புதன், 5 ஜூலை, 2023

50 கேள்விகளும் 50 பதில்களும்.


 

                    கேள்வி பதில் 


1)கேள்வி: நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது?


பதில்: திங்கள் கிழமை (ஆதாரம்: முஸ்லிம் 1977)


2)கேள்வி: நபி (ஸல்) அவர்கள் எந்த வருடத்தில் பிறந்தார்கள்?


பதில்: கி.பி. 571 ரபீவுல் அவ்வல் 12


3)கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன?


பதில்: அப்துல்லாஹ் (ஆதாரம்: புகாரீ 2700 )


4)கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?


பதில்: ஆமினா (ஆதாரம்: முஸ்லிம் 3318)


5)கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?


பதில்: அப்துல் முத்தலிப் (ஆதாரம்: புகாரீ 2864)


6) கேள்வி:நபி மூசா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?


பதில்: பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிட்டு எழுந்தது.


7) கேள்வி:ஏழு இரவுகள் எட்டு பகல்களும் தொடர்ந்தார்போல் எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது?


பதில்: ஆது சமூகத்தாருக்கு வேதனை இறக்கப்பட்டது.


8) கேள்வி:குர்ஆனின் இதயம் என கூறப்பட்ட சூரா எது?


பதில்: சூரத்துல் யாசின்


9)கேள்வி:சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?


பதில்: 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில்.


10)கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்கள்?


பதில்: நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார்கள்  (ஆதாரம்: இஸ்தீஆப்)


11)கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தாயார் எப்போது இறந்தார்கள்?


பதில்: நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதை அடைந்த போது இறந்தார். (ஆதாரம்: இஸ்தீஆப்)


12)கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் யார்?


பதில்: அப்துல் முத்தலிப். அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் (ஆதாரம்: அஸ்ஸீரத்துன் நபவிய்யா லி இமாம் தஹபீ)


13)கேள்வி: நபி (ஸல்) அவர்களை வளர்த்த பெண்மணி யார்?


பதில்: உம்மு ஐமன் (ரலி) (ஆதாரம்: புகாரீ 3737)


14)கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டியவர்கள் யார்? யார்?


பதில்: 1. ஸுவைபா (ஆதாரம்: புகாரீ 5101), 2. ஹலீமா அஸ்ஸஃதிய்யா (ஆதாரம்: இப்னு ஹிப்பான் 6335)


15)கேள்வி: நபி (ஸல்) அவர்கள் சிறு வயதில் என்ன வேலை செய்தார்கள்?


பதில்: ஆடு மேய்க்கும் வேலை செய்தார்கள். (ஆதாரம்: புகாரீ 3406)


16)கேள்வி: நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராவதற்கு முன்னர் குறைஷிகள் கஅபத்துல்லாஹ்வை புதுப்பிக்கும் போது நபி (ஸல்) அவர்களின் வயது என்ன?



பதில்: 35 வயது.


17)கேள்வி: கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்ன உதவியை செய்தார்கள்?


பதில்: கஅபத்துல்லாஹ் கட்டுவதற்குரிய கற்களை எடுத்துச் செல்லும் வேலை செய்தார்கள். (ஆதாரம்: புகாரீ 1582)


18)கேள்வி: நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியின் பெயர் என்ன?


பதில்: கதீஜா (ரலி) (ஆதாரம்: புகாரீ 3816)


19)கேள்வி: நபி (ஸல்) அவர்கள் தமது எத்தனையாவது வயதில் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்தார்கள்? அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது என்ன?


பதில்: நபி (ஸல்) அவர்களின் வயது 25, கதீஜா (ரலி) அவர்களின் வயது 40 (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)


20) கேள்வி:நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை மணக்கும் போது மஹராக எதைக் கொடுத்தார்கள்?


நபி (ஸல்) அவர்கள் 20 மாடுகளை மஹராகக் கொடுத்தார்கள்.


21)கேள்வி: நபி (ஸல்) அவர்களுடன் கதீஜா (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?


பதில்: 25 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்

(ஆதாரம்: பத்ஹுல் பாரீ)


22)கேள்வி: கதீஜா (ரலி) அவர்கள் உலகத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?


பதில்: 65 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்

(ஆதாரம்: பத்ஹுல் பாரீ)


23)கேள்வி: நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் 


முடித்த போது அவர்கள் கன்னிப் பெண்ணா? விதவையா?


பதில்: இரண்டு திருமணங்கள் முடித்த பின்னர் விதவையாக இருந்தார்கள் 

(ஆதாரம்: பத்ஹுல் பாரீ)


24)கேள்வி: : கதீஜா (ரலி) அவர்களுக்கு அன்றைய காலத்தில் இருந்த பட்டப் பெயர் என்ன?


பதில்: தாஹிரா – பரிசுத்தமானவள் (ஆதாரம்: தாரிக் திமிக்ஸ், பக்கம் 109)


25)கேள்வி: நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் அதிகம் நேசித்த மனைவி யார்?


பதில்: கதீஜா (ரலி) (ஆதாரம் புகாரீ 3818)


26)கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு யார், யார் மூலம் குழந்தை பிறந்தது?


பதில்: அன்னை கதீஜா (ரலி), மாரியத்துல் கிப்திய்யா (ரலி) (ஆதாரம்: புகாரீ )


27)கேள்வி: மாரியத்துல் கிப்திய்யா (ரலி) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த குழந்தையின் பெயர் என்ன?


பதில்: இப்ராஹீம் (ஆதாரம்: புகாரீ 1303)


28)கேள்வி: நபி (ஸல்) அவர்களது குழந்தை எத்தனை வயதில் இறந்தது?


பதில்: 16 மாதம் இறந்தது.

(ஆதாரம்: அபூதாவூத் 2772)


29)கேள்வி: நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் அவர்கள் இறந்த போது நடந்த முக்கிய நிகழ்ச்சி என்ன?


பதில்: சூரிய கிரகணம் ஏற்பட்டது (ஆதாரம்: புகாரீ 1043)



30) கேள்வி;முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்?


பதில்: நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் வம்சா வழியைச் சேர்ந்தவராவார்கள்.


31) கேள்வி;முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பதில்: யானை ஆண்டு என அழைக்கப்படுகிறது.


32) கேள்வி:முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது ஆரம்பக் காலத்தில் செய்த தொழில் என்ன?


பதில்: குரைஷிகளில் ஒருவரிடம் கூலிக்கு ஆடுகள் மேய்க்கும் வேலையைச் செய்தார்கள்.


33) கேள்வி:முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நாட்டுக்கு வியாபாரத்திற்காகச் சென்றார்கள்?


பதில்:நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிரியா நாட்டுக்கு வியாபாரத்திற்காகச் சென்றார்கள்.


34) கேள்வி:முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் வஹி இறங்க ஆரம்பித்தது?


பதில்:40 ஆம் வயதில் வஹி இறங்க ஆரம்பித்தது.


35) கேள்வி:முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த இடத்தில் முதன்முதலாக வஹீ இறங்கியது?


பதில்:மக்காவிலுள்ள ஜபல் அல்-நூர் என்று சொல்லப்படக்கூடிய மலையிலுள்ள ஹிரா என்னும் குகையில் இறங்கியது.



36) கேள்வி:முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து வஹியை கொண்டு வந்த வானவர் பெயர் என்ன?



ஜிப்ரயீல் (அலை)


37) கேள்வி:முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக இறங்கிய வஹி எது?


பதில்:அல்-குர்ஆனின் 96 வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள்


38) கேள்வி:நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் இரகசியமாக பிரச்சாரம் செய்தார்கள்?


பதில்: மூன்றாண்டுகள்.


39) கேள்வி:முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் வஹி இறங்க ஆரம்பித்தது?


பதில்: 40 ஆம் வயதில் வஹி இறங்க ஆரம்பித்தது.


40) கேள்வி:நபி ஸல் அவர்களையும் முஸ்லிம்களையும் எந்த பள்ளத்தாக்கில் மக்கா காஃபிர்கள்

அடித்து விட்டார்கள்.


பதில்:ஷுஅப் அபீதாலிப்


41) கேள்வி: முஸ்லிம்கள் பள்ளத்தாக்கில் எத்தனை வருடங்கள் இருந்தனர்?


பதில்:3 ஆண்டுகள் இருந்தார்கள்.


42) கேள்வி:நபித்துவம் பெற்ற பிறகு எந்த ஆண்டில் நபி ஸல் அவர்களின் மனைவி ஹதீஜா (ரலி) அவர்கள் வஃபாத்தானார்


பதில்: பத்தாவது ஆண்டில் ஹதீஜா (ரலி) அவர்கள் வஃபாத்தானார்.


43) கேள்வி: மிஃராஜ் பயணத்தில் நபி ஸல் அவர்கள் சவாரி செய்த 


வாகனத்தின் பெயர் என்ன?


பதில்:புராக் வாகனம்


44) கேள்வி:நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?


பதில்:ஜூதி மலையில் ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது.


45) கேள்வி:அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?


பதில்: முஹம்மது நபி (ஸல்) அவர்கள்


46) கேள்வி:நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?


பதில்: துவா பள்ளத்தாக்கு. இது தூர் என்ற மலையின்  அடிவாரத்தில் உள்ளது


47) கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?


பதில்: முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.


48) கேள்வி:எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறு:


பதில்: நூஹ் (அலை) அவர்களின் கப்பல் மற்றும் பிர்அவ்னின் உடல்


49) கேள்வி:குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரு பெண்மணி யார்?


பதில்: மர்யம் (அலை)


50) கேள்வி:ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யார்?


பதில்: பிர்அவ்னின் மனைவி & இம்ரானின் புதல்வி மர்யம் (அலை)









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக