பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2024

பாதையில் இவர்களை கண்டால்.

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.


ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.



நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது / எங்கள் ……….. ……… மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.


எனது பெயர் ................................................. 


நான் இங்கு .......................... தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.


அல்லாஹ்வின் நல்லடியார்களே…


நாம் வெளியே செல்லும் போது வீதியிலோ அல்லது வீட்டுக்கு அருகிலோ ஒரு திருமண வைபவத்தைக் கண்டால்; "இறைவா! இவர்கள் மீது அருள்புரிவாயாக! இவர்கள் இருவரையும் நன்மையில் சேர்த்து வைப்பாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


கர்ப்பிணிப் பெண்ணைக் கண்டால்; "இறைவா! இவருக்கு நல்ல சந்ததியைக் கொடுப்பாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


பெரும் பிரச்சினையில் மாட்டியிருப்பவர் குறித்து அறிந்தால்; "இறைவா! அவரது பிரச்சினையை லேசாக்குவாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


மருத்துவமனைவியிலிருந்து நலமுடன் திரும்பினால்; "இறைவா! எல்லா நோயாளிகளுக்கும் நிவாரணம் வழங்குவாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


அல்லாஹ்வின் நல்லடியார்களே..


அதுபோல வீட்டுக்குள் நுழையும்போது உணவு தயாராக இருக்குமெனில்; "இறைவா! எனக்கு உணவளித்தது போன்று வறியவர்களுக்கும் உணவளிப்பாயாக!'' என்று கேட்க வேண்டும்.


ஒரு ஜனாஸா உங்களைக் கடந்து செல்கிறது என்றால்; "இறைவா! இவருக்கு நீ கருணை புரிவாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


சிரமத்துடன் வேலை செய்யும் ஒருவரை வீதியில் கண்டால்; "இறைவா! இவரது பணியை எளிதாக்குவாயாக!'' என்று துஆ கேட்க வேண்டும்.


உங்களது பிரார்த்தனைகள் உங்களுக்கே நன்மையாக அமையலாம்...


யாருக்குத் தெரியும்? சிலபோது...


இப்படி நாம் அடுத்தவர்களுக்கு செய்த துவாவின் காரணமாக ஒரு சோதனையிலிருந்து நீங்கள் விடுபடலாம். 


ஒரு நெருக்கடி அகன்றுவிடலாம். நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். தேடிய மன நிம்மதி கிடைக்கலாம்.


அல்லாஹ்வின் நல்லடியார்களே..


*இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம், தன் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிராத்திக்கும்போது துஆ செய்யும் போது , அதெற்கென நியமிக்கப்பட்ட வானவர், உனக்கும் அதைப் போன்று கிடைக்கட்டும் என்று நிச்சயம் கூறுவார்''. (முஸ்லிம்).* என நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். 




*வாருங்கள். பிரார்த்தனைகளை நன்மைகளாக திரும்பப் பெறுவோம்!...*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக