பக்கங்கள்

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

சொர்க்கத்தின் பத்து முத்துக்கள்!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

எனது பெயர்..........

நான் பேச வந்திருக்கும் தலைப்பு.........

அண்ணல் நபிகள் நாதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழமைக்காக அல்லாஹு தஆலாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அருமை ஸஹாபாக்கள். 

அவர்கள் அனைவருமே அல்லாஹ்வின் மன்னிப்பிற்கும் மகத்தான நற்கூலிக்கும் உரித்தானவர்கள் தாம் எனதிருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது. 

அல்லாஹ்வின் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் பெற்றவர்கள் அனைவருமே சொர்க்கவாசிகள் என்பதில் சந்தேகமில்லை. 

எனினும், உலகில் இவர்கள் சொர்க்கவாசி என்று தீர்ப்பு வழங்கிடும் அதிகாரம் யாருக்குமில்லை. ஆனால்,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹுதஆலாவின் கட்டளைப்படி பத்து ஸஹாபிகளை மட்டும் குறித்து சொர்க்கவாசிகள் எனக் கூறியுள்ளார்கள். 

நாமும் அவ்வாறே நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்புனிதர்களின் திருப்பெயர்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


இவ்வுலகத்தில் வாழும் போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சொர்க்கவாசிகள் என்று சுபச்செய்தி பெற்றுக் கொண்ட அந்த 10 பேர் பெயர் மற்றும் அவர்கள் எத்தனை வருடம் உயிர் வாழ்ந்தார்கள் எந்த வருடம் மரணித்தார்கள் என்பதை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.




1. ஹஸ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் 63 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் ஹிஜ்ரி 13.ல் வஃபாத் ஆனார்கள்.


2. ஹஸ்ரத் உமர்பின் கத்தாப் (ரலி) அவர்கள் 63 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் ஹிஜ்ரி 24.ல் வஃபாத் ஆனார்கள்.


3. ஹஸ்ரத் உஸ்மான் பின் அஃப்ஃபான் (ரலி) அவர்கள் 82 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் ஹிஜ்ரி 36.ல் வஃபாத் ஆனார்கள்.


4. ஹஸ்ரத் அலீபின் அபீதாலிப் (ரலி) அவர்கள் 63 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் ஹிஜ்ரி 40.ல் வஃபாத் ஆனார்கள்.


5. ஹஸ்ரத் தல்ஹாபின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் 64 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் ஹிஜ்ரி 36.ல் வஃபாத் ஆனார்கள்.


6. ஹஸ்ரத் ஜுபைர் பின் அவ்வாம் (ரலி) 64 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் ஹிஜ்ரி 36.ல் வஃபாத் ஆனார்கள்.


7. ஹஸ்ரத் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் 72 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் ஹிஜ்ரி 32.ல் வஃபாத் ஆனார்கள்.


8. ஹஸ்ரத் ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் 77 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் ஹிஜ்ரி 55.ல் வஃபாத் ஆனார்கள்.


9. ஹஸ்ரத் ஸயீது பின் ஜைத் (ரலி) அவர்கள் 73 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் ஹிஜ்ரி 51.ல் வஃபாத் ஆனார்கள் 


10. ஹஸ்ரத் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் 58 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் ஹிஜ்ரி 18.ல் வஃபாத் ஆனார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக