்னிக்கு வெள்ளிக்கிழமைல பக்கத்து பள்ளீல  ஜும்மா தொழப் போயிட்டான்.

ஆமா நீங்க எங்க தொழுதீங்க

அக்பர் வற்ற வழில மெயின் ரோட்டு ஓரத்துல உள்ள பள்ளீல ல தொழுதுட்டேன்.

அன்வர் அஸ்ஸலாம் அலைக்கும் ம்மா...

ஐ.... வாப்பா எப்பா வாப்பா வந்தீங்க..

அக்பர் இப்பத்தான். ஆமா ஜும்மா தொழுதியா..

அன்வர் அல்ஹம்துலில்லாஹ் வாப்பா இப்பத்தான் தொழுதுட்டு வர்றேன்.

அக்பர் மாஷா அல்லாஹ் ரொம்ப சந்தோசம் நல்லபுள்ள.

ஆயிஷா சரி பேசீட்டு இருங்க நாபோயி சாப்பாடு வைக்கிறேன்.

அன்வர் வாப்பா நான் இனிமே பள்ளிவாசல் பக்கமே போக மாட்டேன்.

அக்பர் அஸ்தஃபிருல்லாஹ் ஏன்டா செல்லம் அப்படி சொன்னீங்க அஸ்தஃபிருல்லாஹ் சொல்லு

அன்வர் இல்லவாப்பா...அஸ்ரத் பயான் செய்யும் போது சிலபேர் சொல்போன்ல வாட்ஸ்அப் பாக்குறாங்க.. இன்னும் சிலபேரு  பேஸ்புக் பாக்குறாங்க இன்னும் சிலபேரு வெளில உக்காந்து புறம் பேசுறாங்க இதனால என்னால கவனமாக பயான் கேட்க முடியல வாப்பா.

அதவிட மோசம் தொழும் போது நிறைய பேர் போன சைலன்ட்ல பேடாம சினிமா படசாங் ரிங்டோனா அடிக்கிது பாருங்க அப்போ சுத்தமா கவனம் களைஞ்சிருது வாப்பா...

இன்னிக்கு கூட காவாலையா சாங் ரிங்டோன் கேட்டுச்சி  அதனால தான் சொல்றேன். இனிமே நா பள்ளிவாசல் போகல வீட்லயே தொழுதுகிறேன் வாப்பா.

          ( அத்தா: சிறு யோசனைக்கு பிறகு....)

அக்பர் ம்ம்ம்ம்.......ஓகே டா செல்லம் நாம அதபத்தி பிறகு பேசலாம்.

இன்னிக்கு நாம ஒரு கேம் விளையாடலாமா...

அன்வர் ஐ.......சூப்பர் என்ன கேம் வாப்பா..

அக்பர் அந்த கேம்ல ஜெயிச்சிட்டா நீ இனிமே பள்ளிவாசல் போக வேண்டாம்.

அன்வர் என்ன கேம் வாப்பா

அக்பர் இந்த தண்ணீ நிறைந்த டம்ளர் எடுத்துகிட்டு நம்ம வீட்ல இருந்து இருபது வீடு தள்ளி இருக்கிற பள்ளிவாசல் வாசல் வரை போயிட்டு வா ஆனா ஒரு கண்டீசன் ஒரு சொட்டு தண்ணீ கூட சிந்த கூடாது.

அன்வர் இது ரொம்ப சிம்பிள் கேம் வாப்பா இந்தா பாருங்க இப்பவே பண்ணி காட்டுறேன்.

(மேடையில் தண்ணீர் கிளாசுடன் மூன்று சுத்து சுத்திய பின்.)

அன்வர் வாப்பா இங்க பாருங்க நீங்க சொன்ன மாறியே ஒரு சொட்டு கூட கீழ விழல.

அக்பர் மாஷா அல்லாஹ் சூப்பர்டா செல்லம். ஆமா நீ இந்த கிளாஸை கைல எடுத்திட்டு போகும் போது நமது தெருவில் யாரெல்லாம் போன் பேசிக்கிட்டு இருந்தாங்க.. அத பாத்தியா..?

அன்வர் இல்ல வாப்பா

அக்பர் ஏதாவது செல்போன் ரிங் டோன் உனக்கு கேட்டுச்சா..?

அன்வர் இல்ல வாப்பா..

அக்பர் தெருவோரமா பேசிட்டு இருந்தாங்களே அவங்க என்ன பேசீட்டு இருந்தாங்க...?

அன்வர் சாரி வாப்பா அத நான் கவனிக்கல.

அக்பர் ஏன்டா செல்லம் நீ போற பாதைல தான எல்லாமே நடந்துச்சி

அன்வர் அது இல்லவாப்பா நா நடந்து போகும் போது என்னோட கவனம் எல்லாமே கிளாஸ்ல உள்ள தண்ணி சிந்தீரக்கூடாது என்பதில் தான் இருந்துச்சி அதனால நா மற்ற விசயங்களை கவனிக்கல.

அக்பர் அப்போ நீ இந்த கேம்ல வின் பண்ண என்ன காரணம் மத்த எந்த விசயத்திலும் கவனம் செலுத்தாம உனது நோக்கத்தில் நீ உறுதியாக இருந்ததால் தானே.!

அன்வர் ஆமா வாப்பா..

அக்பர் அதே மாதிரி தான் நீ பள்ளிவாசலுக்கு போன உனக்கு முன்னாடி அல்லாஹ் இருக்கான் என்ற எண்ணத்தோடு தொழுகனும் அப்படி ஒரு எண்ணம் உன்னோட உள்ளத்தில் வந்துட்டா உனக்கு பக்கத்துல யார் எண்ண பண்ணீட்டு இருந்தாலும் அது உனது கவனத்த திசை திருப்பாது.

எக்ஸாம் ஹால்ல வாத்தியார் இருக்கும் போது எப்படி நாம் அடக்க ஒடுக்கமா இருப்பமோ அந்த மாதிரி நாம அல்லாஹ்வுக்கு முன்னாடி இருக்கோம் நம்மள அல்லாஹ் பாத்துகிட்டு இருக்கான் என்ற எண்ணத்தோடு எப்போதும் இருக்கனும்.

அன்வர். நீங்க வேற லெவல் டாடி. சூப்பரா எனக்கு சொல்லி புரிய வச்சிட்டீங்க இனிமே நான் நான் பள்ளிக்கு போனா அல்லாஹ்வுக்கு முன்னாடு இருக்கும் எண்ணத்தோட இருப்பேன்.

வாப்பா நீங்க பேசாம எங்க ஸ்கூல் வாத்தியாரா வந்திருங்க.

அக்பர் இந்த சேட்டை தான வேணங்குறது....

அன்வர் வாப்பா நான் செய்ய இருந்த மிகப்பெரிய தவறை மிக நல்ல_முறையில் எனக்கு எடுத்துக் கூறி எனக்கு நல்லவழியை காட்டிய உங்களுக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக!!!

அல்லாஹும் ரப்பிர்ஹம் ஹுமா கமா ரப்பயானி ஸகீரா.

யாஅல்லாஹ் எனது பெற்றோர் என்மீது இரக்கம் காட்டியது போல நீ அவர்கள் மீது இரக்கம் காட்டுவாயாக.

அக்பர். ஆமீன். சரி இப்போ நான் துஆ செய்வேன் நீ ஆமீன் சொல்லு.

அன்வர் ஓகே வாப்பா

அக்பர் ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா வதுர்ரியாதினா குர்ரத்த அஃயுனிவ் வஜஅல்னா லில் முத்தகீன இமாமா.

யாஅல்லாஹ் எனது மனைவி மக்களை கொண்டு எங்களுக்கு கண்குளிர்சியை மன நிம்மதியை தந்தருள்வாயாக. எனது குழந்தைகளை உன்னை அஞ்சும் நல்லோர்களுக்கு தலைவர்களாக ஆக்குவாயாக.

அன்வர் ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக