வெள்ளி, 30 ஜூன், 2023

*ஸஜ்தா திலாவத் பற்றிய விளக்கம்*

 


*ஸஜ்தா திலாவத் பற்றிய விளக்கம்*


*الجواب بعون الله الملك الوهاب 👇*


தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். 


இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.


இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை?


அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தா செய்ய வேண்டும்? 

என்று நாம் பார்த்தால் தற்போது 14வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம்.


இந்த 14 வசனங்களும் ஹதீஸ்களின் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இமாம்கள் வகுத்து தந்திருக்கிறார்கள்


அந்த வசனங்கள் பின் வருமாறு


آيات السجود👇


*1,إِنَّ الَّذِينَ عِندَ رَبِّكَ لاَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ 


*سورة الأعراف*


*2,وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُمْ بِالْغُدُوِّ وَالْآَصَالِ  


*سورة الرعد*


*3, وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ 


*سورة النحل*


*4,قُلْ آَمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهِ إِذَا يُتْلَى عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا وَيَقُولُونَ سُبْحَانَ رَبِّنَا إِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا  


*سورة الإسراء*


*5, أُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ مِنْ ذُرِّيَّةِ آدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِنْ ذُرِّيَّةِ إِبْرَاهِيمَ وَإِسْرَائِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا إِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَنِ خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا  


*سورة مريم*


*6,أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاء  


*سورة الحج*


*7,يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ  


*سورة الحج*


*8, وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا 


*سورة الفرقان*


*9, أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ  


*سورة النمل*


*10, إِنَّمَا يُؤْمِنُ بِآَيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ  


*سورة السجدة*


*11, قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَى نِعَاجِهِ وَإِنَّ كَثِيرًا مِنَ الْخُلَطَاءِ لَيَبْغِي بَعْضُهُمْ عَلَى بَعْضٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَا هُمْ وَظَنَّ دَاوُودُ أَنَّمَا فَتَنَّاهُ فَاسْتَغْفَرَ رَبَّهُ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ  


*سورة ص*


*12, وَمِنْ آَيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ فَإِنِ اسْتَكْبَرُوا فَالَّذِينَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْأَمُونَ  


*سورة فصلت*


*13, فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا  


*سورة النجم*


*14, وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآَنُ لَا يَسْجُدُونَ  


*سورة الإنشقاق*


*15, كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ  


*سورة العلق*


ஸஜ்தா திலாவத் என்று நடைமுறையில் உள்ள 14 வசனங்கள் இவை தாம். 

மேலே கூறப்பட்டதில் 14க்குப் பதிலாக 15 இருக்கிறது


 இரண்டு வசனங்களில் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவதே இதற்கான காரணம்..


(14 அல்லது 15 ஆகிய இரண்டுமே ஹதீஸ் அடிப்படையில் சரியானவையே)


மேலே நாம் கண்ட 15 வசனங்களில் ஹஜ் எனும் அத்தியாயத்தில் இரண்டு வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


ولم ير أبو حنيفة ومالك ثانية الحج من العزائم 


وقالا إن المراد بالآية الصلاة المفروضة بدليل ذكر الركوع مع السجود،

 

இமாம் அபூஹனீபா (ரஹ்) மற்றும் இமாம் மாலிக் ரஹ் அவர்கள் ஹஜ் அத்தியாயத்தில் ஒரேயொரு ஸஜ்தா வசனம் மட்டுமே உள்ளது என்று கூறுகின்றார்கள்,


ஆனால் அதே சமயம் ஸாத் எனும் அத்தியாயத்தில் வரும் வசனத்தை ஸஜ்தா வசனமாக எடுத்துக் கொள்கின்றார்கள்.


وأسقط الشافعي سجدة (ص) واعتبرها سجدة شكر. 


இமாம் ஷாஃபிஈ (ரஹ்)அவர்கள் ஹஜ் அத்தியாயத்திலுள்ள இரண்டு வசனங்களையும் ஸஜ்தா வசனங்களாகக் கணக்கிடுகின்றார்கள். 


ஆனால் ஸாத் அத்தியாயத்திலுள்ள வசனத்தைவிட்டு விடுகின்றார்கள்.  


ஆக இரண்டு இமாம்களுமே 14 வசனங்களை ஸஜ்தா வசனங்கள் என்று கூறுகின்றார்கள்.  


ஆனால் எந்தெந்த வசனங்கள் என்பதில் தான் இருவரிடமும் கருத்து வேறுபாடு உள்ளது. 


15 ஸஜ்தா வசனங்கள் என்பதற்கான ஆதாரம் 👇


فمواضع السجود في القرآن خمسة عشر موضعاً، 


فعن عمرو بن العاص رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أقرأه خمسة عشر سجدة، منها: 


ثلاث في المفصل وفي الحج سجدتان. 


رواه أبو داود 

والحاكم 

وابن ماجه 

والدراقطني وحسنه المنذري. 


"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக்காண்பித்தார்கள் 


என்றும், அவற்றில் (காஃப் அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் கடைசிஅத்தியாயம் வரையிலான) 


முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும், 

சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும்''


என்று அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி 

அபூதாவூதில் 1193வதுஹதீஸாகவும் 

இப்னுமாஜாவில் 1047வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது. 


ஷாஃபிஈ மத்ஹபின் ஆதாரம் 👇


أخرجه أحمد 

وأبو داود 

والترمذي 


عن عقبة بن عامر قال: قلت: يا رسول الله فضلت سورة الحج بأن فيها سجدتين 


قال نعم ومن لم يسجدهما فلا يقرأهما.


ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப் பட்டுள்ளதா?

என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.  


அதற்கவர்கள், ஆம்! யார் அவ்விருவசனங்களின் போதும் ஸஜ்தா செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓதவேண்டாம் என்று கூறினார்கள்.


அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி), 


நூல் : திர்மிதீ 527


ஹனஃபீ மத்ஹபின் ஆதாரம் 👇


ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை.  


(ஆனால்) நபி (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.


அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), 


நூல் : புஹாரி 1069, 3422


فسجود التلاوة: اختلف العلماء في حكمه، 


فذهب الجمهور إلى أنه سنة، 


وذهب الأحناف إلى الوجوب، 


وإنما ذهب الجمهور إلى سنيته، 


لأن النبي صلى الله عليه وسلم فعله وتركه، 


فدل ذلك على عدم الوجوب، ثم إنه قد ورد عن عمر رضي الله عنه

 


ஸஜ்தா திலாவத், பெரும்பான்மையான அறிஞர்களிடத்தில் ஸுன்னதே முஅக்கதா (வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்) ஆகும்.


(ஹனஃபீ மத்ஹபில் மட்டும் வாஜிபாகும்)...


 

எனவே அதனை செய்பவர் நற்கூலி பெறுவார். விட்டுவிடுபவருக்கு குற்றமில்லை.


أنه قال: يا أيها الناس إنا نمر بالسجود 


فمن سجد فقد أصاب، 


ومن ترك فلا إثم عليه. 


رواه البخاري


உமர் பின் ஃகத்தாப்(ரழி) அவர்கள் ஒரு தடவை வெள்ளிக்கிழமையன்று மின்பரின் மீது நின்றுகொண்டு 


ஸூரதுன் நஹ்லை அதன் ஸஜ்தா வரும் வரைக்கும் ஓதினார்கள். 


பின் இறங்கி ஸஜ்தா செய்தார்கள். 


மக்களும் ஸஜ்தா செய்தார்கள்.


பின்னர் அடுத்த ஜும்ஆவிலும் இதே ஸூராவை ஸஜ்தா வரும் வரையில் ஓதினார்கள். 


அப்போது மக்களைப் பார்த்து “மக்களே! நாம் ஸுஜூத் செய்வதற்கு ஏவப்படவில்லை. 


எவர் ஸுஜூத் செய்வாரோ அவருக்கு நன்மைகள் உண்டு. 


எவர் ஸுஜூத் செய்யவில்லையோ அவருக்கு பாவம் இல்லை” என்று கூறினார்கள். 


(புஹாரி)


இன்னொரு அறிவிப்பிலே 


”நிச்சயமாக அல்லாஹ் நாம் விரும்பினாலே தவிர எமக்கு ஸஜ்தாவை ஃபர்ழாக்கவில்லை” என வந்திருக்கின்றது.


இங்கு அது கடமையானது பற்றி கூறப்படவில்லை. 


மாறாக ஓதுபவரோ அல்லது செவிமடுப்பவரோ ஸுஜூத் செய்யவும் முடியும். ஸுஜூத் செய்யாமலும் இருக்க முடியும்.


தூதர் (ஸல்) அவர்கள் ஸஜ்தா ஆயத்தொன்றை ஓதிவிட்டு ஸுஜூத் செய்யாமல் இருந்ததாக ஸுனன் அபீதாவூதிலே ஆதாரபூர்வமான அறிவிப்பொன்றும் உள்ளது


ஆக ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் கேட்கும் போதும் ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை 


விரும்பினால் செய்து கொள்ளலாம் என்பதற்கு ஏனைய ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன...


 

حديث زيد بن ثابت رضي الله عنه قال: 


( قرأت على النبي صلى الله عليه وسلم النجم فلم يسجد فيها ) 


والحديث متفق عليه


’நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன்.  

அப்போது அவர்கள் ஸஜ்தா செய்யவில்லை.


அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி),


நூல் : புஹாரி 1072. 1073


ஒருவர் குர்ஆனில் உள்ள வசனங்களில் ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிலுள்ள எந்த வசனத்தை ஓதினாலும் விரும்பினால் அவ்வசனத்திற்காக ஸஜ்தா செய்து கொள்ளலாம்.


’ஆதமின் மைந்தன் ஸஜ்தா (செய்யுமாறு கட்டளையுள்ள) வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே அந்தோ எனக்கு வந்த நாசமே!


ஆதமின் மைந்தன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். 


அவன் ஸஜ்தா செய்து விட்டான்.


அவனுக்கு செர்க்கம் கிடைக்கப் போகிறது. 


ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்கு) ஸஜ்தா செய்யுமாறு எனக்கு கட்டளையிடப்பட்டது. 


நானோ மறுத்து விட்டேன். 


எனவே எனக்கு நரகம் தான் என்று கூறியபடி விலகிச் செல்கிறான்.


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),


நூல்கள் : 


முஸ்லிம் (133), 

இப்னுமாஜா (1042), அஹ்மத் (9336)


*ஸஜ்தா திலாவத் செய்யும் போது ஓதும் துஆ*


فالسنة أن يقول في سجود التلاوة: 


سجد وجهي للذي خلقه وشق سمعه وبصره بحوله وقوته. 


رواه الترمذي


والحاكم وزاد: فتبارك الله أحسن الخالقين.


وأجاز بعض العلماء أن يقول: 

سبحان ربي الأعلى، 

أو يفعل مثلما يفعل في سائر السجود


قال الإمام النووي: 


ويستحب أن يقول في سجوده: 


*سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره بحوله وقوته.* 


وأن يقول: 


*اللهم اكتب لي بها عندك أجرا واجعلها لي عندك ذخرا، وضع عني بها وزرا، واقبلها مني كما قبلتها من عبدك داود عليه السلام*. 


ولو قال ما يقول في سجود صلاته جاز، 


ثم يرفع رأسه مكبرا كما يرفع من سجود الصلاة. 


பார்க்க 👇


روضة الطالبين: 1/322.

(1042), அஹ்மத் (9336)


தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட ஸஜ்தா வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம்.


அப்போது ஓதுவதற்கென நபி (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவை கற்றுத்தந்துள்ளார்கள்.


*ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வஸவ்வரஹூ வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹீ வ குவ்வ(த்)திஹீ ஃபதபாரகல்லாஹூ அஹ்ஸனுல் ஹாலிகீன்* ...


பொருள் : 


என் முகத்தைப் படைத்து அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.


அவன் பரக்கத் வாய்ந்தவன்,


சிறந்த படைப்பாளன்..


நூல்கள் : 

திர்மிதீ (529),

நஸயீ (1117),

அபூதாவூத் (1205),

அஹ்மத் (22895)


அதே போல் வழமையாக தொழுகையில் சஜ்தாவில் ஓதும் சுப்ஹான ரப்பியல் அஃலா என்பதை ஓதினாலும் குற்றமில்லை.


 

وقد كان ابن عمر رضي الله عنهما يسجده وهو على غير وضوء. 


رواه البخاري . 


ولاشك أن فعله على طهارة أولى وأحوط. 


தொழுகைக்கு வெளியில் ஸஜ்தா திலாவத்தை உளூ இல்லாமலும் செய்யலாம் 


ஆனால் உளூவுடன் செய்வதே ஏற்றமானது


ஸஜ்தா திலாவத் செய்முறை


அல்குர்ஆனில் ஸஜ்தாவுடைய வசனங்களிலொன்றை ஓதியவரும், ஓதக் கேட்டவரும் தக்பீர் சொல்லி ஒரு ஸுஜுத் செய்வது ஸுன்னத்தாகும். 

 


இதில் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்), ஸலாம் ஆகிய இரண்டும் இடம் பெறுவதில்லை.


 ஸுஜுது செய்யும் போது தக்பீர் சொல்வது போன்றே அதிலிருந்து எழும்போது அல்லாஹு அக்பர் எனக் கூறவேண்டும். 


'ஸஜ்தாவுடைய வசனமொன்றை நீர் ஓதினால் தக்பீர் கூறி ஸுஜுது செய்ய வேண்டும். 


அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் சொல்ல வேண்டும்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறியுள்ளார்கள்.


தொழுகைக்குரிய அனைத்து நிபந்தனைகளும் ஸஜ்தா திலாவத்திற்குரிய நிபந்தனைகளாகக் கொள்ளப்படுகின்றன. 


இந்த வகையில் உளூவுடன் இருப்பதும், கிப்லாவை முன்னோக்குவதும் அவ்ரத்தை மறைத்திருப்பதும் குறிப்பிடத்தக்க நிபந்தனைகளாகும்.


தொழுகையில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதினால் இமாமும் மஃமூமும் இருவரும் ஸஜ்தா செய்யலாம்.


ஸஜ்தாவுடைய ஒரு வசனத்தைப் பலமுறை ஓதும் போதும் அத்தகைய ஒரு வசனத்தைத் தொடர்ந்து பல தடவைகள் செவிமடுக்கும் போதும் ஒரே ஸஜ்தா செய்வது போதுமானதாகும்.


*والله اعلم بالصواب ✍*


பதிவு 👇

فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்


25-04-2020

01-09-1441 சனிக்கிழமை


عبد الرحیم انواری 2008

عفااللہ عنہ 


در ماہ رمضان دعا کی درخواست ہے

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக