எனது பெயர்………
அல்லாஹ்வின் நல்லடியார்களே…
அல்லாஹ்விடம் நாம் பாவ மன்னிப்பு கேட்கும் போது வெறும் வார்த்தையில் யா அல்லாஹ் என்னை மன்னித்துவிடு என்று பாவமன்னிப்பு கேட்டால் மட்டும் பத்தாது பாவமன்னிப்பு கேட்ட பிறகு நமது சொல் செயல் எப்படி அமைய வேண்டும் என்றால்
அலி (ரலி) கூறினார்கள் :
தவ்பா கேட்கும் போது நம்மிடம் ஆறு விஷயங்கள் இணைந்திருக்க வேண்டும்.
1. தன்னிடமிருந்து நிகழ்ந்துவிட்ட பாவத்திற்காக வருந்த வேண்டும்.
2. தான் நிறைவேற்றாமல் விட்டுவிட்ட கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
3. பிறர் உரிமையை அவர் அபகரித்து இருந்தால் திரும்ப கொடுக்க வேண்டும்.
4. தம்மால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் .
5. மீண்டும் அந்த பாவத்தை செய்யாமல் இருக்க உறுதி எடுக்க வேண்டும்.
6. இதற்கு முன்னர் நீ உன் மனதை பாவங்களின் அடிமையாக வைத்திருந்தோமே அதைப்போன்று
அதை இனி இறைவனுக்கு கீழ்ப்படியும் படி அடிமையாய் இருக்கும் படி செய்திட வேண்டும்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே....
இதற்கு முன்னர் நாம் நமது மனதுக்கு பாவங்களின் சுவையை ஊட்டி வளர்த்ததை போன்று இனி அதற்கு இறைவனுக்கு கீழ்ப்படிவதன் சுவையை ஊட்டி வளர்க்க வேண்டும்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே....
பரிசுத்தம் என்பது நமது செயலில் இல்லை
பரிசுத்தம் என்பது பாவமன்னிப்பில் இருக்கிறது.
நமது செயலை கொண்டு நாம் பரிசுத்தமாக இருப்பதாக நினைக்க கூடாது !
அல்லாஹ் விடம் பாவ மன்னிப்பை கொண்டு பரிசுத்தமடைய நினைத்திட வேண்டும் !
அல்லாஹ் ஒருவனே நம்மை பரிசுத்தப்படுத்த போதுமானவன்.
நாமே நம்மை பரிசுத்தமானவன் என கூறிக்கொண்டு திரியக்கூடாது !
அல்லாஹ் நம்மையும் நமது தவறுகளையும்
மன்னித்து விட்டால் .......
ஊறே தூற்றினாலும் நா பரிசுத்தவாதி !
அல்லாஹ் நம்மையும் நமது தவறுகளையும்
மன்னிக்க மறுத்து விட்டால் .....
உலகமே போற்றினாலும்
நாம் பரிசுத்தமானவர் இல்லை ! என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே…
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُم ۚ بَلِ ٱللَّهُ يُزَكِّى مَن يَشَآءُ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا
தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா?
மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான்.
திருக்குர்ஆன் 4:49
எனவே நமது பாவமன்னிப்பை அல்லாஹ்விடம் எவ்விதத்தில் கேட்க வேண்டுமோ அவ்விதத்தில் கேட்ட பின்பு நமது சொல்லையும் செயலையும் சரியான விதத்தில் ஆக்கிக் கொண்டு அதன்படி வாழ்ந்து அல்லாஹ்வின் அன்பை பெற்று சொர்க்கம் செல்லக்கூடிய நல்லோர்களாக வல்லோவன் அல்லாஹ் நம் அனைவர்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக