புதன், 8 ஜனவரி, 2025

சோதனை மேல் சோதனை. (கதை)

 

கப்பல் ஒன்று கடலில் வழி தவறி செல்லும் போது பெரும் புயலில் சிக்கி மூழ்கியது... அதில் இருந்த ஒருவன் மட்டும் எப்படியோ தப்பினான்... !அருகிலுள்ள தீவில் அவன் கரை யேறினான்...!!


இறைவா…இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்து விடு....!!என வேண்டினான்.ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பேன்...?என் மனைவி மக்களை பார்க்க வேண்டாமா...??” என்று கண்ணீர் விட்டு பிரார்த்தனையும் செய்தான்...!!


எந்த உதவியும் அவனுக்கு கிடைக்க வில்லை...!!


இப்படியே சில நாட்கள் ஓடின...!!


தன்னை காத்துக் கொள்ள,தீவில் கிடைத்த பொருட்கள்,மற்றும் கப்பலின் உடைந்த பாகங்களை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டினான்....!!அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள்,மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப் படுத்தி தங்கியும் வந்தான்.....!!


இப்படியே நாட்கள் ஓடின...!!.


இவன் பிரார்த்தனையை மட்டும் விடவே இல்லை.கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை நம்பிக்கையோடுதேற்றிக் கொண்டான்.ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்று விட்டு திரும்புகையில்,அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.


பட்ட காலிலே படும் என்பது போல…எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது.


இவன் தங்குவதற் கென்று இருந்த ஒரே ஒரு குடிசையும் ,வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரை யாகியிருந்தன.அதை பார்த்த இவன் அலறித் துடித்தான்.எல்லாமும் போய்விட்டது.இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய் விட்டது.


“இறைவா… !என்னை காப்பாற்றும் படி தானே உன்னை மன்றாடினேன்.நீ என்ன வென்றால் இருப்பவற் றையும் பறித்துக் கொண்டாயே…!!இது தான் உன் நீதியோ…?”என்று கதறி அழுகிறான்.அப்போது ஒரு கப்பலின் பெரும் ஹாரன் சப்தம் இவனை எழுப்பியது.இவன் இருந்த தீவை நோக்கி அது வந்து கொண்டிருந்தது.


“அப்பாடா…நல்ல வேளை…ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம்.யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.”என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.கப்பல் சிப்பந்திகள் அவனை,லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள்.தான் இங்கே தனியாக தீவில் மாட்டிக் கொண்டிருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்டான்...!!


“தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…. !யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி,சிக்னல் கொடுக் கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்......!!அப்போது இவனுக்கு குடிசை எரிந்ததற்கான காரணம் இவனுக்கு புரிந்தது.


இறைவனுக்கு நன்றி சொன்னான்.


அந்த வழியில் கப்பல்கள் பெரும்பாலும் வருவதே மிக மிக அரிதான நிலையில்,குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் ,தன் நிலை என்னவாகி யிருக்கும் என்று அவனுக்கு அப்போது புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.


வாழ்க்கையில் பல சந்தர்ப்பங் களில் நாமும் இப்படித் தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டு விடுகிறோம்.ஒரு சில நேரங்களில் நம்மை காக்கவே இறைவன் ஒவ்வொரு கணமும் காத்திருக் கிறான்.அவன் தரும் சோதனைகள் அனைத்தும்,நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே ...!!"


சோதனை மேல் சோதனை என்றால்"..…இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்து விட்டது....!!என்றே அர்த்தம் !!!


வெகு விரைவிலே நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

மக்தப் மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக