பக்கங்கள்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

ஆடம்பரம் ஆடும் பம்பரம்!


 ஆடம்பரம் என்பது நமக்கு நாமே

தேடிக் கொள்ளும் வறுமை! - சாக்ரடீஸ்

ஆடம்பரச் செலவு என்பது தரித்திரத்தை
விலை கொடுத்து வாங்குவது போல. - தந்தை பெரியார்

வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்க அதிகரிக்க ஒழுக்கம் மறையத் தொடங்கும். ஆகவே, ஆடம்பரம் ஆபத்து. எளிமையான வாழ்வே உண்மையான வாழ்வு. - ஜனாதிபதி அப்துல் கலாம்.

பணம் வந்ததும் குணத்தை மாற்றாதே!
பதவி வந்ததும் அதிகாரத்தைக் காட்டாதே!
ஆடம்பரம் வந்ததும் ஆணவத்துடன் ஆடாதே! ஏனெனில், இந்த உலகில் எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை.

அண்டை வீடு சண்டை வீடாகாமலிருக்க.

 

அண்டை வீடு சண்டை வீடாகாமலிருக்க

அன்றே அண்ணல் நபி நாயகம் ஸல் அவர்கள் நமக்கு

அறிவுறுத்திய  அழகிய 20 அறிவுரைகள்!

------------------------------------------------

01. அண்டை வீட்டார்

பொருளாதார உதவி நாடினால்,

அவருக்கு உதவிசெய்ய வேண்டும்.

 

02. அவர் ஆதரவை நாடினால்,

அவருக்கு துணை நிற்க வேண்டும்.

 

03. அவர் நோய்வாய்ப்பட்டால்,

நலம் விசாரிக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது இரு முனைகள் கொண்ட வாள்.

 

1.  ADULT என்பது  ஐந்து எழுத்துக்கள்

     அதே போல YOUTH என்பதும் ஐந்து எழுத்துக்கள்

 

2.  PERMANENT ஒன்பது எழுத்துக்கள்

     அதே போல TEMPORARY. என்பதும் ஒன்பது எழுத்துக்கள்

 

3.  GOOD என்பது நான்கு எழுத்துக்கள்

     அதே போல EVIL என்பதும் நான்கு எழுத்துக்கள்

 

4.  BLACK  என்பது ஐந்து எழுத்துக்கள்.

     அதே போல WHITE. என்பதும் ஐந்து எழுத்துக்கள்

 

6. LIFE என்பது நான்கு எழுத்துக்கள்

    அதே போல DEAD என்பதும் நான்கு எழுத்துக்கள்

துஆ ஏற்கப்படும் நேரங்கள்.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு துஆ ஏற்கப்படும் நேரங்கள் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

சவப்பெட்டி உணர்த்தும் பாடம் (கதை)


 ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே  நல்ல அறிவாளிகளாக இருந்தனர் .

 

         அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக் கொண்டான் .  இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் .

புதன், 21 பிப்ரவரி, 2024

பொறுமை வேண்டும்.

 


செய்யும் செயல்களிலும்
செய்யப்படும் முயற்சிகளிலும்
பொறுமை வேண்டும்.


வாழ்வில் வெற்றிக்கு
பொறுமை வேண்டும்.


தோல்வி கண்ட பின்பும்
பொறுமை வேண்டும்.


துன்பத்திலிருந்து மீள
துரோகியை கண்ட பின்பும்
பொறுமை வேண்டும்.

குரங்கு சேட்டை (கதை)

அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார்.

அவர் அந்த துறவியிடம், “சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார்.

“இந்த நாவல்பழம் சுவையாக உள்ளது. ( கதை )

 

முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். "இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்" என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.

மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். "ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்.. குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?” என்றனர் மற்றவர்கள்.

மூத்த சீடர். "குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

நான் சாதித்து விட்டேன். (கதை)


 " அன்று பெளர்ணமி.

இரவு நேரம்.

முல்லா வீதியில் நடந்து போய் கொண்டிருந்தார்.

வழியில் ஒரு கிணறு.

அனைவருக்கும் வருகிற ஆசை,
முல்லாவுக்கும் வந்தது.
உடனே
கிணற்றை எட்டிப்பார்த்தார்.

அதிர்ச்சியடைந்தார்.

'அடப்பாவமே !
நிலா,
வானத்திலிருந்து வழுக்கி கிணற்று நீரில் விழுந்து விட்டதே.

கழிவறை ஒழுங்குகள்

 


உலகில் எந்த மதமும், மார்க்கமும் சொல்லித் தராத
கழிவறை ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்


‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ‏


அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.

(அல்குர்ஆன் : 9:108)

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த கழிப்பறை ஒழுக்கங்கள் பல உள்ளன.

* கழிவறையில் நுழையும்போது முதலில் இடது காலை வைத்து நுழைய வேண்டும். கழிவறையில் இரு பாதங்கள் வைக்குமிடத்தில் முதலில் வலது காலை வைத்து உட்கார வேண்டும். எழுந்திருக்கும்போது இடது காலை எடுத்து வைத்து வர வேண்டும்.

(நூல்:இப்னு மாஜா)

அதிகமாக குர்ஆன் ஓதுவோம்

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு அதிகமாக குர்ஆன் ஓதுவோம் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகள்.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகள் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

 

நமது மன்னர் நபி ஸல் அவர்கள் நம் வாழ்வில் செய்யாதீர்கள் என்று சொன்ன விசயங்களை என்னவென்றால்...

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

நான் தான், பெரியவன் (கதை பகுதி )

 

ஒருவருக்கு  தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.

அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.

வியாழன், 15 பிப்ரவரி, 2024

25 நபிமார்களுடைய தந்தை பெயர்கள்

 


25 நபிமார்களுடைய தந்தைமார்களின் பெயர்கள் பின்வருமாறு.

1)
நபி ஆதம் (அலை)" இவர்கள் மனித குலத்தின் தந்தையாவார்.

2)
நபி இத்ரீஸ் (அலை) அவர்களின்
தந்தை யர்த்

3)
நபி நூஹ் (அலை) அவர்களின்
தந்தை லாமக்

4)
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின்
தந்தை தாறஃ

5)
நபி இஸ்மாயில் (அலை) அவர்களின்
தந்தை இப்ராஹீம் (அலை)

அல்லாஹ்விடம் உனது நிலை என்ன..?

 



அருளாளன் அல்லாஹ் உம்மை வைத்திருக்கும் இடமே உமது நிலையாகும்.

அல்லாஹ்விடம் உனது மதிப்பு என்ன என்பதை அறிய விரும்பினால்
அவன் எந்த நிலையில் உன்னை வைத்திருக்கிறான் என்று கவனித்துப் பார்
தெரிந்து கொள்ளலாம்.

1)
திக்ரில் உன்னை அவன் ஈடுபடுத்தினால்

உன்னை நினைக்க அவன் விரும்புகிறான்
என விளங்கிக்கொள்.

2)
குர்ஆன் ஓதுவதில் உன்னை அவன் பிசியாக்கினால்

உன்னிடம் பேச அவன் ஆசைப்படுகிறான் எனப் புரிந்து கொள்.

சில கேள்விகள் கேட்கலாமா ?

 ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள்என்றார்கள்.


1.
நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

·
நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

2.
மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?

·
தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3.
நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?

·
ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

புதன், 14 பிப்ரவரி, 2024

தொந்தி வியாதிக்கு தந்தி ! (உரையாடல்)

 


மாப்புள : அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்!

 

மச்சான் : அலைக்குமுஸ் ஸலாம் மாப்புள!

 

மாப்புள : மச்சான்? மாசமா இருக்கீங்களா? இல்ல... வவுத்துல தலைவாணி எதுவும் வச்சு கட்டி இருக்கீங்களா? வவுறு இம்மாம் பெரிசா இருக்கு!

 

மச்சான் : மாப்புள! என்ன கிண்டல் பண்றீயா, மச்சானோட வவுத்தப் பாத்து?

 

மாப்புள : வாய்லே கொழுப்பு இருந்தாலும் பரவாயில்ல

மச்சான்! எப்படியாவது ஒரு வழியா சமாளிச்சுறலாம்! ஆனா... வயித்துலே மட்டும் கொழுப்பு இருக்கவே கூடாது. அப்படி இருந்தா அதை அலட்சியமாவும் விட்டுறக்கூடாது!

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

பிரச்சனைகள்.

 


ஈராக் ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், அவரிடம் வந்து, “ எனக்குப் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. வீட்டில் பல பிரச்னைகள், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் எல்லா இடத்திலும் எனக்குப் பிரச்னைகள்தான். படுத்தால் என்னால் தூங்கவே முடியவில்லை. எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள்" என்றான்.

அதைக் கேட்ட அந்த ஞானி, “மாலையில் வா...என்றார்.