பக்கங்கள்

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

எனக்காக அழ யாரு இருக்கா (கதை)

 

ஒரு ஊர்ல ஒரு வெங்காயம்,ஒரு தக்காளி, ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.ஒரு நாள் அந்த மூணு பேரும்,கடலுக்கு குளிக்க போனாங்க.

சனி, 17 ஆகஸ்ட், 2024

நிக்காஹ் குத்பா.

خُطْبَةُ النِّكَاحِ


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


الْحَمْدُ لِلَّهُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعُلَمِينَ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ

وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ 

எங்கே எப்படி..!

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

எனது பெயர்......

எனது பெயர்......

திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள 25 நபிமார்களின் பெயர்களை குர்ஆனில் அல்லாஹ் எங்கே எப்படி கூறுகிறான் என்று கூற நாங்கள் வந்துள்ளோம். 

புதன், 14 ஆகஸ்ட், 2024

வா... அந்த பொம்மையை தேடலாம். (கதை)

 

பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி.


20 வயது இருக்கலாம் அவருக்கு. "ஏன் அழுகிறாய்.?" என்று கேட்டுத் தெரிந்தவர், மற்றவர்களைப் போல தாண்டிச் செல்லாமல், "வா.. அந்த பொம்மையைத் தேடலாம்.!" என்று சிறுமியையும் கூட்டிக் கொண்டு தேடினார்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

முதலில் தொழுகை.

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.


எனது பெயர்………..


முஸ்லிம்கள் எல்லாவற்றையும் விட  

தொழுகைக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும் அதுக்கு என்ன காரணம் என்று சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.


என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே…

நல்லா ஏமாந்தியா..(கதை)

 

"என்னை யாராலும் ஏமாற்ற முடியாது. யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யுங்கள், தோல்வியைத்தான் அடைவீர்கள்" என்று அந்த கடைத்தெருவில் ஒருவன் கத்திக் கொண்டிருந்தான்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

தூங்குவதின் ஒழுக்கங்கள்.

 


بسم الله الرحمن الرحيم

தூங்குவது பற்றிய ஒழுக்கங்கள்


1.உலக பேச்சுக்களின்றி சீக்கிரம் தூங்க முயற்சிக்க வேண்டும்.


2. உளுவுடன் தூங்குவது.

ஏற்றம் தரும் எட்டு விஷயங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

எனது பெயர்……….

அல்லாஹ்வின் நல்லடியார்களே…


நமது வாழ்வில் ஏற்றம் தரும் எட்டு விஷயத்தை சொல்வதற்கு நான் இங்கு வந்துள்ளேன்

சனி, 10 ஆகஸ்ட், 2024

அடுத்தவருக்கு நல்லது நினைத்தால் (கதை)

 

ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். 


ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

கழிப்பறை ஒழுக்கங்கள்.

 

மலம் ஜலம் கழிப்பதின் ஒழுக்கங்கள்.

1. கழிப்பிடத்திற்கு செல்வதற்கு முன் துஆ ஓத வேண்டும்.


2.இடது காலை முன் வைத்து உள்ளே நுழைய வேண்டும்.

குர்ஆன் ஷரீஃப் ஓதுவதன் ஒழுக்கங்கள்

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எனது பெயர்......

நான் இங்கு குர்ஆன் ஷரீஃப் ஓதுவதின் ஒழுக்கங்களை பற்றி பேச வந்துள்ளேன். 

என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே......

அருள்மறையாம் திருக்குர்ஆனை நாம் ஓதும்போது..


1.உடல் , உடை , இடம் இம்மூன்றும் இருக்க வேண்டும்.


2.உளூவுடன் இருக்க வேண்டும். 

உளூ இல்லாமல் குர் ஆனைத் தொட கூடாது.

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

சொர்க்கத்தின் பத்து முத்துக்கள்!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

எனது பெயர்..........

நான் பேச வந்திருக்கும் தலைப்பு.........

அண்ணல் நபிகள் நாதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழமைக்காக அல்லாஹு தஆலாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அருமை ஸஹாபாக்கள். 

சனி, 3 ஆகஸ்ட், 2024

ரொம்ப சிரிக்காத.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .


எனது பெயர்…….


நான் சிரிப்பைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். 


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே.


சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் அருளியுள்ள அற்புதமான செயல்தான் சிரிப்பு! 

10 உபதேசங்கள்.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எனது பெயர்...........

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே…

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ரத் முஆத் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு செய்த 10 உபதேசத்தை கூற நான் இங்கு வந்துள்ளேன். 

பாதையில் இவர்களை கண்டால்.

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.


ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.



நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது / எங்கள் ……….. ……… மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.


எனது பெயர் ................................................. 


நான் இங்கு .......................... தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.


அல்லாஹ்வின் நல்லடியார்களே…


நாம் வெளியே செல்லும் போது வீதியிலோ அல்லது வீட்டுக்கு அருகிலோ ஒரு திருமண வைபவத்தைக் கண்டால்; "இறைவா! இவர்கள் மீது அருள்புரிவாயாக! இவர்கள் இருவரையும் நன்மையில் சேர்த்து வைப்பாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


கர்ப்பிணிப் பெண்ணைக் கண்டால்; "இறைவா! இவருக்கு நல்ல சந்ததியைக் கொடுப்பாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


பெரும் பிரச்சினையில் மாட்டியிருப்பவர் குறித்து அறிந்தால்; "இறைவா! அவரது பிரச்சினையை லேசாக்குவாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


மருத்துவமனைவியிலிருந்து நலமுடன் திரும்பினால்; "இறைவா! எல்லா நோயாளிகளுக்கும் நிவாரணம் வழங்குவாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


அல்லாஹ்வின் நல்லடியார்களே..


அதுபோல வீட்டுக்குள் நுழையும்போது உணவு தயாராக இருக்குமெனில்; "இறைவா! எனக்கு உணவளித்தது போன்று வறியவர்களுக்கும் உணவளிப்பாயாக!'' என்று கேட்க வேண்டும்.


ஒரு ஜனாஸா உங்களைக் கடந்து செல்கிறது என்றால்; "இறைவா! இவருக்கு நீ கருணை புரிவாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


சிரமத்துடன் வேலை செய்யும் ஒருவரை வீதியில் கண்டால்; "இறைவா! இவரது பணியை எளிதாக்குவாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


உங்களது பிரார்த்தனைகள் உங்களுக்கே நன்மையாக அமையலாம்...


யாருக்குத் தெரியும்? சிலபோது...


இப்படி நாம் அடுத்தவர்களுக்கு செய்த துவாவின் காரணமாக ஒரு சோதனையிலிருந்து நீங்கள் விடுபடலாம். 


ஒரு நெருக்கடி அகன்றுவிடலாம். நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். தேடிய மன நிம்மதி கிடைக்கலாம்.


அல்லாஹ்வின் நல்லடியார்களே..


*இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம், தன் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிராத்திக்கும்போது துஆ செய்யும் போது , அதெற்கென நியமிக்கப்பட்ட வானவர், உனக்கும் அதைப் போன்று கிடைக்கட்டும் என்று நிச்சயம் கூறுவார்''. (முஸ்லிம்).* என நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். 




*வாருங்கள். பிரார்த்தனைகளை நன்மைகளாக திரும்பப் பெறுவோம்!...*