வெள்ளி, 17 ஜனவரி, 2025

தீமை எதனால் விளைகின்றது.

 


ஒரு தடவை இறைநேசச் செல்வர் மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் இவர்களிடம் வந்து, "மக்களுக்கு எதனால் தீமை விளைகின்றது?” 

என்று வினவினர்.


 அதற்கு இவர்கள், "அவர்களின் உள்ளம் இறந்து விடுவதால்" என்று விடையிறுத்தார்கள்.


 "உள்ளம் இறந்து விடுவதென்றால் என்ன?" 


என்று அவர்கள் விளக்கம் கேட்க,. 


 "இவ்வுலக ஆசாபாசங்களில் மூழ்கி இருப்பது" என்று இவர்கள் பதிலிறுத்தார்கள்.


மேலும் இவர்கள் கூறுங்கால் "


மனிதன் செம்மறியாட்டிலிருந்து 

பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இடையனின் சப்தத்தைக் கேட்டதும் அது மேய்வதை விட்டொழித்து. 


 அவனின் குரலாடும் திசை நோக்கிக் குதித்தோடுகின்றது. ஆனால் மனிதனோ தன் மனோ இச்சைக்கு வழிப்பட்டு இறைவளின் ஆணைக்குக்  கூட மாறு செய்கிறான்" என்று எடுத்துரைத்தார்கள்..


பதிவு

திருப்பூர் K அமானுல்லாஹ்


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

சிந்திக்கத் தூண்டும் சிறு நிகழ்வுகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக